சிங்கப்பூர் டூ மலேசியா கார்லேயே ட்ரிப் போறீங்களா? அப்ப இந்த விஷயங்களா கட்டாயம் மறக்காதீங்க...

சிங்கப்பூரை ஒரு குட்டி தமிழ்நாடு என்றே சொல்லி விடலாம். ஏராளமான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். இங்கிருந்து அந்நாட்டிற்குச் சென்று வேலை பார்ப்பவர்கள், அந்நாட்டிலேயே குடிமகனாக மாறிய தமிழ்மக்கள் பலர் இருக்கின்றனர். இது போகச் சிங்கப்பூருக்குச் சுற்றுலா செல்லும் பயணிகளும் தமிழகத்தில் அதிகம் இருக்கின்றனர். இந்த பதிவில் நாம் சிங்கப்பூரில் உள்ள தமிழக மக்களுக்கு அந்நாட்டில் சாலைவழியாகச் செல்லும் பயணத்தைத் திட்டம் செய்தால் அவர்களுக்கான சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம்...

சிங்கப்பூர் டூ மலேசியா கார்லேயே ட்ரிப் போறீங்களா? அப்ப இந்த விஷயங்களா கட்டாயம் மறக்காதீங்க...

ரோடு சைடு அசிஸ்டென்ஸ்

சிங்கப்பூர் குட்டி நாடு தான் என்றாலும் மக்கள் பலர் கார்களிலேயே அங்கிருந்து மலேசியாவிற்குப் பயணம் செய்வதைக் கூட வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படியாகச் சிங்கப்பூரில் நீங்கள் சொந்தமாக காரில் பயணம் செய்கிறீர்கள் என்றால் முதலில் நீங்கள் பயணம் செய்யும் காருக்கு ரோடு சைடு அசிஸ்டென்ஸ் கிடைப்பார்களா என செக் செய்து விடுங்கள். உங்கள் பயணத்தில் வாகனத்தில் ஏதோனும் பிரச்சனை ஏற்பட்டாலும் அது உதவும், குறிப்பாக நீங்கள் மலேசியா செல்கிறீர்கள் என்றால் அங்குள்ள ரோடு சைடு அசிஸ்டென்ஸ் வசதிகளையும் செக் செய்து கொள்ளுங்கள்

டச் அன் கோ கார்டு

நீங்கள் மலேசியா செல்கிறீர்கள் என்றால் பாஸ்போர்ட் எப்படி முக்கியமோ அதே போல டச் அன் கோ கார்டும் முக்கியம். நீங்கள் இந்த கார்டு இல்லாமல் காரில் மலேசியா செல்ல முடியாது. அதனால் இந்த காரை எடுத்துக்கொள்ளுங்கள், இந்த கார் இல்லை என்றால் நீங்கள் பெட்ரோல் பங்க் அல்லது குறிப்பிட்ட 7-11 அவுட்லெட்களில் இந்த கார்டு கிடைக்கும் இதை வாங்கிக்கொள்ளுங்கள். இதில் கிளாசிக் மற்றும் என்ஹென்ஸ்டு ஆகிய 2 வகை உள்ளது. பெரும்பாலும் என்ஹென்ஸ்டு கார்டை தான் பலர் பயன்படுத்துவார்கள். இதை என்எஃப்சி மூலம் செல்போனிலேயே டாப் அப் செய்யலாம். இந்த கார்டு உங்கள் நண்பர்களிடம் இருந்தால் அதையும் வாங்கிக்கொள்ளலாம்.

வாகன என்ட்ரி பெர்மிட்

மலேசியாவிற்கு காரில் செல்பவர்கள் முக்கியமாக இதைக் கவனிக்க வேண்டும். மலேசிய அரசு வெளிநாட்டு கார்களுக்காக வாகன என்ட்ரி பெர்மிட்டை வழங்குகிறது. இதை வாங்கியவர்களுக்கு ஒரு ஆர்எஃப்ஐடி கார்டு வழங்கப்படும். இதை உங்கள் காருடன் இணைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு ஆர்எஃப்ஐடி கார்டை மலேசிய அரசு வழங்குகிறது. இதற்கு 5 ஆண்டுகள் வரை காலக்கெடு உள்ளது.

இன்சூரன்ஸ்

நீங்கள் காரில் நீண்ட தூரம் பயணம் செய்யும் போது உங்கள் காரின் லாக் கார்டு/ இன்சூரன்ஸில் ஹார்டு காப்பியை எப்பொழுதும் வாகனத்திலேயே வைத்திருங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இதை சமர்ப்பிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இல்லை என்றால் போலீசார் வாகன சோதனை செய்யும் போது தேவையில்லாத தலைவலி ஏற்படும். இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் எப்பொழுதும் உங்கள் கையிலேயே அதை வைத்திருங்கள்

மூன்றில் ஒரு பங்கு பெட்ரோல்

நீங்கள் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி என எந்த வகை வாகனத்தைப் பயன்படுத்தினாலும் சரி நீங்கள் சிங்கப்பூரை விட்டு வெளியேறும் போது உங்கள் வாகனத்தின் முழு கொள்ளளவில் 3ல் 1 பங்கிற்கும் குறைவான எரிபொருள் தான் இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால் நீங்கள் அபராதம் செலுத்தவேண்டியது வரலாம், அல்லது நீங்கள் திருப்பி அனுப்பப்படலாம். ஒரு வேலை பெட்ரோல் கேஜ் குறைவாகக் காட்டும் படி மாற்றியிருந்தால் நீங்கள் வழக்கிலும் சிக்கக்கூடும். இதை முக்கியமாகக் கவனித்துக்கொள்ளுங்கள்

உள்நாட்டுப் பணம்

இன்று சிங்கப்பூரில் பெரும்பாலும் கேஸ் லெஸ் பணப் பரிவர்த்தனைக்கு வந்துவிட்டோம். ஆனால் இது வெளிநாடுகளுக்குச் செல்லும் போது சிக்கல் தான். அதனால் நீங்கள் பயணத்தைத் துவங்கும் முன்பே சிங்கப்பூரில் மலேசிய கரென்ஸியை மாற்றிக்கொள்ளுங்கள். இது மலேசியாவில் நீங்கள் பயணிக்கும் போது பல இடங்களில் உங்களுக்கு உதவும்,

செல்போன்

நீங்கள் வெளிநாட்டிற்குப் பயணம் செய்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் டேட்டா ரோமிங்களை ஆக்டிவேட் செய்ய வேண்டுமா என செக் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் மலேசிய எல்லைக்குள் நுழைந்ததும் உங்கள் போன் தொடர்பு கொள்ள முடியாதநிலைக்கு சென்றுவிடும். அதன் பின்னர் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நீங்கள் போன்பேச முடியாமல் தத்தளித்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது.

டிராஃபிக் ஆப்

நீங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். போகும்வகையில் டிராஃபிக் எப்படி இருக்கிறது, நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வழியில் சென்றால் சுலபமாகச் செல்லலாம் என்பதை அறிவுறுத்த ஏகப்பட்ட ஆப்கள் மார்கெட்டில் இருக்கிறது. இந்த ஆப்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Singapore to Malaysia car tips things to do before the journey
Story first published: Tuesday, September 27, 2022, 22:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X