இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா! ஊழியர்களுக்கு மிரட்டல்

பெங்களூரு அருகே செயல்பட்டு வந்த பஸ் பாடி உற்பத்தி யூனிட்டை ஸ்கேனியா நிறுவனம் மூடிவிட்டது. இதனால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களை ராஜினாமா செய்யும்படி, ஸ்கேனியா மிரட்டியதாக, புகார் எழுந்துள்ளது.

By Arun

பெங்களூரு அருகே செயல்பட்டு வந்த பஸ் பாடி உற்பத்தி யூனிட்டை ஸ்கேனியா நிறுவனம் மூடிவிட்டது. இதனால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்களை ராஜினாமா செய்யும்படி, ஸ்கேனியா நிறுவனம் மிரட்டியதாக, மத்திய அரசிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா! ஊழியர்களுக்கு மிரட்டல்

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரீமியம் பஸ் உற்பத்தி நிறுவனம் ஸ்கேனியா. பெங்களூருவுக்கு அருகே உள்ள நரசபுரா பகுதியில், ஸ்கேனியா நிறுவனத்தின் பஸ் பாடி உற்பத்தி யூனிட் செயல்பட்டு வந்தது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பஸ் பாடிகளை ஸ்கேனியா நிறுவனம், இந்தியா முழுவதும் விற்பனை செய்து வந்தது.

இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா! ஊழியர்களுக்கு மிரட்டல்

பிரீமியம் பஸ்கள் மட்டுமல்லாது, டிரக் உற்பத்தியிலும் ஸ்கேனியா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. நரசபுரா பகுதியில், ஸ்கேனியா நிறுவனத்திற்கு 2 யூனிட்கள் உள்ளன. இதில், ஒரு யூனிட்டில் வருடத்திற்கு 1,000 பஸ்களை உருவாக்க முடியும். மற்றொரு யூனிட்டில் வருடத்திற்கு 2,500 டிரக்குகளை தயாரிக்க முடியும்.

இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா! ஊழியர்களுக்கு மிரட்டல்

ஆனால் போதிய ஆர்டர்கள் இல்லாததால், நரசபுரா பகுதியில் செயல்பட்டு வந்த, பஸ் பாடி உற்பத்தி யூனிட்டை மட்டும், ஸ்கேனியா நிறுவனம் மூடிவிட்டது. இந்தியாவில் பிரீமியம் பஸ்களுக்கு போதிய அளவில் டிமாண்ட் இல்லாததால், இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஸ்கேனியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா! ஊழியர்களுக்கு மிரட்டல்

இந்தியாவில் பஸ் பிஸ்னஸில், பிரீமியம் செக்மெண்டிற்கான தேவை மிகவும் குறைவாக இருப்பதாக ஸ்கேனியா நிறுவனம் கருதுகிறது. எனவே லாபம் ஈட்டுவதற்கான மேஜிக் எண்களை ஸ்கேனியா நிறுவனத்தால் எட்ட முடியவில்லையாம்.

இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா! ஊழியர்களுக்கு மிரட்டல்

இதனால்தான் பஸ் பாடி உற்பத்தி யூனிட்டை மட்டும் ஸ்கேனியா நிறுவனம் மூடிவிட்டதாம். எனினும் இந்தியாவில் பிரீமியம் பஸ்களுக்கான மார்க்கெட் சூடுபிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் ஸ்கேனியா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா! ஊழியர்களுக்கு மிரட்டல்

ஸ்கேனியா நிறுவனத்தின் இந்த முடிவால், அங்கு வேலை செய்து வந்த சுமார் 1,500 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனினும் தொழிலாளர்கள் அனைவரையும் ராஜினாமா செய்யும்படி ஸ்கேனியா நிறுவனம் மிரட்டியதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா! ஊழியர்களுக்கு மிரட்டல்

இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், மத்திய அரசு, கர்நாடக அரசு மற்றும் ஸ்வீடன் தூதரகம் உள்ளிட்ட இடங்களுக்கு எல்லாம், தங்கள் புகார்களை இ-மெயிலில் அனுப்பியுள்ளனர். தொழிலாளர் நலத்துறையும், பிரதமரின் அலுவலகமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஸ்கேனியா நிறுவனத்தில் மீண்டும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா! ஊழியர்களுக்கு மிரட்டல்

ஆனால் தொழிலாளர்களை அச்சுறுத்தியதாக வெளியான தகவலை, ஸ்கேனியா நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாதிப்புக்கு உள்ளான தொழிலாளர்கள் அனைவருக்கும் தேவையான உதவிகள் அனைத்தையும் நிச்சயமாக செய்வோம் என ஸ்கேனியா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா! ஊழியர்களுக்கு மிரட்டல்

பஸ் பாடி உற்பத்தி யூனிட்டை மூடிவிட்டாலும் கூட, பஸ் மற்றும் டிரக் சேஸிஸ்களை தொடர்ந்து உற்பத்தி செய்யவுள்ளதாக, ஸ்கேனியா நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தங்களின் டிரக் சேஸிஸ் வியாபாரம் மிகவும் நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாக ஸ்கேனியா நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் பஸ் யூனிட்டை மூடியது ஸ்கேனியா! ஊழியர்களுக்கு மிரட்டல்

இந்தியாவின் மொத்த பஸ் விற்பனை மார்க்கெட்டில், பிரீமியம் பஸ்களுக்கான மார்க்கெட் வெறும் 2 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. எனினும் இந்த மார்க்கெட்டில் 60 சதவீத பங்குகளுடன் வால்வோ முதலிடத்தில் உள்ளது. இது 2017ம் ஆண்டின் புள்ளி விபரங்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Scania shuts down bus body manufacturing unit on low demand. read in tamil.
Story first published: Saturday, June 9, 2018, 10:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X