பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு இவ்வளவு ரூபாய் உயருமா? வெளியான தகவலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சவுதி அரேபியாவில் நடந்த தாக்குதலால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு எவ்வளவு உயரலாம்? என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இது வாகன ஓட்டிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் உற்பத்தியில் தலை சிறந்து விளங்கும் நாடு சவுதி அரேபியா. சவுதி அராம்கோ (Saudi Aramco) என்ற எண்ணெய் நிறுவனம் ஒன்றை சவுதி அரேபியா அரசு நடத்தி வருகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களில் சவுதி அராம்கோவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

இந்த சூழலில், சவுதி அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் ஆலைகள் மீது தற்போது தாக்குதல் நடந்துள்ளது. இது உலகம் முழுக்க கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில், சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு சொந்தமான இரு எண்ணெய் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு எண்ணெய் ஆலைகள் மீது நேற்று முன் தினம் (செப்டம்பர் 14) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

ஆள் இல்லா விமானங்களால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு, ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்று கொண்டுள்ளனர். சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை ஏமனில் வான்வழி தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

இந்த தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் ஒரு நாளைக்கு 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி இந்த தாக்குதல் காரணமாக தடைபட்டுள்ளது. அதாவது சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கிட்டத்தட்ட 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகிற்கான கச்சா எண்ணெய் சப்ளையில் இது 6 சதவீதம் ஆகும்.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 60 டாலராக மட்டுமே இருந்தது. ஆனால் இது 70 டாலராக உயரும் அபாயம் இருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

குறிப்பாக கச்சா எண்ணெய் பயன்பாட்டிற்கு முழுக்க முழுக்க இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ள இந்தியா, இந்த தாக்குதல் சம்பவத்தால் கவலையைடந்துள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதத்தை இறக்குமதியின் மூலமாக மட்டுமே பூர்த்தி செய்து கொள்கிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் தேவைக்காக சவுதி அரேபியாவை இந்தியா அதிகம் நம்பியுள்ளது.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

கடந்த நிதியாண்டில் மட்டும், சவுதி அரேபியாவில் இருந்து 40 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்தது. இது இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 19 சதவீதம் ஆகும். கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக சவுதி அரேபியாவை நாம் எந்தளவிற்கு நம்பியுள்ளோம் என்பதை இந்த புள்ளி விபரங்களின் மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

சவுதி அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் ஆலைகள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இது இந்தியாவிலும் எதிரொலிக்க கூடிய அபாயம் உள்ளது. எனவே இந்தியாவை சேர்ந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்தால், அது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் வழி வகுத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய நிலையில், சவுதி அரேபியாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் சுத்தகரிப்பு நிறுவனங்களுக்கு உடனடியாக சப்ளை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

ஏனெனில் அடுத்த சில வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெய்யை சவுதி அரேபியா தற்போது தனது கையிருப்பில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கச்சா எண்ணெய் சப்ளையில் உடனடியாக எந்தவித தாக்கமும் இருக்காது என இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்றிடம் சவுதி அராம்கோ தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

போதுமான அளவிற்கு கச்சா எண்ணெய் கையிருப்பில் இருப்பதாகவும் அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திடம் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த தகவல்களை எல்லாம் வைத்து பார்க்கையில், உடனடியாக கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது போன்று தெரியவில்லை.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

ஆனால் தாக்குதல் காரணமாக பலத்த சேதமடைந்துள்ள எண்ணெய் ஆலைகளை சவுதி அராம்கோ சரி செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும்? கச்சா எண்ணெய் உற்பத்தி எப்போது சீராகும்? என்பது உறுதியாக தெரியவில்லை. இது உடனடியாக நடைபெறாவிட்டால், அதன் தாக்கம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் மிக கடுமையாக எதிரொலிக்கும் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்... பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம்... ஏன் தெரியுமா?

இதன்படி சவுதி அரேபியாவில் நிலைமை உடனடியாக சீராகாமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே சென்றால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 5 முதல் 6 ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல்கள் சாமானிய வாகன ஓட்டிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளன. ஏற்கனவே இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை அதிகமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், விலை இன்னும் அதிகமானால் அதனை எவ்வாறு சமாளிப்பது? என்று தெரியவில்லை என வாகன ஓட்டிகள் புலம்பி கொண்டுள்ளனர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Saudi Aramco Attack: Petrol, Diesel Prices Likely To Increase In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X