சச்சின் டெண்டுல்கர் ஓட்டிய விண்டேஜ் காரின் வயது இதுதான்... வைரலாக பரவும் வீடியோ...

லண்டன் நகரில் சச்சின் டெண்டுல்கர் விண்டேஜ் கார் ஒன்றை ஓட்டும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சச்சின் பற்றி உங்களுக்கு தெரியாத அரிய தகவல்... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணிக்காக அவர் படைத்த சாதனைகள் ஏராளம். கிரிக்கெட் மட்டுமல்லாது கார்கள் மீதும் சச்சின் டெண்டுல்கர் அதிக ஆர்வம் கொண்டவர். சச்சின் ஒரு முறை ஃபெராரி 360 மோடெனா காரை வைத்திருந்தார்.

சச்சின் பற்றி உங்களுக்கு தெரியாத அரிய தகவல்... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

இது பியட் நிறுவனம் சச்சின் டெண்டுல்கருக்கு பரிசாக வழங்கிய கார் ஆகும். பிரபல கார் பந்தய வீரரான மைக்கேல் சூமேக்கர் தன் கைகளால் இந்த காரை சச்சின் டெண்டுல்கருக்கு பரிசாக வழங்கினார். ஆனால் பின்நாட்களில் சச்சின் டெண்டுல்கர் இந்த காரை விற்பனை செய்து விட்டார். இருந்தபோதும் சச்சின் டெண்டுல்கரிடம் தற்போதும் பல்வேறு விலை உயர்ந்த கார்கள் உள்ளன.

சச்சின் பற்றி உங்களுக்கு தெரியாத அரிய தகவல்... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

குறிப்பாக பல்வேறு பிஎம்டபிள்யூ கார்களை சச்சின் டெண்டுல்கர் வைத்துள்ளார். இதில், பிஎம்டபிள்யூ ஐ8, பிஎம்டபிள்யூ எக்ஸ்6எம், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ், பிஎம்டபிள்யூ 5-சீரிஸ், பிஎம்டபிள்யூ எம்5 மற்றும் பிஎம்டபிள்யூ எம்3 ஆகியவை குறிப்பிடத்தகுந்த கார்கள் ஆகும். பிஎம்டபிள்யூ கார்களுக்கு சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய ரசிகர் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

சச்சின் பற்றி உங்களுக்கு தெரியாத அரிய தகவல்... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

அதுமட்டுமல்லாது பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடரும் சச்சின் டெண்டுல்கர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சச்சின் ஓய்வு பெற்று விட்டாலும் கூட, வர்ணனையாளராக தொடர்ந்து கிரிக்கெட்டிற்கு தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். தற்போது 2019 ஐசிசி உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

சச்சின் பற்றி உங்களுக்கு தெரியாத அரிய தகவல்... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

எனவே போட்டிகளை வர்ணனை செய்வதற்காக சச்சின் தற்போது இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு இருந்தபடி போட்டிகள் தொடர்பான தனது விமர்சனங்களையும் சச்சின் டெண்டுல்கர் முன்வைத்து வருகிறார். இந்த சூழலில் லண்டன் நகர சாலைகளில் விண்டேஜ் கார் ஒன்றை சச்சின் டெண்டுல்கர் ஓட்டியுள்ளார்.

சச்சின் பற்றி உங்களுக்கு தெரியாத அரிய தகவல்... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

அப்போது அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கரும் உடன் பயணித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஓட்டிய காரில் ஏராளமான ஆச்சரியங்கள் பொதிந்துள்ளன. அவர் ஓட்டிய காருக்கு வயது 119. லண்டன் சாலைகளில் சச்சின் டெண்டுல்கர் ஓட்டியது 1900 மாடல் டெய்ம்லர் கார் ஆகும். 1900 மாடல் டெய்ம்லர் கார்களில் ஒன்றை வேல்ஸ் இளவரசரும் கூட சொந்தமாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சச்சின் பற்றி உங்களுக்கு தெரியாத அரிய தகவல்... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

அந்த சமயத்தில் வேல்ஸ் இளவரசராக இருந்தவர் ஆல்பர்ட் எட்வர்டு. இந்த காரில் 1,526 சிசி ட்வின் சிலிண்டர் அலுமினியம் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 24 மைல்கள் வேகத்தில் செல்லும் திறன் இதற்கு உண்டு. கிலோ மீட்டர்களில் கணக்கிட்டால், மணிக்கு அதிகபட்சமாக 38.62 கிலோ மீட்டர்கள். ட்யூயல் இக்னிஷனை பெற்றிருப்பது இந்த காரின் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

சச்சின் பற்றி உங்களுக்கு தெரியாத அரிய தகவல்... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

இந்த காரின் முந்தைய மாடல்கள் Tiller ஸ்டியரிங்கைதான் பெற்றிருந்தன. ஆனால் இந்த கார் வழக்கமான ஸ்டியரிங் வீலை பெற்றுள்ளது. ஆக்ஸலரேட்டர் பெடல் கால்களால் இயக்கும் வகையில்தான் உள்ளது. சச்சின் டெண்டுல்கர் இந்த காரை ஓட்டியபோது அவருடன் பயணித்த ஒருவர், சச்சின் டெண்டுல்கருக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.

சச்சின் பற்றி உங்களுக்கு தெரியாத அரிய தகவல்... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

இந்த காரின் கியர் லிவர்கள் மற்றும் சிக்கலான பார்ட்ஸ்களை எப்படி இயக்க வேண்டும் என்பது தொடர்பாக அவர் சச்சின் டெண்டுல்கருக்கு வழிகாட்டினார். தற்போது நாம் பயன்படுத்தி கொண்டிப்பதுடன் ஒப்பிடுகையில், 1910ம் ஆண்டுக்கு முந்தைய ஆட்டோமொபைல்கள் முற்றிலும் வித்தியாசமானவை. அவற்றின் டிசைன், இன்ஜினியரிங் என எல்லாமே வேறு மாதிரியாகதான் இருந்தது.

சச்சின் பற்றி உங்களுக்கு தெரியாத அரிய தகவல்... என்னவென்று தெரிந்தால் பாராட்டாமல் இருக்க மாட்டீர்கள்

சச்சின் டெண்டுல்கர் இந்த அரிய காரை ஓட்டியதுடன் மட்டுமல்லாமல், லண்டன் நகரில் உள்ள ராயல் ஆட்டோமொபைல் கிளப்பிற்கும் விசிட் அடித்தார். இதனிடையே சச்சின் டெண்டுல்கர் இந்த அரிய காரை ஓட்டிய வீடியோ, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

சச்சின் டெண்டுல்கரிடம் தற்போது விலை உயர்ந்த பல்வேறு கார்கள் இருந்தாலும், பழைய மாருதி 800 கார் ஒன்று இன்னமும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாருதி 800 கார்தான் சச்சின் டெண்டுல்கர் வாங்கிய முதல் கார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வந்த பாதையை மறக்காமல் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் இந்த குணம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்த குணம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றும் கூட.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sachin Tendulkar Drove 1900 Model Daimler Car In London : Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X