அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா?

2.58 கோடி ரூபாய் மதிப்புடைய மெர்சிடிஸ் பென்ஸ் காரை இளைஞர் ஒருவர் ஹெலிகாப்டரில் இருந்து கீழே வீசி சுக்குநூறாக நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா?

வாழ்க்கையில் சொந்தமாக ஒரு காரை வாங்க வேண்டும் என இங்கே பலர் போராடி கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்த செய்தி நிச்சயமாக அதிர்ச்சி அளிப்பதாகதான் இருக்கும். ஏனெனில் மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை இளைஞர் ஒருவர் அழித்துள்ளார். அதுவும் மிகவும் வினோதமான முறையில், ஹெலிகாப்டரில் இருந்து காரை கீழே வீசி, அதனை சுக்குநூறாக்கியுள்ளார்.

அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா?

ஒரு சில ஆயிரங்கள் மதிப்புள்ள நமது சாதாரண செல்போனை நாம் உடைப்போமா? என்பதே சந்தேகம்தான். அப்படி இருக்கையில், மிகவும் விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை இந்த இளைஞர் அழித்துள்ளார். அத்துடன் அந்த நிகழ்வை வீடியோவாகவும் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா?

ரஷ்யாவை சேர்ந்த இகோர் மோரோஷ் என்ற இளைஞர்தான் ஹெலிகாப்டரில் இருந்து கீழே வீசி மெர்சிடிஸ் பென்ஸ் காரை சுக்குநூறாக்கியுள்ளார். இவர் இணையத்தில் தொடர்ச்சியாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருபவர். நம் எல்லோரையும் போல, இவரும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கு தீவிரமான ரசிகர்தான்.

அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா?

மெர்சிடிஸ் பென்ஸ் கார்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் இகோர் மோரோசும் ஒருவர். குறிப்பாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 (Mercedes AMG G63) கார் என்றால் இகோர் மோரோசுக்கு மிகவும் விருப்பம். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக கார் ஆகும்.

அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா?

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 காரை வாங்க வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கிறது. இகோர் மோரோசுக்கும் கூட அந்த கனவு இருந்தது. எனவே கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 காரை இகோர் மோரோஷ் வாங்கினார். ஆனால் இகோர் மோரோஷ் ஆசை ஆசையாய் வாங்கிய மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 காரில் ஏகப்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா?

மகிழ்ச்சியாக டிரைவ் செய்ய வேண்டும் என்பதற்காகவே மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 காரை இகோர் மோரோஷ் வாங்கினார். ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பெரும்பாலான நேரம் அந்த கார் கராஜில்தான் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சில பாகங்கள் வாரண்டி பீரியட்டில் இருந்தும் கூட சில சமயங்களில் டீலர்கள் பழுது பார்க்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா?

இதனால் இகோர் மோரோஷ் வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டார். அதிருப்தியடைந்த அவர் தனது காரை அழித்து விட முடிவு செய்தார். இதன்படி 1,000 அடி உயரத்தில் இருந்து கீழே வீசி அவர் காரை அழித்துள்ளார். காரை அழிப்பதற்காக அவர் ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளார். இந்த நிகழ்வினை அவர் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார்.

அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா?

யூ-டியூப்பில் இந்த வீடியோ 5 லட்சம் முறைகளுக்கும் மேல் பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் இகோர் மோரோஷ் ஹெலிகாப்டரில் இருந்து காரை கீழே வீசி அழித்ததற்கு மற்றொரு பரபரப்பான காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது இகோர் மோரோஷின் காரில் எந்தவிதமான பிரச்னைகளும் இல்லையாம்.

அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா?

எனினும் உயரமான இடத்தில் இருந்து கீழே வீசி காரை அழிப்பது குறித்து தனது நண்பர் ஒருவருடன் இகோர் மோரோஷ் ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்காகதான் அவர் காரை அழித்துள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்ய போலீசார் தற்போது தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.

அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா?

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 கார் இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 4.0 லிட்டர் bi-turbo வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 585 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கி சீறிப்பாய்ந்து செல்ல கூடிய வல்லமை மிக்கது.

அதிர்ச்சி... 2.5 கோடி ரூபாய் காரை ஹெலிகாப்டரில் இருந்து வீசி சுக்குநூறாக்கிய இளைஞர்... ஏன் தெரியுமா?

