Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொது சாலையில் போர்ஷே காரை ஓட்டி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க...
போர்ஷே காரை பொது சாலையில் ஓட்டி வந்தபோது, சச்சின் டெண்டுல்கர் கேமரா கண்களில் சிக்கியுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மிகவும் விலை உயர்ந்த கார்களை ஓட்டுவதை விரும்ப கூடியவர் என்பது நம் அனைவருக்குமே தெரியும். பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக இருப்பதால், அவரது கராஜில் ஏராளமான பிஎம்டபிள்யூ கார்கள் இருக்கின்றன. அதே சமயம் மற்ற நிறுவனங்களின் ஒரு சில கார்களையும் சச்சின் வைத்துள்ளார்.

இதில், நிஸான் ஜிடி-ஆர் மற்றும் ஃபெராரி 360 மொடினா உள்ளிட்ட கார்கள் குறிப்பிடத்தகுந்தவை. இந்த சூழலில் போர்ஷே 911 டர்போ எஸ் காரை ஓட்டும்போது முதல் முறையாக கேமரா கண்களில் சச்சின் டெண்டுல்கர் சிக்கியுள்ளார். சச்சின் டெண்டுல்கரிடம் போர்ஷே கார் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.

வார இறுதி நாட்களில் பெர்ஃபார்மென்ஸ் கார்களை ஓட்டுவது சச்சின் டெண்டுல்கருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். இந்த வரிசையில் மும்பையில் சமீபத்தில் போர்ஷே 911 டர்போ எஸ் காரை சச்சின் டெண்டுல்கர் ஓட்டியுள்ளார். இது தொடர்பான காணொளியை CS 12 Vlogs யூ-டியூப்பில் வெளியிட்டுள்ளது. இந்த காணொளியில் சச்சின் டெண்டுல்கரின் முகம் சரியாக தெரியவில்லை.

என்றாலும் பதிவு எண் எஸ்ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமானது. இது சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி சச்சின் டெண்டுல்கருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும். பழைய போர்ஷே 911 டர்போ எஸ் காரை சச்சின் டெண்டுல்கர் ஓட்டியுள்ளார். இந்த கார் கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்படுள்ளது.

இது வழக்கமான போர்ஷே 911 கார் கிடையாது. டர்போ எஸ் வேரியண்ட் இன்னும் சக்தி வாய்ந்தது. இதன் இன்ஜின் 560 பிஎஸ் பவரை வாரி வழங்க கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 3.1 வினாடிகளில் எட்டி விடும். சச்சின் டெண்டுல்கரிடம் உள்ள சிறப்பான பெர்ஃபார்மென்ஸ் கார்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டபடி சச்சின் டெண்டுல்கரிடம் ஏராளமான சொகுசு கார்கள் இருக்கின்றன. இதில், பெரும்பாலானவை பிஎம்டபிள்யூ நிறுவனத்தை சேர்ந்தவை. சச்சின் டெண்டுல்கரிடம் உள்ள பிஎம்டபிள்யூ கார்களில் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் எல்ஐ, பிஎம்டபிள்யூ எக்ஸ்5எம், பிஎம்டபிள்யூ ஐ8 மற்றும் பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்தவை.

பிஎம்டபிள்யூ கார்களை சச்சின் டெண்டுல்கர் எவ்வளவு நேசிக்கிறார்? என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக மாறுவதற்கு முன்பே தனிப்பட்ட முறையில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5எம் காரை அவர் இறக்குமதி செய்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கரை போலவே கிரிக்கெட் வீரர்கள் பலரும் விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளனர். இதில், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோஹ்லி, முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் டோனி உள்ளிட்டவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். குறிப்பாக மஹேந்திர சிங் டோனி அரிய வாகனங்கள் பலவற்றை சேகரித்து வைத்துள்ளார்.