ரியர் வியூ கேமரா, நேவிகேஷன் வசதிகளுடன் புதிய ஹெல்மெட் அறிமுகம்!

By Saravana

கார்களில் நவீன தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாகி வருவதில் வியப்பேதுமில்லை. ஹெட் அப் டிஸ்ப்ளே கொண்ட விண்ட் ஷீல்டு, நேவிகேஷன் சாதனம் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற நவீன வசதிகள் தற்போது கார்களில் சர்வசாதாரணமான விஷயங்களாகிவிட்டன.

ஆனால், பைக்குகளில் செல்வோர்க்கு இத்தகைய வசதிகளை பெறுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. இதை போக்கும் விதத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஸ்கல்லி என்ற நிறுவனம் ஸ்கல்லி ஏஆர்1 என்ற பெயரில் பைக் ரைடர்களுக்கான புதிய ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது.


 ஹெட் அப் டிஸ்ப்ளே(HUD)

ஹெட் அப் டிஸ்ப்ளே(HUD)

ஹெல்மெட்டின் வைசர் கண்ணாடியில் ஹெட் அப் டிஸ்ப்ளே திரை ஒன்று வலது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பார்வையை மறைக்காதவாறு இந்த ஹெட் அப் டிஸ்ப்ளே திரையில் பல்வேறு தகவல்களை பெற முடியும்.

 ரியர் வியூ கேமரா

ரியர் வியூ கேமரா

பின்புறம் வரும் வாகனங்கள் மற்றும் ஓவர்டேக் செய்யும் வாகனங்களை கழுத்தை திருப்பாமல் பார்ப்பதற்கு வசதியாக ரியர் வியூ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமரா 180 டிகிரி கோணத்தில் பின்னால் மற்றும் பக்கத்தில் வரும் வாகனங்களை படம் பிடித்து வைசர் திரையில் காட்டும். இதன்மூலம், எச்சரிக்கையாக பைக்கை ஓட்ட முடியும்.

நேவிகேஷன் வசதி

நேவிகேஷன் வசதி

மேலும், வழிகாட்டும் தகவல்களையும் இந்த வைசரில் உள்ள ஹெட் அப் டிஸ்ப்ளே திரை மூலம் பெறலாம். முன்னால் இருக்கும் திருப்பங்கள், சந்திப்புகள் குறித்து முன்கூட்டியே இந்த திரையின் மூலம் நாம் தெரிந்து கொண்டு செல்லலாம்.

ஸ்மார்ட்போன் இணைப்பு

ஸ்மார்ட்போன் இணைப்பு

இந்த ஸ்கல்லி ஹெல்மெட்டில் இருக்கும் கருவியை புளுடூத் மூலம் உங்களது ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொள்ளலாம். பைக் ஓட்டும்போது அழைப்புகள் வந்து தொந்தர கொடுத்தால் புளுடூத்தை அணைத்துவிட்டு பயணத்தை தொடரலாம்.

 வாய்மொழி வசதி

வாய்மொழி வசதி

மியூசிக் சிஸ்டம், போனில் எஸ்எம்எஸ் அனுப்புவது, அழைப்புகள் செய்வது போன்றவற்றை வாய்மொழி உத்தரவுகள் மூலமாக கட்டுப்படுத்த முடியும். மேலும், நேவிகேஷன் சாதனத்தில் சென்று சேரும் இடத்தையும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும்.

 முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

இலகு எடையும், சிறப்பான ஏரோடைனமிக் டிசைன்

நல்ல காற்றோட்டமான உட்புறம்

கீறல்கள், எதிரொலிப்புத்தன்மை இல்லாத வைசர்

ஜிபிஎஸ் நேவிகேஷன்

180டிகிரி ரியர் வியூ கேமரா

புளூடூத் இணைப்பு வசதி

ஸ்மார்ட்போன் வழியாக இன்டர்நெட் இணைப்பு வசதி

 சோதனை திட்டம்

சோதனை திட்டம்

தற்போது இந்த பிரத்யேக ஹெல்மெட்டை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து கருத்துக்களை கேட்டறியும் முயற்சியில் ஸ்கல்லி நிறுவனம் இறங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இணையதளத்தில் விற்பனைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது. 1,000 டாலர் விலையில் இந்த புதிய ஹெல்மெட் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

கவனச்சிதறல் இல்லாமல் பைக் ரைடர்களுக்கு மிகுந்த பாதுகாப்பான பயணத்தை இந்த ஹெல்மெட் வழங்கும் என ஸ்கல்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லைவ்மேப் ஹெல்மெட்

லைவ்மேப் ஹெல்மெட்

ரஷ்யாவை சேர்ந்த வல்லுனர்கள் வடிவமைத்த நேவிகேஷன் திரையுடன் கூடிய லைவ்மேப் ஹெல்மெட் விபரங்களை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

Most Read Articles
Story first published: Monday, July 7, 2014, 14:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X