விமானத்தில் பயணிக்கும் போது சுவிங்கம் சாப்பிடக்கூடாது... மீறி சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா?

விமானத்தில் பயணிக்கும் போது பயணிகள் காது அடைக்கும் பிரச்சனையைச் சமாளிக்க சுவிங்கம் மெல்லச் சொல்லி டிப்ஸ் சொல்லுவார்கள். இந்த டிப்ஸ் உண்மையா சுவிங்கம் சாப்பிடுவது சிறந்த பழக்கமா? இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

விமானத்தில் பயணிக்கும் போது சுவிங்கம் சாப்பிடக்கூடாது... மீறிச் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா ?

நாம் எல்லோரும் விமானத்தில் பயணிக்க ஆசைப்படுவோம். பெரும்பாலானோர் ஒரு முறையாவது விமானத்தில் பயணித்திருப்போம். மற்றவர்கள் விமானத்தில் பறக்கும் ஆசையில் இருப்பார்கள். விமானத்தில் பயணித்தவர்களுக்குத் தெரியும் விமானம் டேக் ஆஃப் ஆகும் போதும் சரி தரையிறங்கும் போதும் சரி நமக்குக் காது அடைக்கும், எப்படி சாலைவழியாக மலை ஏறும் போது காது அடைக்குமே அதே போல விமானத்திலும் காது அடைக்கும்.

விமானத்தில் பயணிக்கும் போது சுவிங்கம் சாப்பிடக்கூடாது... மீறிச் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா ?

இதற்கு முக்கியமான காரணம் நமது உடலுக்குள்ளும், வெளியிலும் இருக்கும் பிஷர் மாறுபாடுதான். இதனால் சிலருக்குப் பயங்கரமான காது வலி கூட ஏற்பட்டும். இப்படியாக ஏற்படும் போது எச்சில் விழுங்குவது, வாயைத் திறந்து மூச்சு விடுவது, உள்ளிட்ட விஷயங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் இந்த பிரச்சனை சரியாகும் என டிப்ஸ்களை தருவார்கள்.

விமானத்தில் பயணிக்கும் போது சுவிங்கம் சாப்பிடக்கூடாது... மீறிச் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா ?

ஆனால் இப்படி டிப்ஸ் தருபவர்களில் சிலர் இந்த பிரச்சனை வராமல் இருக்க வேண்டும் என்றால் சுவிங்கம் சாப்பிடச் சொல்லி சிலர் சொல்லுவார்கள். அப்படி சுவிங்கம் சாப்பிட்டால் இந்த மாதிரியான காது குறித்த பிரச்சனைகள் எல்லாம் வராமல் இருக்கும் எனச் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் விமானத்தில் பயணிக்கும் போது சுவிங்கம் சாப்பிடுவது உண்மையில் சரியான விஷயமா? இது பற்றித் தான் இங்குக் காணப்போகிறோம்.

விமானத்தில் பயணிக்கும் போது சுவிங்கம் சாப்பிடக்கூடாது... மீறிச் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா ?

இந்த டிப்ஸ் வழங்குபவர்கள் சொல்வது போல சுவிங்கம் சாப்பிட்டால் இப்படியாகக் காது அடைக்கும் பிரச்சனை ஏற்படாது ஆனால் அதற்குப் பதிலாக வேறு ஒரு பிரச்சனை ஏற்படும். பொதுவாக சுவிங்கம் சாப்பிட்டால் அதிகமாகக் காற்று உடலுக்குள் செல்லும் இது சுவிங்கத்திற்கு பொதுவாக இருக்கும் விளைவு தான். ஆனால் குறிப்பாக விமானத்தில் சுவிங்கம் சுவைக்கக் கூடாது என்பதற்கு ஒரு தனியான காரணம் இருக்கிறது.

விமானத்தில் பயணிக்கும் போது சுவிங்கம் சாப்பிடக்கூடாது... மீறிச் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா ?

விமானங்கள் பறக்கத் துவங்கும் போது அது பிரஷரைஷ்டு செய்யப்பட்டிருக்கும். அப்பொழுது இருக்கும் காற்றே மாற்றி மாறி சுழல துவங்கும். இதனால் அந்த காற்று உடலுக்குள் சென்றால் பிரச்சனை ஏற்படும். முக்கியமாக கேஸ் பிரச்சனை ஏற்படும் வெறும் பிரஷரைவு செய்வதால் மட்டுமல்ல பயணிகள் விமானத்திற்குள் வந்து "பின்காற்று" விட்டால் அந்த காற்றும் நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் தான் இருக்கும். அதனால் அது நம் உடலுக்குள் சென்றால் பிரச்சனை ஏற்படும்.

விமானத்தில் பயணிக்கும் போது சுவிங்கம் சாப்பிடக்கூடாது... மீறிச் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா ?

இப்படியாக விமானத்தில் பயணிக்கும் போது காற்று உடலுக்குள் செல்வதற்குப் பெயர் Aerophagia எனப் பெயர். இது பயணிகளுக்கு கேஸ் தொந்தரவை ஏற்படுத்தும் ஆன டாக்டர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக ஏற்கனவே கேஸ் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் விமானத்தில் சுவிங்கம் சாப்பிடுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் கேஸ் பிரச்சனை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது.

விமானத்தில் பயணிக்கும் போது சுவிங்கம் சாப்பிடக்கூடாது... மீறிச் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா ?

ஆனால் காது அடைப்பு பிரச்சனை சரி செய்ய சுவிங்கம் சாப்பிடுவதற்குப் பதிலாக வேறு சில விஷயங்களையும் செய்வதன் மூலம் இந்த பிரச்சனைகளைச் சுலபமாகச் சமாளிக்க முடியும். கொட்டாவி விடுவது, எச்சில் விழுங்குவது, மூக்கையும் வாயையும் பொத்திக்கொண்டு மெதுவாக மூச்சை வெளியேவிட முயல்வது போன்ற விஷயங்களைச் செய்யலாம். இப்படிச் செய்தால் காது வலி மற்றும் காது அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

விமானத்தில் பயணிக்கும் போது சுவிங்கம் சாப்பிடக்கூடாது... மீறிச் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா ?

இதில் மூக்கையும் வாயையும் பொத்திக்கொண்டு மூச்சை வெளியேற்றச் செய்யும் முயற்சியைச் சளி மற்றும் அலர்ஜி இல்லாதவர்கள் செய்யலாம். ஏற்கனவே சுவாச பிரச்சனை இருப்பதைச் செய்ய வேண்டாம். இதனால் காது பகுதி இன்ஃபக்ஷன் ஆக வாய்ப்பு உள்ளது. மூக்கை மூடாமல் எச்சில் விழுங்குவது, வாயைத் திறந்து மூடுவது மூலமும் அவர்கள் காது அடைப்பு பிரச்சனையைச் சரி செய்துகொள்ளலாம்.

விமானத்தில் பயணிக்கும் போது சுவிங்கம் சாப்பிடக்கூடாது... மீறிச் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா ?

ஆனால் கேஸ் பிரச்சனை இருப்பவர்கள் சுவிங்கம் சாப்பிட்டால் கேஸ் பிரச்சனை அதிகமாகி விமானத்திலேயே வயிற்றில் உப்புசம் ஏற்பட்டு "பின்காற்று" வெளியேறி விட வாய்ப்பு இருக்கும். இது தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். அதனால் இனி விமானம் ஏறும் போது சுவிங்கம் மெல்ல வேண்டும் என யார் டிப்ஸ் சொன்னாலும் கேட்காதீர்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Should not chew gum on flight know the reason behind it
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X