சியாச்சின் பனிச் சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

சியாச்சின் பனிச் சிகரம் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இமயமலையில் சுற்றுலா மற்றும் சாகசப் பயணம் செய்ய திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இந்த பயணத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் இந்த செய்தியை படித்த பின்னர் முடிவு செய்து கொள்வது உசிதம்.

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

லடாக் சுற்றுலா மேம்படும்

அண்டை நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதிகளுக்கு சிறப்பான சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், வரும் 31ந் தேதி முதல் தனி யூனியன் பிரதேசமாக செயல்பட உள்ள லடாக் பிராந்தியத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பதற்கான பல்வேறு சாலை கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இது ராணுவ ரீதியிலான கொள்கை திட்டமாக இருந்தாலும், இந்த பகுதியின் வருவாயை அதிகரிக்கும் முயற்சியாக சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது.

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

புதிய பாலம்

லடாக் பிராந்தியத்தில் சீன எல்லையோரம் அமைந்துள்ள துர்புக் மற்றும் தவுலத் பெக் ஓல்டி என்ற பகுதிகளை இணைக்கும் வகையில் ஷியாக் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே முதல்முறையாக மைக்ரோ பைல் பவுண்டேஷன் முறையில் இந்த பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது. வெறும் 15 மாதங்களில் இந்த பாலத்தை எல்லைப்புற சாலைகள் நிறுவனம் (BRO) கட்டி முடித்துள்ளது.

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

முக்கிய அறிவிப்பு

இந்த பாலத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் லடாக் எம்பி ஜம்யங் செரிங் நம்கயல் மற்றும் ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்தான் சியாச்சின் பனிமலை பிரதேசத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்பட இருப்பதாக ராஜ்நாத் சிங் ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார்.

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

லடாக் மேம்படும்

காஷ்மீருக்கான சிறப்பு அதிகார அந்தஸ்து நீக்கப்பட்டதுடன், அதில் இருந்த லடாக் பகுதி தனி ஒன்றிய பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இமயமலையில் உள்ள இந்த சமவெளியான பீடபூமி பிரதேசம் இந்த அறிவிப்பு மூலமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுவதற்கான முன்னெடுப்பாக இது பார்க்கப்படுகிறது.

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

தடை நீக்கம்

இந்த நிலையில், உலகின் மிகவும் உயரமான போர்க்கள பகுதியாக கருதப்படும், சியாச்சின் பனி மலைப்பகுதிக்கு இதுவரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை இருந்து வந்தது. அந்த தடை நீக்கப்படுவதால், இனி இமயமலையில் சாகசப் பயணம் செல்ல விரும்பும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சியாச்சின் பனிப் பிரதேசத்திற்கு செல்லும் வாய்ப்பை பெற வழி ஏற்பட்டுள்ளது.

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

அனுமதி

கடல் மட்டத்திலிருந்து 12,300 அடி உயரத்தில் இருக்கும் சியாச்சின் அடிவார முகாமிலிருந்து 15,600 அடி உயரத்தில் உள்ள குமார் போஸ்ட் என்ற இடம் வரை சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இந்த சுற்றுலா என்பது கோவாவுக்கு டூர் செல்வது போன்று நினைத்த மாத்திரத்தில் செல்ல முடியாது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

MOST READ: 2.50 கோடி ரூபாய் காரை அசால்டாக தட்டி தூக்கிய போலீசார்... அதிர்ந்து போன உரிமையாளர்... ஏன் தெரியுமா?

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

மோசமான சீதோஷ்ண நிலை

சியாச்சின் பனிப் பிரதேசத்தில் பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் உடலளவிலும், மனதளவிலும் எத்தகைய சவால்களை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். மைனஸ் 60 டிகிரி வரை வெப்ப நிலை குறையும் வாய்ப்புடைய இந்த பிரதேசத்தில் சுற்றுலா என்பது மிகவும் கடினமான விஷயம்.

MOST READ: டுவிட்டரில் போரை தொடங்கிய கிரண்பேடி, நாராயணசாமி... பதிலுக்கு பதில் புகைப்படங்களை வெளியிட்டு மோதல்...

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

உடல்நல பிரச்னை

ஏனெனில், உயரமான மலைப்பகுதிகளில் காற்றில் போதிய ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தால், ரத்த ஓட்டத்தில் கோளாறு, சுவாசப் பிரச்னை, உயரமான மலைப்பகுதிகளில் வரும் வாந்தி, குமட்டல், மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்.

