விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னதா ஒரு கீறல் கூட ஏற்படல!

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் விலைக் குறைவான கார் மாடலில் ஒன்றே பஞ்ச். இந்த காரே பாடகி ஒருவர் பெரும் விபத்தில் சிக்கிய போதிலும் எந்தவித பெரிய பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக தற்போது இருக்க காரணமாக உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!

அதிக பாதுகாப்பு வசதி கொண்ட கார் என குளோபல் என்சிஏபி-யால் புகழ்பாடப்பட்ட கார் மாடல்களில் ஒன்றே டாடா பஞ்ச். மக்களாலும் இந்த கார் தற்போது அதிகளவில் பாராட்டப்பட்டு வருகின்றது. அதிக உறுதியான கட்டுமானத்திற்காகவே மக்கள் அக்காரை புகழ்ந்து வருகின்றனர். இந்த நிலையிலேயே பெருத்த விபத்து ஒன்றில் இருந்து பாடகி ஒருவரை டாடா பஞ்ச் சிறிதளவும் காயமின்றி காப்பாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!

இதன் வாயிலாக அந்த பாடகியின் ஹீரோவாகவே டாடா பஞ்ச் மாறியுள்ளது. டாடா பஞ்ச் அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார் மட்டுமில்லைங்க, இந்தியாவின் மலிவு விலை காராகவும் அது காட்சியளிக்கின்றது. மணிபூரைச் சேர்ந்த பாடகி சோமா லைஸ்ரம் என்பவரையே இந்த மலிவு விலை கார் தற்போது பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றியிருக்கின்றது. இந்த பாடகி மணிப்பூரை மையமாகக் கொண்ட திரைப் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!

இந்த நிலையிலேயே அண்மையில் டாடா பஞ்ச் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் விபத்தில் சிக்கியிருக்கின்றார். விபத்தில் சிக்கிய பாடகியின் காரை காவல்துறையினர் மற்றும் மணிப்பூர் மக்கள் மீட்டெடுக்கும் காட்சியே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வீடியோவினால் விபத்தில் டாடா பஞ்ச் கார் எந்தளவு சேதமடைந்துள்ளது என்பது தெளிவாக தெரிய வந்திருக்கின்றது.

விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!

காரின் மேற்கூரை மற்றும் வலது பக்கம் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்திருப்பதை நம்மால் காண முடுகின்றது. இத்தகைய கடுமையான பாதிப்பைச் சந்தித்த போதிலும் காரில் பயணித்த அவரு(பாடகி)க்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பாடகியும், நடிகையுமான சோமா லைஸ்ரம் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!

சொல்லப்போனால் அவருக்கு சிறிதளவும் காயம்கூட ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. லேசாக தலையில் மட்டும் இடித்துக் கொண்டிருக்கின்றார். கார் அதிக ஆழமான பள்ளத்தில் விழுந்தபோது தலைக்குப்புற புரண்டிருக்கின்றது. இதனாலயே அவர் லேசாக தலையில் இடித்துக் கொண்டிருக்கின்றார். ஷூட்டிங்கிற்காக செல்லும்போதே வழியில் இந்த பெரும் விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!

திடீரென அவரது பாதையில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் குறுக்கிட்டிருக்கின்றார். ஆகையால், காரை கட்டுப்படுத்த முடியாமல் அவர் பெரிய பள்ளத்தில் விழுந்து விபத்தைச் சந்தித்திருக்கின்றார். அவர் சற்று அதிக வேகத்தில் வந்ததும் காரைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதற்குக் காரணமாக இருக்கின்றது.

விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!

டாடா பஞ்ச் சுமார் 8 அடிக்கும் அதிகமான ஆழத்தில் பள்ளத்தில் விழுந்திருக்கின்றது. சம்பவத்தின்போது அருகில் இருந்த அப்பகுதி வாசிகள் பாடகியை பத்திரமாக மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்திருக்கின்றனர். சம்பவம்குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் காரை பத்திரமாக ரெக்கவரி வேன் மற்றும் டிராக்டர் உதவியுடன் மீட்டெடுத்தனர்.

விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!

இந்த விபத்தில், அவர் சிறு காயமும் அடையவில்லை அந்த பகுதி வாசிகள் ஆச்சரியத்துடன் தெரிவித்திருக்கின்றனர். மேலும், அவராகவே காரை விட்டு பாதுகாப்பாக வெளி வந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், முன்னெச்சரிக்கையாக அவர் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்.

விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!

டாடா பஞ்ச் காரின் ஆரம்ப நிலை வேரியண்டிலேயே பன்முக பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில், டூயல் ஏர் பேக் முன் பக்கத்திலும், ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் ஆங்கர் உள்ளிட்ட எக்கசக்க அம்சங்கள் பஞ்சில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, எந்தமாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கக் கூடிய திறனில் இக்காரை டாடா மோட்டார்ஸ் உருவாக்கியுள்ளது.

விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!

டாடா மோட்டார்ஸ் இந்த காரை அதன் புகழ்பெற்ற ஆல்ஃபா பிளாட்பாரத்தில் வைத்தே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இதே பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே அல்ட்ராஸ் காரையும் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாருடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகள் ஆப்ஷனலாக வழங்கப்படுகின்றது.

விபத்தில் சிக்கிய பாடகியின் டாடா பஞ்ச் கார்... ஹைலைட் என்னனா அவங்களுக்கு சின்னத ஒரு கீரல்கூட ஏற்படல!

ரூ. 5.93 லட்சம் என்ற மிகக் குறைவான விலையிலேயே டாடா பஞ்ச் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் அக்காரின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்தளவு மலிவு விலையில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்ற காரணத்தினாலேயே இந்தியர்களின் ஃபேவரிட் காராக பஞ்ச் மாறியிருக்கின்றது. மேலும் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகவும் மாற தொடங்கியிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Singer and actress soma laishram tata punch mets accident near mizoram
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X