சைக்கிள் வாங்கப்போகிறீர்களா? அரசோட இந்த திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ரூ15 ஆயிரம் மிச்சம் செய்யலாம்..

எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கு டில்லி அரசு ரூ15 ஆயிரம் வரை மானியம் அறிவித்துள்ளது. இந்த மானியத்தைப் பெறுவது எப்படி? ஏன் மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது என முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்

சைக்கிள் வாங்கப்போகிறீர்களா? அரசோட இந்த திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ரூ15 ஆயிரம் மிச்சம் செய்யலாம்...

நாம் நாட்டின் தலைநகரம் டில்லி சமீபகாலமாக எதற்குப் பெயர் போனதோ இல்லையோ காற்று மாசுக்குப் பெயர் போன ஊராக மாறிவிட்டது. இங்கு காற்று மாசுவை குறைக்கப் பல வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இருந்தாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் காற்று மாசு உச்சத்தில் இருக்கும்.

சைக்கிள் வாங்கப்போகிறீர்களா? அரசோட இந்த திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ரூ15 ஆயிரம் மிச்சம் செய்யலாம்...

இந்நிலையில் டில்லியில் காற்று மாசுவை போக்க மற்றொரு புதிய ஐடியாவை அம்மாநில அரசு கையில் எடுத்துள்ளது. அம்மாநிலத்தில் எலெக்ட்ரிக் சைக்கிளை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் எலெக்ட்ரிக் சைக்கிள் வாங்குபவர்களுக்கு மானியத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு நபர் எலெக்ட்ரிக் சைக்கிளை வாங்கினால் அவருக்கு ரூ15 ஆயிரம் வரை மானியம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் வாங்கப்போகிறீர்களா? அரசோட இந்த திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ரூ15 ஆயிரம் மிச்சம் செய்யலாம்...

இந்த திட்டத்தின்படி பயணிகளுக்கான எலெக்டரிக் சைக்கிள் வாங்கினால் சைக்கிளின் விலையில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என்றும், மேலும் முதல் 1000 நபர்களுக்குக் கூடுதலாக ரூ2 ஆயிரம் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கார்கோ சைக்கிள் வாங்குபவர்களுக்கும் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் வாங்கப்போகிறீர்களா? அரசோட இந்த திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ரூ15 ஆயிரம் மிச்சம் செய்யலாம்...

கார்கோ சைக்கிளைப் பொருத்தவரை 33 சதவீத மானியம் வழங்கப்படும் அதுவும் ஒரு சைக்கிளுக்கு அதிகபட்சம் ரூ5,500 வரை மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே கார்கோ சைக்கிளை வாங்குபவர்கள் இதற்கு முன்னர் பெட்ரோல்/ டீசல் வாகனங்களைப் பயன்படுத்திவிட்டு அதிலிருந்து கார்கோ எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு மாற விரும்பினால் அவர்களுக்குக் கூடுதலாக ரூ3000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் வாங்கப்போகிறீர்களா? அரசோட இந்த திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ரூ15 ஆயிரம் மிச்சம் செய்யலாம்...

ஆனால் இந்த கூடுதல் ரூ3000 பெற வேண்டும் என்றால் ஏற்கனவே பயன்படுத்திய பெட்ரோல் அல்லது டீசல் வாகனத்தை ஸ்கிராப் செய்ய வேண்டும் அப்படியாக ஸ்கிராப் செய்தால் அந்த சான்றிதழை வைத்து ரூ3000 அதிகம் தரப்படும். அதே நேரத்தில் எந்த வாகனத்தை ஸ்கிராப் செய்தால் இது செல்லுபடியாகும் என்பதற்கான பட்டியல் ஒன்றும் டில்லி அரசு வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் வாங்கப்போகிறீர்களா? அரசோட இந்த திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ரூ15 ஆயிரம் மிச்சம் செய்யலாம்...

இந்த சலுகைகளை எல்லாம் பெற்றால் ஒரு நபர் எலெக்ட்ரிக் சைக்கிளை வாங்க விரும்பினால் அவருக்கு ரூ15 ஆயிரம் வரை மானியம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த மானியத்திற்கு எலெக்ட்ரிக் சைக்கிள் டீலர்கள் தான் அரசிடம் வாடிக்கையாளர்களிடம் உரிய ஆவணங்களைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விண்ணப்பிக்கப்பட்ட 7-10 வேலை நாட்களில் குறிப்பிட்ட வாடிக்கையாளரின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்குப் பணம் சென்றுவிடும்.

சைக்கிள் வாங்கப்போகிறீர்களா? அரசோட இந்த திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ரூ15 ஆயிரம் மிச்சம் செய்யலாம்...

மேலும் எந்தெந்த நிறுவனங்களின் எலெக்டரிக் சைக்கிள்கள் இந்த மானியம் பெறத் தகுதி பெற்றது என்பதை டில்லி அரசு இதற்கென பிரத்தியேகமாக ஒரு வெப்சைட் ஒன்றை உருவாக்கி அதை வெளியிடும் என அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாத் தெரிவித்துள்ளார். இந்த மானியம் டில்லியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் வாங்கப்போகிறீர்களா? அரசோட இந்த திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ரூ15 ஆயிரம் மிச்சம் செய்யலாம்...

எலெக்ட்ரிக் சைக்கிளைப் பொருத்தவரை இதற்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் இதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கிறது. சாதாரண சைக்கிளில் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டதே எலெக்ட்ரிக் சைக்கிள். இதில் உள்ள பேட்டரியின் மூலம் இந்த சைக்கிள் இயங்குகிறது. இந்த சைக்கிளில் உள்ள மற்றொரு பிளஸ் என்னவென்றால் இந்த சைக்கிளில் சார்ஜ் இல்லை என்றாலும் சாதாரண சைக்கிள் போல இயக்க முடியும்.

சைக்கிள் வாங்கப்போகிறீர்களா? அரசோட இந்த திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ரூ15 ஆயிரம் மிச்சம் செய்யலாம்...

இந்த சைக்கிள் ஸ்கூட்டரை போல இல்லாமல் மிகக் குறைவான மின்சாரத்தை மட்டுமே செலவு செய்து நீண்ட தூரம் பயணிக்க முடியும். ஆனால் இதன் வேகம் குறைவு தான். சாதாரண சைக்கிளைப் பயன்படுத்துவதற்கு மாறாக இந்த சைக்கிளை பயன்படுத்தலாம் அதே நேரத்தில் கார்கோ எலெக்டரிக் சைக்கிள் என்பது பொருட்களை வைத்துச் சுமந்து செல்லும் எலெக்ட்ரிக் சைக்கிள் இது சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் சிறு தொழில் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும். எலெக்ட்ரிக் சைக்கிளைப் பொருத்தவரை ரூ25 ஆயிரம் முதல் விற்பனையாகி வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rupees 15 thousand subsidies for electric cycles in Delhi know full details
Story first published: Thursday, May 26, 2022, 18:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X