தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!

மிகப்பெரிய கார் காதலராக வலம் வந்துக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர்களில் சச்சினும் ஒருவர். இதை உறுதிப்படுத்தும் வகையிலும், தான் சிறந்த கார் ரசனைக் கொண்ட நபர் என்பதை வெளிக்காட்டும் வகையிலும் அவர் ஓர் தரமான சம்பவத்தை செய்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான சச்சின் டெண்டுல்கர் இடத்தில் அதிகளவில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதேபோல் அவரிடத்தில் போர்ஷே நிறுவனத்தின் சொகுசு கார்கள் சிலவும் பயன்பாட்டில் உள்ளன. அந்தவகையில், அவரிடத்தில் போர்ஷே 911 992 டர்போ எஸ் (Porsche 911 992 Turbo S) எனும் சூப்பரான ஸ்போர்ட்ஸ் வகை கார் ஒன்று அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த காரையே விலையுயர்ந்த அலங்கார கிட் வாயிலாக சச்சின் டெண்டுல்கர் அழகுப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அழகுப்படுத்தப்பட்ட காரிலேயே அவர் முதல் முறையாக பயணிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியிருக்கின்றது. இந்த கார் ஒரிஜினல் வெர்ஷனைக் காட்டிலும் அதிக கவர்ச்சியானதாகக் காட்சயளிக்கின்றது. இந்த புதிய தோற்றத்திற்கு டெக்ஆர்ட் கிட்-தான் காரணம். இந்த கிட்டின் வாயிலாகவே போர்ஷே 911 992 டர்போ எஸ் கார் அழகோவியமாக மாற்றப்பட்டிருக்கின்றது. ஸ்பாய்லர், டிஃப்யூஸர், அலாய் வீல்கள், இருக்கைகளுக்கான லெதர் போர்வை மற்றும் சில மெக்கானிக்கல் அப்டேட் ஆகியவையே இந்த டெக்ஆர்ட் கிட் வாயிலாக வழங்கப்படுகின்றது.

தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!

இவை அனைத்தும் காரின் அழகை கூட்ட மட்டுமல்ல பவரை அதிகரிக்கச் செய்யவும் உதவும். இதனால்தான் சச்சின் டெண்டுல்கர் இந்த பிரத்யேக கிட் வாயிலாக தன்னுடைய சூப்பர் காரை அலங்காரம் செய்திருக்கின்றார். மேலும், அக்காரை கொண்டு தற்போது அவர் வலம் வரவும் தொடங்கியிருக்கின்றார். காரை போலவே மிக அதிக விலைக் கொண்டதே டெக்ஆர்ட் கிட். அதன் துள்ளியமான விலை விபரம் தெரியவில்லை. இருப்பினும், அதன் விலை ஒரு சில லட்சங்கள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!

இதுதவிர வேறு எந்த மாற்றத்தையும் போர்ஷே காரில் சச்சின் மேற்கொள்ளவில்லையாம். அதேவேலையில், இந்த ஒற்றை மாற்றமே அக்காருக்கு பல மடங்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. போர்ஷே 911 992 டர்போ எஸ் மாடலுக்கும், வழக்கமான போர்ஷே 911 மாடலுக்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லாமலிருப்பதைபோல் நீங்கள் உணரலாம். ஆனால், சற்று உற்று நோக்கினால் மட்டுமே இரண்டிற்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை உங்களால் காண முடியும்.

தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!

வழக்கமான ஒன்றைக் காட்டிலும் டர்போ எஸ் தேர்வு மிகவும் முரட்டுத் தனமானதாகக் காட்சியளிக்கின்றது. இந்த தோற்றத்தை மேலும் பல மடங்கு மெருகேற்றும் வகையிலேயே சச்சின் டெண்டுல்கர் அவருடைய டர்போ எஸ் காரை டெக்ஆர்ட் கிட் வாயிலாக அலங்காரம் செய்திருக்கின்றார். டர்போ எஸ் அதிக முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட கார் மட்டுமில்லைங்க.

தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!

அது அதிக பவர்புல்லான காரும்கூட. இந்த வாகனத்தில் 3.8 லிட்டர் 6 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 650 பிஎஸ் பவரையும், 800 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினில் 8 ஸ்பீடு பிடிகே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவி வாயிலாகவே அனைத்து வீல்களுக்கும் இயக்க திறன் கடத்தப்படுகின்றது. உலகின் மிக சிறந்த டிரான்ஸ்மிஷனாக பிடிகே டிரான்ஸ்மிஷன் பார்க்கப்படுகின்றது.

தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!

இது ஷிஃப்டிங் மற்றும் உடனடி ரெஸ்பான்ஸ் வசதியைக் கொண்டது. போர்ஷே 911 டர்போ எஸ் அதிகபட்சமாக மணிக்கு 330 கிமீ பயணிக்கும் திறன் கொண்டது. இதுமட்டுமில்லைங்க, இந்த வாகனம் வெறும் 2.6 செகண்டுகளிலேயே மணிக்கு நூறு கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது. எனவேதான் ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களின் லவ்வபிள் காராக இது இருக்கின்றது.

தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!

சச்சின் டெண்டுல்கர் டெக்ஆர்ட் கிட்டால் அலங்கரித்திருக்கும் போர்ஷே டர்போ எஸ் காரை 2021ஆம் ஆண்டிலேயே வாங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இக்கார் மிக மிக உயரிய விலையில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சுமார் 1.93 கோடிக்கும் அதிகமான விலையில் இந்த வாகனம் விற்கப்படுகிறது.

தன்னுடையே போர்ஷே காருக்காக சில லட்சங்களை வாரி இறைத்த சச்சின் டெண்டுல்கர்... மனுஷனுக்கு ரசனை அதிகம்!

கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் இடத்தில் இன்னும் பல சொகுசு மற்றும் சூப்பர் கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. நிஸான் ஜிடி-ஆர், பிஎம்டபிள்யூ ஐ8, பிஎம்டபிள்யூ எக்ஸ்5எம், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் எல்ஐ மற்றும் ஃபெர்ராரி 360 மோடெனா உள்ளிட்ட கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன. இதுதவிர, ஒரு காலத்தில் அவரிடத்தில் மாருதி 800 காரும் பயன்பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனை சச்சினே ஓர் தொலைக்காட்சி பேட்டியின்போது கூறியிருக்கின்றார். தான் அக்காரை அதிகமாக மிஸ் செய்வதாகவும் அப்போது அவர் கூறியிருந்தார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sachin tendulkar spotted with unique porsche 911 992 turbo s car
Story first published: Wednesday, August 10, 2022, 18:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X