பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

அந்த காலத்து பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் தாயும், மகனும் 56,000 கிமீ பயணம் செய்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

சாதாரண டூவீலர் அல்லது கார் போன்ற வாகனங்களில் ஒரு சில நூறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்தாலே, நம்மில் பலருக்கு சலுப்பு தட்டி விடுகிறது. ஆனால் இங்கே ஒருவர் பழைய பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் சுமார் 56 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளார். அதுவும் தன் தாயை ஸ்கூட்டரின் பின்னால் அமர வைத்து கொண்டு!

பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

கடந்த 2018ம் ஆண்டு தொடங்கிய இந்த தாய், மகனின் ஆன்மீக பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தன் தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, வேலையை ராஜினாமா செய்து விட்டு, மகன் அவரை ஆன்மீக சுற்றுப்பயணம் அழைத்து சென்று வந்துள்ளார். இதற்காக அந்த மகனுக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள போகடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (41) என்பவர்தான், தனது தாய் சுதா ரத்னம்மாவுடன் (71) இந்த நீண்ட ஆன்மீக பயணத்தை, சேத்தக் ஸ்கூட்டரில் மேற்கொண்டுள்ளார். பெங்களூர் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கிருஷ்ணகுமார் வேலை செய்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை தட்சிணாமூர்த்தி உயிரிழந்தார்.

பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

இதனால் கிருஷ்ணகுமாரும், அவரது தாய் சுதா ரத்னம்மாவும் மனமுடைந்தனர். இருந்தாலும் கோயில்களுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என மகன் கிருஷ்ணகுமாரிடம், சுதா ரத்னம்மா கூறியுள்ளார். தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, பெங்களூரில் செய்து வந்த தனியார் நிறுவன வேலையை ராஜினாமா செய்து விட்டு கிருஷ்ணகுமார் ஆன்மீக பயணத்தை தொடங்கினார்.

பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

2018ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி அவர்களின் ஆன்மீக பயணம் தொடங்கியது. மைசூரில் இருந்து இருவரும் புறப்பட்டனர். அவர்கள் பயணம் செய்த பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர், கிருஷ்ணகுமாரின் தந்தை சுமார் 20 ஆண்டுகளாக பயன்படுத்தியது ஆகும். எனவே தந்தையின் நினைவாக பழைய ஸ்கூட்டரையே எடுத்துக்கொண்டு ஆன்மீக பயணத்தை தொடங்கினர்.

பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

பழைய ஸ்கூட்டர் என்றாலும், அவர்களின் பயணம் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருக்கும் முக்கியமான கோயில்களுக்கு முதலில் தனது தாயை கிருஷ்ணகுமார் அழைத்து சென்றார். பின்னர் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு இருவரும் சென்று தரிசனம் செய்தனர்.

பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

இந்தியா மட்டுமல்லாது, நேபாளம், பூடான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் உள்ள கோயில்களிலும் 2 பேரும் வழிபட்டனர். ஆக மொத்தம் இந்தியா உள்பட மொத்தம் 4 நாடுகளுக்கு அவர்கள் ஆன்மீக பயணம் செய்துள்ளனர். 2 வருடம் 8 மாதங்களுக்கு பிறகு (32 மாதங்கள்) அவர்களின் ஆன்மீக பயணம் தற்போது நிறைவடைந்துள்ளது.

பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

அவர்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மைசூர் வந்து சேர்ந்துள்ளனர். இந்த ஆன்மீக பயணம் தொடர்பாக சுதா ரத்னம்மா கூறுகையில், ''ஸ்கூட்டரில் இவ்வளவு தொலைவு பயணம் செய்தது எனக்கு சிரமமாகவே இல்லை. எனது மகன் கிருஷ்ணகுமார் பொறுமையாகதான் ஸ்கூட்டரை ஓட்டி சென்றார். நாங்கள் இரவு நேரங்களில் பெரும்பாலும் பயணத்தை தவிர்த்து விட்டோம்.

பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

அனைத்து பகுதிகளிலும் மக்கள் எவ்வித பேதமும் பார்க்காமல் எங்களுடன் பழகினர்'' என்றார். இது குறித்து கிருஷ்ணகுமார் கூறுகையில், ''நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அப்பாவிற்கு பின்னர் அம்மா மட்டுமே எனக்கான உறவு. எனது அம்மா எங்கள் வீட்டில் இருந்து பெரிய அளவில் வெளியிடங்களுக்கு பயணித்தது கிடையாது.

பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

இதனால் மன நிம்மதி தேடி கோயில்களுக்கு எல்லாம் செல்ல வேண்டும் என எனது அம்மா ஆசைப்பட்டார். எனவேதான் இந்த பயணத்தை நாங்கள் மேற்கொண்டோம். இந்த பயணத்தில் மொத்தம் 56 ஆயிரத்து 522 கிலோ மீட்டர் தொலைவு நாங்கள் கடந்துள்ளோம். எனது அம்மாவின் ஆசையை நிறைவேற்றி வைத்தது எனக்கு மன மகிழ்ச்சியை அளிக்கிறது'' என்றார்.

பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

அம்மாவுடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக வேலையை உதறி விட்டு இவ்வளவு தொலைவு பயணித்த கிருஷ்ணகுமாருக்கும், வயதான காலத்திலும் தன் கணவரின் ஸ்கூட்டரில் இவ்வளவு தூரம் பயணம் செய்த சுதா ரத்னம்மாவிற்கு சமூக வலை தளங்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பஜாஜ் ஸ்கூட்டரில் 56,000 கிமீ பயணித்த தாய், மகன்... எங்கெல்லாம் போனார்கள் என தெரிஞ்சா அசந்திருவீங்க

முன்னதாக ஸ்கூட்டரில் தாயை ஆன்மீக பயணம் அழைத்து சென்ற கிருஷ்ணகுமாருக்கு, மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதமே பாராட்டுக்களை தெரிவித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Son Took His Mother For A 56,000 KM Pilgrimage On A Scooter - Details. Read in Tamil
Story first published: Monday, September 21, 2020, 22:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X