பழைய வாகனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்த கோர்ட்.. கேள்வி கேட்டவருக்குக் குட்டு...

டில்லியில் 10 ஆண்டு பழைய டீசல் வாகனங்களையும், 15ஆண்டு பழைய பெட்ரோல் வாகனங்களையும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஏன் உள்ளது? ஏன் டில்லிக்கு மட்டும் இந்த தடை வாருங்கள் விரிவாகக் காணலாம்.

இந்த சட்டம் மட்டும் நாடு முழுவதும் வந்தால் பழைய கார்களை எல்லாம் கயலான் கடையில் தான் போடனும் . . ஏற்கனவே இந்த சட்டம் டில்லிக்கு வந்தாச்சு . . . .

தலைநகர் டில்லியில் 15 ஆண்டுகளுக்குப் பழமையான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்குப் பழமையான டீசல் வாகனங்களையும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டில்லியில் நிலவி வரும் காற்று மாசு காரணமாக இந்த தடையை விதிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் டில்லியில் பழைய கார்களை வைத்திருக்கும் பலர் அதைப் பயன்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

இந்த சட்டம் மட்டும் நாடு முழுவதும் வந்தால் பழைய கார்களை எல்லாம் கயலான் கடையில் தான் போடனும் . . ஏற்கனவே இந்த சட்டம் டில்லிக்கு வந்தாச்சு . . . .

மீறி பழைய கார்களை டில்லியில் பயன்படுத்தினால் அதற்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மட்டுமே அமலில் உள்ளது. இந்தியாவில் மற்ற பகுதியில் வழக்கம் போலப் பழைய கார்களை பயன்படுத்தலாம்.

இந்த சட்டம் மட்டும் நாடு முழுவதும் வந்தால் பழைய கார்களை எல்லாம் கயலான் கடையில் தான் போடனும் . . ஏற்கனவே இந்த சட்டம் டில்லிக்கு வந்தாச்சு . . . .

இந்நிலையில் இந்த தடைக்குத் தடை விதிக்க கோரி அனுராக் சக்சேனா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அந்தவழக்கு நீதிபதிகள் நாகேஷ்வரராவ், ஏஎஸ் போப்பண்ணா, பிஆர் காவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்சின் முன்பு வந்தது. அந்த மனுவில் டில்லியில் 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களுக்கும் தடை உள்ளது. இதை நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த சட்டம் மட்டும் நாடு முழுவதும் வந்தால் பழைய கார்களை எல்லாம் கயலான் கடையில் தான் போடனும் . . ஏற்கனவே இந்த சட்டம் டில்லிக்கு வந்தாச்சு . . . .

இந்த மனுவை விசாரித்த நிதீபதிகள், இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மனுவை நிராகரித்தனர். இது மட்டுமல்லாமல் இந்த மனுவைக் கொடுத்த அனுராக் சக்சேனாவிற்கு ரூ8 லட்சம் அபராதமும் விதித்துள்ளனர். இது குறித்து நீதிபதிகள் கூறும் போது எச்சரிக்கையையும் மீறி வழக்கு தொடர்ந்ததால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இந்த சட்டம் மட்டும் நாடு முழுவதும் வந்தால் பழைய கார்களை எல்லாம் கயலான் கடையில் தான் போடனும் . . ஏற்கனவே இந்த சட்டம் டில்லிக்கு வந்தாச்சு . . . .

10 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கான தடை கடந்த 2018ம் ஆண்டு சுப்ரீம் கோட்டில் உத்தரவிடப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணை முடிந்துவிட்டது. இதனால் கோர்ட் இனி இது குறித்த மனுக்களை விசாரணைக்கு ஏற்காது. என நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த சட்டம் மட்டும் நாடு முழுவதும் வந்தால் பழைய கார்களை எல்லாம் கயலான் கடையில் தான் போடனும் . . ஏற்கனவே இந்த சட்டம் டில்லிக்கு வந்தாச்சு . . . .

ஏன் பழைய வாகனங்களை டில்லியில் பயன்படுத்துவதில்லை என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வாகனங்கள் நாளாக நாளாக அதன் புகை உமிழ்வது அதிகமாகிக் கொண்டே இருக்கும். பயன்படுத்தப் பயன்படுத்த இது அதிகமாகும் என்பதால் பழைய கார்களிலிருந்து அதிகமாகப் புகை வெளியேறும், டில்லி ஏற்கனவே காற்று மாசு காரணமாக அவதிப்படுகிறது.

இந்த சட்டம் மட்டும் நாடு முழுவதும் வந்தால் பழைய கார்களை எல்லாம் கயலான் கடையில் தான் போடனும் . . ஏற்கனவே இந்த சட்டம் டில்லிக்கு வந்தாச்சு . . . .

இந்த காற்று மாசுவை தடுக்கவே அரசு இவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளது. டில்லியில் உள்ள இந்த தடை டில்லி மாநிலத்தில் உள்ள வாகனங்களுக்கு மட்டுமல்ல வெளி மாநிலங்களிலிருந்து டில்லிக்குள் வரும் மற்ற வாகனங்களுக்கும் பொருந்தும். டில்லியில் எல்லைப்பகுதிகளிலேயே இதைச் சோதனை செய்த பின்பே போலீசார் வாகனங்களை உள்ளே அனுமதிக்கின்றனர். பைழய வாகனங்கள் டில்லிக்கு வெளியிலேயே நிறுத்தப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sc bans old vehicle usage in delhi fined the petitioner who filed a plea against this
Story first published: Thursday, May 19, 2022, 11:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X