ஆல்ட்டோவை ஆடி கார் ரேஞ்சுக்கு மாற்றுவதற்கான ஆக்சஸெரீகள்!!

By Saravana

காரில் எவ்வளவு வசதிகள் இருக்கிறதோ, அதற்கேற்றாற்போல் அதன் மதிப்பும் அதிகரிக்கிறது. இந்தநிலையில், பட்ஜெட்டை எண்ணி குறைவான விலை கார் வாங்கி விட்டோமே என்று எண்ணுகிறவர்களுக்கு ஏதுவாக, சூப்பரான சில ஆக்சஸெரீகளை இங்கே காணலாம்.

இந்த கார் ஆக்சஸெரீகள் நிச்சயம் உங்களின் காரின் மதிப்பை கூட்டுவதோடு, மிகுந்த பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.

01. க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்

01. க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம்

பட்ஜெட் கார்களாக இருந்தால் டாப் வேரியண்ட்டில் கூட இதனை நினைத்து பார்க்க முடியாது. ஆனால், இப்போது குறைவான விலையில் வெளிப்புற வெப்ப நிலைக்கு தகுந்தாற்போல், கேபினில் குளிர்ச்சியை தக்க வைக்கும் சாதனத்தை வாங்கி உங்களது காரில் பொருத்திக் கொள்ள முடியும். மேலும், இந்த சாதனத்தை பொருத்துவதற்கு கால் மணி நேரம் போதுமானது. க்ளைமேட் கன்ட்ரோல் சாதனம் ரூ.5,000 விலையில் கிடைக்கிறது.

02. கார் கூலர்

02. கார் கூலர்

விலையுயர்ந்த கார்களில் மட்டுமே குளிர்பானங்கள் மற்றும் திண்பண்டங்களை கெடாமல் வைத்துக் கொள்வதற்கான குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இருப்பதை கண்டிருப்பீர்கள். ஆனால், தற்போது கார் கூலர் என்ற இந்த சிறிய அளவிலான குளிர்சாதன பெட்டியை தனியாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். நீண்ட தூர பயணங்களின்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

03. எல்இடி ஹெட்லைட்ஸ்

03. எல்இடி ஹெட்லைட்ஸ்

எல்இடி ஹெட்லைட்டுகளை எளிதாக வாங்கி பொருத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விதமான கார் மாடல்களுக்கும் இப்போது எல்இடி ஹெட்லைட்ஸ் கிடைக்கிறது. ரூ.20,000 விலையில் எல்இடி ஹெட்லைட் கிட்டை வாங்கி பொருத்தலாம்.

04. ஜிபிஎஸ் வழிகாட்டு சாதனம்

04. ஜிபிஎஸ் வழிகாட்டு சாதனம்

கார் வைத்திருப்பவர்கள் அலுவலக விஷயமாகவோ அல்லது குடும்பத்தினருடன் அடிக்கடி வெளியிடங்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களுக்கு இந்த ஜிபிஎஸ் நேவிகேஷன் சாதனம் மிக உதவிகரமானதாக இருக்கும். துல்லியமான வழித்தட விபரங்களுடன், அருகிலுள்ள பெட்ரோல் நிலையம், ஓட்டல், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்ட பல தகவல்களை பெறுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

05. டயர் பிரஷர் சென்சார்

05. டயர் பிரஷர் சென்சார்

காருக்கு தேவையான மிக முக்கியமான பாதுகாப்பு ஆக்சஸெரீயாக இதனை கூறலாம். டயரில் காற்றழுத்தம் குறித்த எச்சரிக்கையை துல்லியமாக பெற முடியும். டயர் பிரஷர் சென்சார்களை தூசி படியாமல் தடுக்கும் மூடிகக்கு பதிலாக பொருத்திவிடலாம். ரூ.5,000 முதல் ரூ.20,000 வரையிலான விலையில் டயர் பிரஷர் மானிட்டரிங் சென்சார் கிடைக்கிறது.

06. புளுடூத் கிட்

06. புளுடூத் கிட்

ஸ்மார்ட்போன் இல்லாத கைகளே இல்லை எனும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. அதுவும், கார் ஓட்டும்போதும் சிலர் மொபைல்போனில் ஒரு கண் வைத்துக் கொண்டே செல்வதால், கவனக்குறைவால் விபத்து ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக, இப்போது புளூடூத் சாதனம் கிடைக்கிறது. போன் அழைப்புகளை எளிதாக எடுத்து பேசுவதற்கும், பொழுது போக்கு சாதனத்தை இயக்குவதற்கும் பயன்படுகின்றன. மேலும், நேவிகேஷன் சாதனத்தின் வாய்மொழி தகவல்களையும் இதன்மூலம் பெற முடியும். ஒவ்வொரு காரிலும் இருக்க வேண்டிய அவசியமான ஆக்சஸெரீயாக மாறிவிட்டது.

07. ஹெட் அப் டிஸ்ப்ளே

07. ஹெட் அப் டிஸ்ப்ளே

சொகுசு கார்களிலேயே அரிதாக இருக்கும் இந்த ஹெட் அப் டிஸ்ப்ளே, காரின் வேகம் உள்ளிட்ட தகவல்களை விண்ட் ஸ்கிரீனில் தெரிவிக்கும். அடிக்கடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலை பார்க்க தேவையிருக்காது. தற்போது வெளிச்சந்தையில் சல்லுசான விலையில் இந்த ஹெட் அப் டிஸ்ப்ளே யூனிட் கிடைக்கிறது. இதற்கான ஆன்போர்டு கம்ப்யூட்டர் சாதனத்துடன், இதற்கான டிரான்ஸ்மீட்டரை இணைத்துவிட்டால், புரொஜெக்டர் மூலமாக விண்ட் ஸ்கிரீனில் தகவல்களை காட்டும். புரொஜெக்டரை டேஷ்போர்டில் வைத்துவிடலாம். ரூ.10,000 விலையில் இந்த யூனிட்டை வாங்கி பொருத்திவிடலாம்.

08. கார் சார்ஜர்

08. கார் சார்ஜர்

மொபைல்போன் மற்றும் லேப்டாப் பயன்படுத்துவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தரமான கார் சார்ஜர்கள் ரூ.1,500 விலையில் கிடைக்கிறது. காருக்கு அத்தியாவசியமான ஓர் ஆக்சஸெரீயாகவே இதனை கூறலாம்.

Most Read Articles
English summary
Some Cool Accessories For Budget Cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X