உங்கள் காருக்கு உள்ளேயே இருக்க கூடிய ஆபத்துகள்: விபத்தை தவிர்க்க உடனே தூக்கி வீசிடுங்க!

உங்களது காரில் உள்ள தேவையற்ற பொருட்கள், உங்களது பயணத்தை விபரீதாமானதாக மாற்றலாம். ஆகையால், உங்கள் காரில் உள்ள தேவையற்ற பொருட்களைக் கண்டறிந்து அவற்றை காரில் இருந்து தூக்கி வீசிடுங்கள். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

கார் டிப்ஸ்

பயணம், யாரும் வெறுக்காத ஒன்று. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் கிளம்ப கூடிய ஒரு விஷயம் தான் பயணம். இதை வெறுப்பவர்கள் யாரும் இறுக்க மாட்டார்கள். குடும்பத்தில் ஒற்றுமையையும் சந்தோஷத்தையும் சில பயணங்களே உறுதியாக்குகின்றன. அந்த வகையில் நாம் ஒவ்வொரு முறையும் பயணிக்கும்போது, அது நம்முடைய சந்தோஷத்தை மட்டுமே தரக்கூடியாத பயணம் இருக்க வேண்டும். அதைத்தான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள்.

அந்த வகையில் உங்களுடைய அன்றாட பயணம், நீங்காத சந்தோஷத்தை மட்டுமே தரவேண்டும். மாறாக நம்முடைய பயணம் ஆறாத வலியையும், வடுவையும் தரக்கூடாது. அவ்வாறு, நாம் ஒவ்வொருமுறையும் பயணத்தை தொடங்கும் முன்பும் நம்முடை காரில் எரிபொருள் இருப்பதை பரிசோதித்து பார்ப்பதைப் போல, சில பொருட்கள் வாகத்தில் இருந்தால் அவற்றை வெளியேற்றிவிட வேண்டும். இல்லையென்றால் அந்த பொருளே நமக்கு எமனாக அமையும் சூழல் ஏற்பட்டுவிடும். அவை எவையென்றும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்த பதிவில் பார்ப்போம்.

நாம் கீழே பார்க்கக்கூடிய தகவல்கள், சினிமா திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் என நினைக்காதீர்கள். ஏனென்றால் இதுபோன்ற சம்பவங்கள் நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு அரங்கேறியுள்ளது. அதை வெளியுலகில் கூறுவதற்கு அவர்கள் தான் இருக்க மாட்டிக்கிறார்கள். ஆனாலும், இதுபோன்ற சம்பவங்களை

கார் டிப்ஸ்

உருண்டுச் செல்லக்கூடிய பொருட்கள்:

முதலில் காரில் உருண்டு ஓடக்கூடிய பொருட்களைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அத்தைகய பொருள் உங்களின் வாகனக் கட்டுப்பாட்டை இழக்க வைத்து பெரும் விபத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, நாம் அதிவேகமாக சாலையில் சென்றுக்கொண்டிருக்கிறோம் என வைத்துக்கொள்வோம். அப்போது, சாலையில் எதிர்புறமாக அதிவேகமாக வந்த வாகனம், ஓவர் டேக் செய்கிறது. இதனால் நிலைதடுமாறி கார், அருகில் இருக்கும் பள்ளத்தில் கவிழும் சூழல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் காரில் குலுங்கல் காரணமாக காரில் இருந்த உருளை வடிவிலான பொருள் தண்ணீர் பாட்டில், பந்து உள்ளிட்ட ஏதேனும் ஒன்று, உருண்டுச்சென்று பிரேக் பெடலுக்கு கீழே சிக்கிக்கொள்ளும். இதனால், காரை உடனடியாக நிறுத்த முடியாமல் கட்டுப்பாடை இழந்து பெரும் விபத்து ஏற்படும். ஆகையால் காருக்குள் இருக்கும் இதுபோன்ற பொருட்களை தவிர்ப்பது நமது பயணத்துக்கு ஆரோக்கியமானாதாக அமையும்.

கார் டிப்ஸ்

இருக்கமற்ற காலணிகளை தவிர்த்தல்:

காரில் பயணிக்கும் போது வழுக்கக்கூடிய காலணிகளை பயன்படுத்த வேண்டாம். இதுவும் உங்களது ஜாலியான பயணத்தை நொடிப்பொழுதில் ஆறாத வடுவினை ஏற்படுத்திவிடும். ஏனென்றால் உங்களுடைய வழுக்கக் கூடிய செருப்புகள் நீங்கள் அதிவேகமாக சென்றுக்கொண்டிருக்கும்போது, சட்டென பிரேக் பிடிக்கும் சூழல் ஏற்படும். அந்த நேரத்தில் ஏற்படும் பதட்டம் காரணமாக, உங்களது செருப்பு வழுக்கி பிரேக் பிடிக்க முடியாமல் விபத்து ஏற்படும்.

