அம்பாசடர் கார் பற்றி 9 சுவாரஸ்ய விஷயங்கள்!

By Saravana

நீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில் அம்பாசடர் காரில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பயணம், எனது பழைய பயண நினைவுகளை மனதில் இழுத்து வந்து போட்டு கொண்டாடியது.

அதன் பிறகு மனதும், கையும் சும்மா இருக்குமா என்ன? அனைவருக்கும் தம்பியாக இருந்த அம்பியை பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் வழங்குகிறோம்.

ரீபேட்ஜ் மாடல்

ரீபேட்ஜ் மாடல்

இந்தியாவில் முதல் காரை தயாரித்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் மோரிஸ் ஆக்ஸ்போர்டு கார்களை ரீபேட்ஜ் செய்து வெளியிட்டு வந்தது. அதில், தலைமுறை முன்னேற்றங்களுடன் அறிமுகம் செய்த மூன்றாவது மாடல் அம்பாசடர் என்ற பெயரில் வந்தது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் முதலில் வெளியிட்ட மாடல் ஹிந்துஸ்தான் 10 மற்றும் இரண்டாவது மாடலான ஹிந்துஸ்தான் 14 அல்லது லேண்ட்மாஸ்டர் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டன. லேண்ட்மாஸ்டருக்கு மாற்றாக வந்ததுதான் அம்பாசடர்.

ஆக்ஸ்போர்டு கார்

ஆக்ஸ்போர்டு கார்

இங்கிலாந்தின், மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு சீரிஸ்III கார் ரீ- பேட்ஜ் செய்யப்பட்டு அம்பாசடர் என்ற பெயரில் முதல்முதலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

03. உற்பத்தி

03. உற்பத்தி

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார். குஜராத் மாநிலம், போர்ட் ஒகா என்ற இடத்தில் அமைக்கப்பட்ட ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது. 1948ம் ஆண்டு குஜராத்திலிருந்து, மேற்கு வங்க மாநிலம் உத்தரபாராவிற்கு புதிய ஆலையில் உற்பத்தி மாற்றப்பட்டது. அங்கு 1958ம் ஆண்டு முதல் அம்பாசடர் காரின் உற்பத்தி துவங்கியது.

04. முதல் டீசல் கார்

04. முதல் டீசல் கார்

இந்தியாவின் முதல் டீசல் கார் மாடலும் அம்பியின் முன்னோரான ஹிந்துஸ்தான் 10 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரில் 1,489சிசி கொண்ட பி சீரிஸ் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.

05. விற்பனை

05. விற்பனை

மொத்த விற்பனையில் 16 சதவீதம் அரசுத் துறைகளிலிருந்துதான் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸுக்கு கிடைத்தது. அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளின் முதல் சாய்ஸ் அம்பாசடர். அவர்களுக்கு மட்டுமல்ல ஏழைகளின் சொகுசு ரதமாகவும், அவசர கால ஊர்தியாகவும் பட்டிதொட்டியெல்லாம் சேவைபுரிந்தது.

06. உற்பத்தி சாதனை

06. உற்பத்தி சாதனை

கடந்த 1984ம் ஆண்டில் அம்பாசடர் உற்பத்தி ஒரு லட்சத்தை கடந்தது. அதைத்தொடர்ந்து, 2004ம் ஆண்டில் 9 லட்சம் என்ற விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது.

07. சிறந்த டாக்சி

07. சிறந்த டாக்சி

கடந்த 2013ம் ஆண்டு உலகின் சிறந்த டாக்சி என்ற கவுரத்தை அம்பாசடர் காருக்கு டாப் கியர் வழங்கியது.

09. ஏற்றுமதி

09. ஏற்றுமதி

இங்கிலாந்திலிருந்து பெறப்பட்ட அம்பாசடர், இந்தியாவில் பெரும் வெற்றியை பதிவு செய்தது. 1993ம் ஆண்டு வரை மேற்கு வங்கத்திலிருந்த ஆலையிலிருந்து இங்கிலாந்துக்கு அம்பாசடர் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அங்கேயும் விற்பனை குறைந்ததையடுத்து, ஏற்றுமதி நிறுத்தப்பட்டது.

08. விற்பனை மந்தம்

08. விற்பனை மந்தம்

விண்டேஜ் அந்தஸ்து பெற்ற அம்பாசடர் கார் நவீன யுக கார் மாடல்களுடன் விற்பனையில் போட்டி போட முடியாமல் பின்தங்கியது. இதனால், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதுடன், கடந்த 2014ம் ஆண்டு அம்பாசடர் கார் உற்பத்தியை நிறுத்தியது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Some Interesting Facts About Ambassador Car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X