இந்த காரின் புதிய வெர்ஷன் 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் ஏஎம்ஜி ஸ்பீடுஷிப்ஃட் டிரான்ஸ்மிஷனை பெற்றுள்ளது. இது நான்கு சக்கரங்களுக்கும் பவரை அனுப்புகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டி விடும் திறன் மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 எஸ்யூவி காருக்கு உள்ளது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜி63 காரின் விலை சுமார் 2.58 கோடி ரூபாய். இது புது டெல்லி ஆன் ரோடு விலையாகும். இவ்வளவு விலை உயர்ந்த ஒரு காரைதான் இகோர் மோரோஷ் ஹெலிகாப்டரில் இருந்து கீழே வீசி அழித்துள்ளார். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்

ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. இந்தியாவிலும் கூட இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சமீபத்தில் இளைஞர் ஒருவர் டிக் டாக் வீடியோவுக்காக பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்

சமூக வலை தளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்கு, இளைஞர்கள் பலர் வித்தைகளைக் காட்டியவாறு வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக்கி வருகின்றனர். இத்தகைய இளைஞர்களைக் கவருகின்ற வகையிலான செல்ஃபோன் மென்பொருள்கள் அண்மைக் காலங்களாக அதிகம் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு, அறிமுகம் செய்யப்பட்ட செயலிதான் டிக்டாக்.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்

இந்த மென்பொருள், இளைஞர்களின் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் வகையில் பின்னணியில் இசை அல்லது வசனத்தை ஒலிக்க செய்து, அவர்களின் அசைவுகளை பதிவு செய்யும். மேலும், அவர் மட்டுமின்றி அந்த வீடியோவை உலகமே பார்க்கும் வகையில் வைரலாக்கும். இதனால், தற்போதைய இளம் சந்ததியினர் பேஸ்புக், வாட்ஸ்ஆப், டுவிட்டர் இவற்றிற்கு அடுத்தபடியாக டிக்டாக் செயலியையும் பயன்படுத்தி வருகின்றனர்.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்

மேலும், உலகளவில் டிரெண்டாக வேண்டும் என்பதற்காக, சில வீடியோக்களை அவர்கள் வெளியிடுகின்றனர். அவ்வாறு, வெளியிடும் வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தாத வரை அவர்களுக்கு நல்லதுதான். மாறாக, விதிகளை மீறும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டால், அதற்கான பலனை அவர்கள் அடைந்தே தீருவார்கள்.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்

இதனை உறுதிப்படுத்தும் வகையில், குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் ஓர் சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஓர் இளைஞர், டிக்டாக் வீடியோவில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, அவரது ஜீப்பை பொது சாலையின் மையப் பகுதியில் வைத்து தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்

இச்சம்பவம், ராஜ்கோட் பகுதியில் உள்ள பிரபல கோத்தாரியா சாலையில் அரங்கேறியிருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், அதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. வீடியோவில், ஜீப்பின் முன்பக்கம் சாதரணமாக நின்றுக் கொண்டிருந்த ஓர் இளைஞர், அதன்மீது தீக்குச்சியை வீசுகின்றார். உடனே, அந்த கார் மளமளவென பற்றிய எரிய ஆரம்பிக்கின்றது. இதற்கு முன்னதாக அந்த கார் மீது, அவர் எரிபொருள் ஊற்றியிருந்தார். இதன்காரணமாகவே, அந்த கார் மளமளவென தீ பற்றியெரிந்தது.

இச்சம்பவம் குறித்து அறிந்த வந்த போலீஸார், அந்த இளைஞரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அதேசமயம், சம்பவம் தீயணைப்பு துறை நிலையத்திற்கு முன்னதாகவே நடைபெற்றதால், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்

இச்சம்பவத்தை அரங்கேற்றியவர் அதே பகுதியைச் சேர்ந்த இந்திரஜித் ஜடேஜா என்பது தெரியவந்துள்ளது. இவர், ஜீப்பை எரித்த வீடியோவை, அவரது சொந்த டிக் டாக் கணக்கில் பதிவிட்டாரா அல்லது வேறு யாரேனும் கணக்கில் பதிவிட்டாரா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. ஆனால், அவர் காரை கொளுத்திவிட்டு நேராக கேமிராவை நோக்கி வருவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ள இந்திரஜித்துக்கு புதுவிதமான தண்டனை வழங்கப்படும் என ராஜ்கோட் பகுதி காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்

இதனிடையே தீயிடப்பட்ட ஜீப் பல்வேறு மாற்றங்களைப் பெற்றதாக காட்சியளிக்கின்றது. அந்த வகையில், பெரியளவிலான சக்கரங்கள், கூடுதல் அணிகலன்கள் உள்ளிட்டவை காட்சியளிக்கின்றன. ஆகையால், இந்த ஜீப் சாலையில் செல்லும் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கின்றது.

