கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...

பைக், கார், பேருந்து, கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றை தகுந்த உரிமம் பெற்று 18 வயதுக்கு மேல் உள்ள யார் வேண்டுமானாலும் ஓட்டலாம். ஆனால் 60 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமகன்கள் 30, 40 வருடங்களுக்கு மேல் வாகனங்களை ஓட்டிய அனுபவத்தை கொண்டிருந்தாலும் தானாக வாகனங்களுடனான தொடர்பை துண்டித்து கொள்கின்றனர்.

கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...

இதற்கு பார்வையில் தெளிவின்மை, காது சரியாக கேளாமை, கை,கால் நடுக்கம், உடல்நல குறைபாடுகள் என ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் கடந்து சரி இன்று நீண்ட நாட்கள் கழித்து பைக்கையோ அல்லது காரையோ ஓட்டுவோம் என முடிவு எடுப்பவர்களும் இன்றைய இளம் தலைமுறையினரின் ரைடிங்கை பார்த்து அச்சப்படும் சூழ்நிலை தான் உள்ளது.

கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...

ஆனால் இதையும் பொருட்படுத்தாமல் கேரளாவில் வயதானவர் ஒருவர் சுற்றுலா பேருந்து ஒன்றை இயக்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். பார்பதற்கு 65-70 வயதில் இருப்பவர் போல் தெரியும் அவர் இந்த வயதிலும் மிக நேர்த்தியாக பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.

கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...

இதில் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்னெவென்றால், வீடியோ எடுப்பது அவருக்கு தெரியாது. இருப்பினும் இடையில் வரும் செல்போன் அழைப்பு ஒன்றிற்காக பேருந்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி பேசிவிட்டு அங்கிருந்து புறப்படுவது உண்மையில் பாராட்டுக்குரியதாகும்.

கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...

ஏனெனில் இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது செல்போன் பேசி கொண்டே வாகனத்தை ஓட்டுவது தான். இதை வாகன ஓட்டிகள் தவிர்க்கும்படி அரசாங்கம் பல முறை கூறிவிட்டது. இருந்த போதும் இந்த செயல்பாடு குறைந்த பாடில்லை.

கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...

வருடந்தோறும் மருத்துவ பரிசோதனை, மருத்துவர் ஆலோசனையின்படி கண், காது போன்றவற்றை பரிசோதித்தல், மருந்து, மாத்திரைகளை தவறாது உட்கொள்ளுதல் போன்றவற்றின் மூலமே இவ்வாறு வயதான பின்பும் கனரக வாகனங்களை இயக்க முடியும்.

கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...

இவ்வாறான மருத்து, மாத்திரை மட்டுமல்லாமல் தற்போதுள்ள வயதானவர்கள் அவர்களது இளம் பருவத்தில் மிகவும் சத்தாண உணவுகளை உட்கொண்டு வந்ததும் தான் இவரது இந்த அசாத்தியமான செயலுக்கு காரணம்.

இவருக்கு நீண்ட வருட பேருந்து இயக்கிய அனுபவம் இல்லாமல் இவ்வாறு பேருந்தை இயக்குவதற்கு வாய்ப்பே இல்லை. ஒன்று இவர் பேருந்து அல்லது கனரக வாகன ஓட்டுநராக பணியாற்றி இருக்க வேண்டும். இல்லையேல், தற்போதும் அந்த பணியில் பணியாற்றி கொண்டிருக்க வேண்டும். இவரை பொறுத்த வரையில் வயது வெறும் எண் மட்டுமே.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Age is just a Number; Heavy Driver in Kerala Tourist Bus : Video Viral
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X