Just In
- 2 hrs ago
ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
- 9 hrs ago
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- 11 hrs ago
சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரும் பஜாஜ்!! விலை உயரவுள்ளதா?
- 14 hrs ago
டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தனியாக சாலை அமைத்த மக்கள்!
Don't Miss!
- News
ஆக்சிஜன் பெட் தட்டுப்பாடு.. ரெம்டிசிவிர் மருந்து இல்லை.. டாக்டர்கள் போராட்டம்.. எங்க தெரியுமா?
- Sports
எவ்வளவு திமிர்.. அவரை ஓரம்கட்டிட்டு இப்ப போய் புலம்பினா எப்படி? வார்னரை வறுத்தெடுக்கும் பேன்ஸ்!
- Finance
தொலைந்து போன ஏடிஎம்மினை எப்படி பிளாக் செய்வது.. கனரா வங்கியில் மிக எளிது..!
- Movies
'மாநாடு' சிம்பு, வெங்கட் பிரபுவுக்கு பெரிய மைக் கல்லா இருக்கும்...சொல்றது இவர் தான்
- Lifestyle
தமிழ் புத்தாண்டைப் பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்!
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தந்தையின் பிறந்த நாளில் மகன் கொடுத்த ஆச்சரிய பரிசு... எத்தனை பேருக்கு இப்படி கிடைக்கும் சொல்லுங்க?
தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு மகன் ஆச்சரிய பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நடுத்தர வர்க்க மக்களை பொறுத்தவரை, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு புதிய காரை பரிசாக வழங்குவது என்பது மிகப்பெரிய விஷயம். நமது நாட்டில் நிறைய வாகனங்களில் அப்பாவின் பரிசு, அம்மாவின் பரிசு என்பது போன்ற ஸ்டிக்கர்களை பார்க்க முடியும். ஆனால் அதே அளவிற்கு பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு வாகனங்களை பரிசளிக்கிறார்களா? என்பது சந்தேகமே.

எனினும் ஒரு சிலர் தங்கள் அப்பாவிற்கு கார்களை பரிசாக வழங்கிய மகிழ்ச்சியான நிகழ்வுகள் பலவற்றை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பதிவு செய்துள்ளது. இந்த வரிசையில் மகன் ஒருவர் தனது தந்தைக்கு புத்தம் புதிய கியா செல்டோஸ் காரை பரிசாக வழங்கியிருக்கும் செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது. அதனை இந்த பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Jazba Darshan Doshi என்பவரின் யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. புதிய கியா செல்டோஸ் காரை பரிசாக வழங்கி அவர் எப்படி தனது தந்தையை ஆச்சரியப்படுத்தினார்? என்பதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. தனது தந்தையின் 60வது பிறந்த நாளில் இந்த பரிசை அவர் தனது தந்தைக்கு வழங்கியுள்ளார்.

பிறந்த நாள் நிகழ்வை இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாற்றும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. அப்பார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் புதிய கியா செல்டோஸ் நுழைவதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. ரிப்பன்களாலும், மலர்களாலும் அந்த கார் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது கருப்பு வண்ண கியா செல்டோஸ் ஆகும்.

அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர், காருக்கு சம்பிரதாயமான சடங்குகளை செய்கிறார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே திட்டமிட்டு இந்த பரிசை பிறந்த நாள் கொண்டாடியவருக்கு வழங்கியது போல் தெரிகிறது. ஏனெனில் அவரை அழைப்பதற்கு முன்பாக அந்த குடும்பத்தை சேர்ந்த அனைவரும் காரை சூழ்ந்து விட்டனர்.

குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாது, பக்கத்து வீட்டுக்காரர்களும் அங்கே இருந்தனர். சிறிது நேரம் கழித்து, தந்தை கீழே வரும்படி அழைக்கப்பட்டார். கீழே வந்து காரை பார்த்த உடனேயே அவரது முகத்தில் உடனடியாக சந்தோஷம் மலர்கிறது. அப்போது அங்கிருந்த அனைவரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் காரின் சாவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் காரை மகிழ்ச்சியாக ஓட்டுவதையும் இந்த வீடியோவில் காண முடிகிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்த கார் செல்டோஸ்தான். ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வரும் கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு இந்திய சந்தையில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது.
தற்போதைய நிலையில் செல்டோஸ் எஸ்யூவி மட்டுமல்லாது, சொனெட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் கார்னிவல் எம்பிவி ஆகிய கார்களையும் கியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கியா நிறுவனத்தின் அனைத்து கார்களுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.