Just In
- 4 hrs ago
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- 5 hrs ago
மாருதியின் இந்த 3 தயாரிப்புகளுக்குதான் இந்தியாவில் டிமாண்ட் மிக மிக அதிகம்... வேற லெவல்ல விற்பனையாகியிருக்கு!
- 16 hrs ago
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- 19 hrs ago
நடிகர் அஜித் விரும்பி ஃபோட்டோ எடுத்து கொண்ட காரில் இத்தனை ஸ்பெஷல் இருக்கா!! ஃபேன்ஸ் ஆராய்ச்சில இறங்கிட்டாங்க!
Don't Miss!
- News
2 பக்கமும் வளைக்க பிளான்.. "கிடைக்கிற கேப்பில் எல்லாம்".. எடப்பாடிக்கு "கேட்" போடும் திமுக? போச்சே!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- Movies
பிரபாஸ் படத்தில் நடிக்க அந்தவொரு கண்டிஷன் மட்டும் தான் போட்டேன்.. நடிகர் பிருத்விராஜ் ஓப்பன் டாக்!
- Finance
தல தோனியிடம் உள்ள விலை உயர்ந்த 5 ஆடம்பர கார்கள்!
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Technology
பழைய பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா? இ-பாஸ்போர்ட் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
வாகனம் ஓட்டும் போது மது மட்டுமல்ல இதையும் செய்யக் கூடாது... மீறிச் செய்தால் இனி நீங்க ஓட்ட முடியாம போயிடும்
இந்தியாவில் வாகனம் ஓட்டும் போது சிகெரட் பிடிக்கக்கூடாது என்ற சட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. ஆனால் யாருக்கும் இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு பெரியதாக இல்லை மது குடித்தால் மட்டுமே தவறு என நினைக்கிறார்கள். இந்த சட்டம் குறித்த முழு விபரங்களைக் கீழே காணுங்கள்.

இந்தியாவில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்துத் துறையின் சார்பில் லைசென்ஸ் வழங்கப்படுகிறது. வாகனம் ஓட்ட லைசென்ஸ் வாங்க ஒருவர் விண்ணப்பித்தால் அவருக்கு சில டெஸ்ட்கள் வைக்கப்படும் அதில் தேர்ச்சி பெற்றால் தான் லைசென்ஸ் வழங்கப்படும். ஒவ்வொரு வகையான வாகனங்களுக்கும் ஒவ்வொரு விதமாக லைசென்ஸ் வழங்கப்படுகிறது.

இதே போல ஓட்டுநர்களுக்கு சில விதிமுறைகள் உள்ளது. வாகனத்தை இப்படியான விதிமுறைகளை பின்பற்றித்தான் கட்டாயம் ஓட்ட வேண்டும். சாலை விதிகளை முழுவதுமாக பின்பற்றினால்தான் ஒரு நபர் விபத்தை ஏற்படுத்தினால் வாகனத்தை ஓட்ட முடியும் என்பதால் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக வாகனத்தை ஓட்டும் நபர்கள் மது அருந்தியிருக்கக் கூடாது. அப்படியாக அவர் மது அருந்தியிருந்தால் அன் சுய நினைவில் இருக்கமாட்டார். அதனால் அவரால் வாகனத்தை நேர்த்தியாக ஓட்ட முடியாது. இது விபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் பலருக்கு தெரியாத ஒரு சட்டம் இருக்கிறது. கார் ஓட்டும் போது சிகரெட் பிடிப்பது சட்டப்டி குற்றம் என மோட்டார் வாகன சட்டம் சொல்கிறது. பலருக்கு இந்த செய்தி தெரியாது. நம்மில் பலர் கார் ஓட்டும் போது புகைபிடிக்கும் நபர்களைப் பார்த்திருப்போம். வாகனம் ஓட்டும் போது மது தானே குடிக்கக் கூடாது புகைபிடிக்கலாம் என நினைத்திருப்போம்.

