சரித்திர நாயகன் சச்சின் டெண்டுல்கரின் கார்கள் பற்றிய சுவையான தொகுப்பு

சாதனைகளுக்காகவே பிறந்த கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். தனது வாழ்நாளில் பெரும் பகுதியை இந்திய கிரிக்கெட் அணியுடன் பங்கு போட்டுக்கொண்ட சச்சினுக்கு சிக்ஸர் அடிப்பது போன்றே, கார்களை ஓட்டுவதிலும் கில்லி.

கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நேரங்களில் நானே கார் கழுவுவேன் என்று அவர் கூறியிருந்தது நினைவிருக்கலாம். இதிலிருந்து அவருக்கு கார்கள் மீது இருக்கும் பிரியம் புலப்படும். சிறு வயதிலிருந்தே பிஎம்டபிள்யூ பிராண்டு மீது பிரியம் கொண்ட சச்சின் டெண்டுல்கரிடம் ஏராளமான கார்கள் இருக்கின்றன. அந்த கார்களின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

 மாருதி 800

மாருதி 800

அனைத்து பிரபலங்களிடம் உங்களது முதல் கார் எது என்று கேட்டால் மாருதி-800 என சட்டென பதில் வரும். சச்சினுக்கும் முதல் கார் மாருதி-800தான்.

பென்ஸ் இ கிளாஸ்

பென்ஸ் இ கிளாஸ்

அதிக இடவசதி கொண்ட சொகுசு கார் ஒன்றை குடும்பத்திற்காக வாங்க வேண்டும் என்பது அவரது விருப்பம். அதனை பூர்த்தி செய்யும் விதமாக மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் காரை வாங்கினார்.

 பிஎம்டபிள்யூ மீது பிரியம்

பிஎம்டபிள்யூ மீது பிரியம்

பிஎம்டபிள்யூ பிராண்டு மீது தீராத மோகம் கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் கொஞ்சம் பிரபலமடைந்தவுடன் யூஸ்டு பிஎம்டபிள்யூ காரை வாங்கினார். இதைத்தொடர்ந்து, சச்சின் கேரேஜில் எந்த கார் மாடல் இருக்கிறதோ இல்லையோ, பிஎம்டபிள்யூ கார்கள் நிற்கும்.

பிஎம்டபிள்யூ கார்கள்

பிஎம்டபிள்யூ கார்கள்

சச்சினிடம் பிஎம்டபிள்யூ 5 சீரீஸ், எம்5 ஆகிய கார்கள் இருக்கின்றன. குடும்பத்துடன் விழாக்களுக்கு செல்வதற்கு இந்த கார்களில் ஒன்றை பயன்படுத்துவார்.

 ஃபெராரி ஆசை

ஃபெராரி ஆசை

சச்சினுக்கு வேகமாக கார் ஓட்டுவதில் அதீத மோகம் கொண்டவர். அதுவும் ஃபெராரி கார்கள் மீது தீராத தாகம் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2002ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் அதிக சதங்கள்(29 சதங்கள்) சாதனையை டெண்டு்ல்கர் முறியடித்ததற்காக ஃபெராரி நிறுவனம் அந்த காரை பரிசாக வழங்கியது.

ஃபெராரிக்கு குட்பை

ஃபெராரிக்கு குட்பை

கடந்த 2011ம் ஆண்டில் தனது ஃபெராரி மடோனா காரை சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு சச்சின் விற்றுவிட்டார். ஆனால், சூப்பர் கார் இல்லையென்றால் சச்சினுக்கு கை நமநம என்றிருக்கும் அல்லவா. அதற்குத்தான் புதிய ஸ்போர்ட்ஸ் காரை இறக்குமதி செய்து வாங்கினார்.

நிசான் ஜிடிஆர்

நிசான் ஜிடிஆர்

ஃபெராரி காரை விற்பனை செய்துவிட்டு 2011ல் நிசான் ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் காரை சச்சின் வாங்கினார். துபாயில் வைத்து இந்த கார் வலதுபக்க டிரைவிங் கொண்டதாக மாற்றப்பட்டது

நிசான் ஜிடிஆர்

நிசான் ஜிடிஆர்

இந்த காரை இந்தியாவில் இறக்குமதியான பின்னர் நிசான் எஞ்சினியர்கள் வந்து காரை பற்றிய விபரங்களை சச்சினுக்கு கற்றுக் கொடுத்ததுடன், எஞ்சினில் சில மாற்றங்களையும் செய்து கொடுத்தனர்.

பிஎம்டபிள்யூவின் விளம்பர தூதர்

பிஎம்டபிள்யூவின் விளம்பர தூதர்

கடந்த ஆண்டு புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரை சச்சின் டெண்டுல்கர்தான் அறிமுகம் செய்தார். அத்தோடு, இந்த காரின் விளம்பர தூதராகவும் நியமிக்கப்பட்டார்.

ஃபார்முலா-1 கார்கள்

ஃபார்முலா-1 கார்கள்

அதிவேகத்தில் கார் ஓட்டுவது மட்டுமல்ல, அதிவேகத்தில் செல்லும் பார்முலா-1 கார்கள் மீது சச்சினுக்கு பெரிய ஈர்ப்பு உண்டு. எந்தளவு நேரம் நெருக்கடியாக இருந்தாலும், பார்முலா-1 போட்டிகளை காண தவறமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

சச்சினுடன் பிரிக்க முடியாதது

சச்சினுடன் பிரிக்க முடியாதது

சச்சினுக்கும் 10ம் எண்ணுக்கும் உள்ள தொடர்பை கீழே காணலாம்.

Sachin Jersey no is 10

Birthday- 24/April =2+4+4=10

Height 5ft 5 in= 5+5=10

World cup winning date 2/4/2011= 2+4+2+0+1+1=10

World cup after 28 years= 2+8=10

Truly 10dulkar.

மும்பை-புனே ஹைவே

மும்பை-புனே ஹைவே

ஓய்வு நேரங்களில் மும்பை-புனே நெடுஞ்சாலையில் தனது நிசான் ஜிடிஆர் காரில் ஓர் அதிவேக ரவுண்டு போவது சச்சினுக்கு பிடித்த ஹாபியாம்.

'இனிப்பு' செய்தி

'இனிப்பு' செய்தி

இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஆனால், 45 வயது வரை கிரிக்கெட் ஆடுவேன் என்று சச்சின் கூறியிருக்கிறார். அவரது சாதனைகள் தொடர்ந்து, இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துவோம்.

Most Read Articles
English summary
Today April 24, Indian cricketer sachin tendulkar celebrating his 40th Birthday. Sachin Tendulkar's love for car as been long documented. He has recently stated that he used to wash and wax his cars himself. What Sachin likes most in a car is speedand acceleration
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X