சொந்த செலவில் சூன்யம்: டிக் டாக் வீடியோவுக்காக பல லட்சம் மதிப்புள்ள ஜீப்பை நடுரோட்டில் எரித்த இளைஞர்

இந்திரஜித் மேற்கொண்டிருக்கும் இச்செயலை பொது சாலைகளில் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானதாகும். இதுபோன்ற செயல் பல நேரங்களில் பெரும் ஆபத்தை விளைவிக்கலாம். ஆகையால், பொதுவெளியில் இத்தகைய செயலில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. அதேசமயம், இச்சம்பவத்தில் வேறெந்த வாகனத்திற்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை. ஆகையால், பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

ஒரு சில இளைஞர்களுக்கு கார்கள் என்றால் விளையாட்டாக போய் விட்டது. மேலே நாம் படித்த இரு சம்பவங்களும் அதற்கு ஒரு உதாரணம் மட்டுமே. ஆனால் இதை விட அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று கடந்த சில மாதங்களுக்கு முன் ஹரியானாவில் நடைபெற்றது. தந்தை பரிசாக வழங்கிய விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை இளைஞர் ஒருவர் வேண்டுமென்றே ஆற்றில் தள்ளி விட்டார்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சியில் உறைந்து விடுவீர்கள். இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

குழந்தைகளை அதட்டி வளர்த்த காலம் எப்போதோ மலையேறி விட்டது. அவர்களுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கும் காலம் வந்து விட்டது. தங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று கூட பெற்றோர்கள் நினைக்க தொடங்கி விட்டனர். இதனை தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக பெற்றோர்கள் கருதுகின்றனர்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

அதன் விளைவுதான் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம். இளைஞர் ஒருவர் மிகவும் விலை உயர்ந்த புத்தம் புதிய ஹை எண்ட் பிஎம்டபிள்யூ காரை வேண்டுமென்றே ஆற்றில் தள்ளி விட்டுள்ளார். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால், அந்த காரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

ஹரியானா மாநிலம் யமுனா நகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் இப்படி ஒரு விபரீத சம்பவத்தை செய்துள்ளார்.இது தொடர்பான விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த புத்தம் புதிய ஹை எண்ட் பிஎம்டபிள்யூ காரை அந்த இளைஞரின் பெற்றோர் வெகு சமீபத்தில்தான் அவருக்கு பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால் அந்த இளைஞருக்கு பிஎம்டபிள்யூ கார் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என கூறப்படுகிறது.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

அதற்கு பதில் எனக்கு ஜாகுவார் கார்தான் வேண்டும் என அந்த இளைஞர் தனது பெற்றோரிடம் அடம் பிடித்து வந்துள்ளார். எனினும் ஜாகுவார் காருக்கு பதிலாக அவரது பெற்றோர் பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கி விட்டனர். இந்த ஆத்திரத்தில்தான் புத்தம் புதிய கார் என்றும் கூட பார்க்காமல், அந்த இளைஞர் காரை வேண்டுமென்றே ஆற்றில் தள்ளியுள்ளார்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

முன்னதாக புற்கள் மிகவும் உயரமாக வளர்ந்திருந்ததால், ஆற்றின் நடுவே கார் சிக்கி கொண்டது. அதன்பின் அந்த இளைஞர் என்ன நினைத்தாரோ? தெரியவில்லை. உடனடியாக காரை மீண்டும் ஆற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அங்கு இருந்த நன்கு நீச்சல் தெரிந்த சிலரையும் அவர் உதவிக்கு அழைத்து கொண்டார்.

தந்தை பரிசளித்த விலை உயர்ந்த BMW காரை ஆற்றில் தள்ளிய மகன்... ஏன் என தெரிந்தால் அதிர்ந்து விடுவீர்கள்

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட இளைஞர் காரை ஆற்றில் தள்ளியபோது, வீடியோ எடுத்துள்ளார். அத்துடன் அதனை சமூக வலை தளங்களிலும் பகிர்ந்துள்ளார்'' என்றனர். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவியது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நபர்களின் நடவடிக்கைகள் எத்தகையது? என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Russian Youngster Drops His Mercedes AMG G63 SUV From Helicopter. Viral Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X