ஆனால் வாகனம் ஓட்டும் போது புகைபிடிப்பதும் சட்டப்படி குற்றம் தான் இந்திய மோட்டார் வாகன சட்டம் 1989 விதி எண் 24 (14) படி சிகரெட் பிடித்துக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது சட்டப்படி குற்றம். எனச் சட்டம் சொல்கிறது. இது மட்டுமல்ல இதற்கான விளக்கத்தையும் விதி எண் 21 (6)ல் கொடுத்துள்ளது.

அதன்படி வாகனம் ஓட்டும் போது சிகரெட் பிடிப்பது வாகனம் ஓட்டுவதில் உள்ள கவனத்தைத் திசை திருப்பும் மேலும் இது சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அதனால் வாகனத்தை ஓட்டிச் செல்லும் நபர் வாகனத்தை ஓட்டும் போது புகைப்பிடிக்கூடாது என்று விளக்கம் சொல்லப்பட்டுள்ளது

இது மட்டுமல்ல இதற்குத் தண்டனையையும் சட்டமே சொல்கிறது. இப்படியாக சிகரெட் பிடித்துக்கொண்டு வாகனம் ஓட்டினால் அவரை லைசென்ஸ்சையே ரத்து செய்யவும் குறிப்பிட்ட நபர் இனி வாகனம் ஓட்ட முடியாதபடி அவரை தகுதி நீக்கம் செய்யவும் போக்குவரத்துத் துறை அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இப்படியான சோதனைகள் குறைவாக நடப்பதால் இந்த சட்டம் குறித்த விழிப்புணர்வு பலருக்கு இல்லை.

ஆனால் அவ்வப்போது இதற்கான சோதனைகளும் நடந்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் பல இடங்களில் இதற்கு முன்னர் இதற்கான சோதனைகள் நடந்துள்ளது. பலர் சிகரெட் பிடித்து வாகனம் ஓட்டி வந்துபிடிட்டுள்ளனர். அவர்கள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

சோதனை செய்யும் போது பெரும்பாலும் போலீசாரே வாகன தணிக்கையில் ஈடுபட்டு ஆவணங்களைச் சோதனை செய்கின்றனர். போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனைகளில் தொடர்ந்து ஈடுபடுவது கிடையாது. இந்நிலையில் போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் போது இப்படியாக யாராவது சிகரெட் பிடித்துக் கொண்டு வாகனம் ஓட்டும் போது பிடிபட்டால் குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசார் போக்குவரத்துத் துறைக்குப் பரிந்துரை செய்வார்கள்.

அந்த பரிந்துரை வந்த பின்பு போக்குவரத்துத் துறை அதிகாரி குறிப்பிட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவார். மேலும் போலீஸ் அதிகாரிகளிடம் குறிப்பிட்ட நபர் எந்த இடத்தில் எந்த நேரத்தில் இந்த விதிமுறை மீறலில் ஈடுபட்டார் எனக் கேட்டு அதற்கான ஆதாரங்களைக் கேட்டுப் பெறுவார்கள். அப்படியான ஆதாரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரி குறிப்பிட்ட நபரின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவோ தற்காலிகமாக நிறுத்தி வைக்கவோ அதிகாரம் உள்ளது. இந்த தகவல் உங்களுக்குப் புதிதாக உள்ளதா? இது போன்று உங்களுக்கு வேறு தகவல்கள் தெரியுமா? கமெண்டில் சொல்லுங்கள்
-
கூரையை பிச்சுகிட்டு புக்கிங் கொட்டுது! அதுக்குள்ள இவ்ளோ பேர் புக் பண்ணீட்டாங்களா? படம் காட்டும் ஹூண்டாய் கார்!
-
அமெரிக்காவில் ரூ20 லட்சம் தான்... ஆனால் அதே கார் இந்தியாவில் ரூ50 லட்சம் ஏன் தெரியுமா?
-
சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த பிரபல நிறுவனத்தின் மின்சார கார்! அட இந்த காருக்கா இப்படி ஒருநிலைமை ஆகியிருக்கு?