MOST READ: புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

நடைமுறைகள்

எனினும், ரிஸ்க் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போல என்று நினைப்பவர்களுக்கான சிறந்த சுற்றுலா அனுபவத்தை இது தரலாம். இந்த சுற்றுலாவுக்கு செல்ல இருப்பவர்கள் ராணுவத்தின் அனுமதி பெற்ற பின்னரே செல்ல முடியும். சியாச்சின் செல்ல விண்ணப்பிக்கும் சுற்றுலாப் பயணிகளின் பின்புலத்தை தீவிரமாக ஆராய்ந்த பின்னர், சுற்றுலாப் பயணிகளின் உடல் பரிசோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர்.

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

தகுதி பெற்றால் மட்டுமே...

இதில் தகுதியானவர்கள் மட்டுமே சியாச்சின் பனிப்பிரதேசத்திற்கு சுற்றுலா செல்ல முடியும். தகுதி பெற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு சில அடிப்படை பயிற்சிகளும் ராணுவத்தால் வழங்கப்படும். அதன்பிறகே, சியாச்சின் செல்ல முடியும். அத்துடன், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ராணுவத்தினர் கவனத்தில் கொண்டு இந்த சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

பின்தங்கிய கர்துங்லா பாஸ்

இந்த நிலையில், லடாக் பிராந்தியத்திற்கு சாகசப் பயணம் மேற்கொள்ள விரும்பும் வாகனப் பிரியர்கள் மற்றொரு இடத்தையும் பார்க்க தவறவிடக்கூடாது. இதுவரை வாகனங்கள் செல்வதற்கான இந்தியாவின் மிக உயரமான சாலை என்ற பெருமையை கர்துங்லா பகுதி பெற்றிருந்தது. இந்த கணவாய் கடல் மட்டத்திலிருந்து 17,582 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

உம்லிங் லா பாஸ்

இந்த நிலையில், கர்துங்லாவை தற்போது முந்தி உலகின் மிக உயரமான வாகன பயன்பாட்டுக்கான சாலை என்ற பெருமையை உம்லிங் லா கணவாய் பெற்றிருக்கிறது. இந்த கணவாய் கடல் மட்டத்திலிருந்து 19,300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த சிகரத்திற்கு பலர் மோட்டார்சைக்கிளில் சாகசப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த இடம் கூகுள் வரைபடத்தில் இடம்பெறவில்லை.

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

மூன்று வழிகள்

இங்கு செல்வதற்கு மூன்றுவிதமான வழிகள் உள்ளன. இதற்கும் அனுமதி பெற வேண்டியது அவசியம். ஃபக்சே - கோயூல் - டெம்சோக் வழியாக உம்லிங் லா பகுதிக்கு செல்வதற்கு லே மாவட்டத்தின் கலெக்டரிடமிருந்து அனுமதி பெற வேண்டும். இது சீன எல்லையோரம் செல்வதால், மறுபுறத்தில் சீன சாலைகளை பார்க்கும் வாய்ப்பை பெறுவதோடு, லடாக் பிராந்தியத்தில் மிக அழகான சாலையாகவும் இது வர்ணிக்கப்படுகிறது.

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

முக்கிய விஷயம்

அடுத்து லே - ஹேன்லே- போதி லா வழியாக உம்லிங் லா செல்வதற்கான இரண்டாவது வழி உள்ளது. இதுதான் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. இதில், ஹன்லே பகுதியானது விண்மீன் மற்றும் வான் பகுதியில் பால் மண்டலத்தை காண்பதற்கான சிறந்த இடமாக கருதப்படுகிறது. உம்லிங் லா பகுதியிலிருந்து டெம்சோக் வழியாக வருவதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டியது அவசியம்.

சியாச்சின் பனி சிகரத்திற்கு சுற்றுலாப் போக ஆசையா?... உங்களுக்குதான் இந்த செய்தி!

எப்போது செல்லலாம்?

மூன்றாவதாக, ஹன்லே - உக்துங்லே வழியாக உம்லிங் லா செல்ல முடியும். இதற்கு சாதாரண அனுமதி சீட்டு போதுமானதாக இருக்கும். உம்லிங் லா செல்வதற்கு ஜூன் மாதம் சிறந்ததாக இருக்கும். பொதுவாக லடாக் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் சுற்றிப் பார்ப்பதற்கு செப்டம்பர்- அக்டோபர் இடையிலான காலக்கட்டம் சிறந்ததாக சொல்லப்படுகிறது. இது சீதோஷ்ண நிலையை வைத்து மாறுபடும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Defence Minister Rajnath Singh has announced that the Siachen glaciar is now open for tourists.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more