கார் டிப்ஸ்

அதேபோல், நீங்கள் ஷூ அணிபவராக இருந்தால் உங்களது ஷூ லேஸை முறையாக கட்டிச் செல்லுங்கள். இல்லையேல் உங்களது ஷூ லேஸ் பிரேக் ஆக்ஷலேட்டரில் சிக்கி விபத்தை உண்டாக்கலாம். மேலும், உங்களுடைய ஷூவை வாகனத்தை இயக்கும்போது கழட்டிவிடவும் வேண்டாம். அது உங்களது பிரேக் பெடல் கீழே சிக்கி, தேவைப்படும்போது பிரேக் பிடிக்க முடியாமல் சிக்கலை ஏற்படுத்தும். ஆகையால் பயணத்தின்போது முறையான காலணிகளை அணிந்து சென்றால் பயணம் இனிதாய் அமையும்.

கார் டிப்ஸ்

பழைய அல்லது மலிவான ஸ்டியரிங் மேலுறை:

உங்களது கார் பழைய காராக இருக்கலாம் ஆனால், உங்கள் காரில் உள்ள அத்தியாவசியமான பொருட்களை பழையதாக வைத்திருக்க வேண்டாம். அதன்படி, உங்களது காரின் ஸ்டியரிங் பழையதாக இருந்தால் சிறந்த பிடிமானம் இல்லாமல் வழுவழுப்பை ஏற்படுத்திவிடும். இதன்காரணமாக கார் வேகமாக சென்றுக்கொண்டிருக்கும்போது உங்களால் சரியான பாதையில் செலுத்த முடியாமல் விபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை உருவாக்கும். ஆகையால், உடனடியாக உங்களது காரில் உள்ள பழைய பொருட்களை மாற்றிவிட்டு உடனடியாக புத்தம் புதிய கைப்பிடியை மாற்றிக் கொள்ளுங்கள். இது உங்களின் சிறந்த பயண அனுபவத்தை ஏற்படுத்தும்.

கார் டிப்ஸ்

பழைய அல்லது பொருத்தமற்ற கார் மேட்:

காரில் உள்ள மேட்களை நீண்டகாலாமாக பயன்படுத்துவதன் காரணமாக, அந்த மேட் நலிவுத்தன்மையை இழந்துவிடுகிறது. மேலும், ஆங்காங்கே முடுக்கிக்கொண்டும் இருக்கும். இதனால் உங்களால் ஆக்ஷலரேஷன், பிரக் மற்றும் கிளட்ச் பெடலை சரியாக செயல்படுத்த முடியாத சூழல் ஏற்படும். இதைத்தவிர்க்க உடனடியாக புத்தம் புதிய, ஃபிளாட்டான மேட்களை வாங்கி பயன்படுத்துங்கள். அதேபோல், ஒவ்வொரு முறையும் மேட்டை சுத்தம் செய்துவிட்டு சரியான முறையில் மேட்டை விரித்து போடவும். இதைப் பரிசோதித்த பின்னர் காரை எடுத்துச் செல்லுங்கள். ஏனென்றால், அவசர புத்தி காரணமாக நாம் செய்யும் சிறு தவறும், மிகப்பெறிய விபரீதத்தை ஏற்படுத்திவிடும்.

கார் டிப்ஸ்

முறையாக சீட்டில் அமர்ந்து வகாகனத்தை இயக்கவேண்டும்:

காரை இயக்கும்போது முறையாக சீட்டில் அமர்ந்து வேகனத்தை இயக்கவேண்டும். ஏனென்றால், காரை இயக்கும்போது சாய்வாகவோ அல்லது குனிந்தபடியோ காரைச் இயக்கும்போது, வாகனத்தின் முன்பக்கத்தில் சாலை சரியாக தெரியாது. அதேசமயம், கால்களுக்கு பிரேக், ஆக்ஷலரேட் ஆகியவை எட்டாமல், பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். இதுபோன்ற நேரங்களில் உடனடி கட்டுப்பாட்டைப் பெறமுடியாமல் விபத்து உள்ளிட்ட பல்வேறு விபரீதங்கள் ஏற்படும்.

கார் டிப்ஸ்

அதிவேகமாக காரைச் செலுத்துவது:

முக்கியமாக வாகனத்தில் பயணிக்கும்போது சீல்ட் அணிந்துக்கொண்டு பாதுகாப்பாக பயணியுங்கள். அதேசமயம், வாகனத்தை அதிவேகமாக செலுத்தாமல், கட்டுப்படுத்தும் வேகத்தில் செல்லுங்கள். இது உங்களது பயணத்தை சிறந்ததாக மாற்றும். அதே சமயம் உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் குடும்பத்திடம் சரியான நேரத்திற்குள் சென்றுவிடலாம்.

மேற்கூறியதன்படி, உங்களது வாகனத்தில் இருக்கும் அத்தியாவசியம் அற்ற பொருட்களை அகற்றிவிட்டு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்துங்கள். இது உங்களையும், உங்களைச் சார்ந்தவர்களையும் சந்தோஷமாக வைக்க உதவும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Some Of Your Unwanted Things Can Cause Car Crashes. Read In Tamil.
Story first published: Monday, February 11, 2019, 13:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X