சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சொகுசு ரக புல்லட் புரூஃப் கார்களுக்கு பதிலாக பழைய கார்கள் வழங்கப்பட இருக்கின்றன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்புப் படையை சேர்ந்த 100 கமாண்டோ வீரர்கள் கொண்ட கவச பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவர்களது குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்த வகை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

இந்த நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புப் படையின் கவச பாதுகாப்பு மத்திய அரசால் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

இதையடுத்து, அவர்களுக்கு இசட் ப்ளஸ் என்ற பாதுகாப்பு வளையம் இசட் என்ற தரத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. இனி மத்திய ரிசர்வ் போலீஸ் படைப் பிரிவினர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்க இருக்கின்றனர்.

சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

இதனால், இசட் ப்ளஸ் பாதுகாப்புக்காக அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ரேஞ்ச்ரோவர் எஸ்யூவிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக 10 ஆண்டுகள் பழமையான கார்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த கார்களில் புல்லட் புரூஃப் கட்டமைப்பு இல்லை என்று தெரிகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

இதுவரை பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருந்த ரேஞ்ச்ரோவர் எஸ்யூவி மாடல்கள் அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்டது. கண்ணி வெடி தாக்குதல், கையெறி குண்டு தாக்குதல், துப்பாக்கி சூடு உள்ளிட்டவற்றிலிருந்து உள்ளே இருப்பவர்களை பாதுகாக்கும் அம்சம் கொண்டது.

சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

ராகுல் காந்திக்கு குண்டு துளைக்காத அம்சம் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இவர்கள் அனைவருக்கும் 2010ம் ஆண்டு வாங்கப்பட்ட டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. குண்டு துளைக்காத அம்சங்கள் கொண்ட கார்களை சோனியா, ராகுல், மன்மோகன் சிங் பாதுகாப்புக்கு பயன்படுத்த சிஆர்பிஎஃப் போலீசார் கோரிக்கை வைத்துள்ளது.

சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

இந்த கார்களில் குண்டு துளைக்காத அம்சம் இல்லையெனில், யூஸ்டு கார் மார்க்கெட்டில் கிடைக்கும் பழைய 2.2 லிட்டர் சஃபாரி கார்களாகவே இதனை கருத முடியும். அவசர சமயங்களில் விரைவாக சம்பந்தப்பட்ட இடத்தைவிட்டு விஐபிகளை பாதுகாப்பாக கொண்டு செல்லும் வகையில் சக்திவாய்ந்த ரேஞ்ச்ரோவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

ஆனால், கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் பழமையான டாடா சஃபாரி கார்கள் அவசர சமயத்தில் அந்த அளவுக்கு செயல்திறனுடன் இருக்குமா என்று பாதுகாப்புத் துறை வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர். டாடா சஃபாரி எஸ்யூியில் இருக்கும் 2.2 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

சோனியா காந்தி, ராகுலுக்கு பழைய டாடா சஃபாரி கார்கள் ஒதுக்கீடு... மத்திய அரசு அதிரடி!

இந்த மாடலானது ரியர் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட தேர்வுகளில் வழங்கப்பட்டது. சஃபாரி காருக்கு மாற்றாகத்தான் சஃபாரி ஸ்ட்ரோம் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொடுக்கப்பட்டுள்ள குண்டு துளைக்காத பிஎம்டபிள்யூ காரை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வதற்கும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது செல்வாக்கு மிக்க உலக தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார். எனவே அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தியாவின் மிக முக்கியமான நபர் என்பதால், பாதுகாப்பு வசதிகள் அதிகம் நிறைந்த அதிநவீன கார்களைதான் பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தி வருகிறார்.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக உருவெடுத்தபோது, பதவியேற்பு விழாவிற்கு வர கவச மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பயன்படுத்தினார். குஜராத் முதல்வராக இருந்த சமயத்திலும், தேர்தல் பிரசாங்களிலும் இதே காரைதான் மோடி உபயோகித்தார். இதன்பின் பிரதமராக பதவியேற்ற பிறகு, பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி காரை நரேந்திர மோடி பயன்படுத்த தொடங்கினார்.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இதுதான் இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ கார். இதன் பிறகு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் சென்டினல் காரையும் பிரதமர் மோடி பயன்படுத்த தொடங்கினார். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டபோது இந்த காரில் பிரதமர் நரேந்திர மோடி வலம் வருவதை நம்மால் காண முடிந்தது. இதன்பின் பழைய தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரையும் மோடி பயன்படுத்தினார்.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இவ்வாறு தற்போது வரை பல்வேறு கார்களை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவரது அதிகாரப்பூர்வ காரான பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் ஹை-செக்யூரிட்டி காரை தற்போதைய நாட்களில் அவரது கான்வாயில் காண்பது என்பது அரிதாக உள்ளது. இந்த சூழலில் புதிய கார் ஒன்றை பிரதமர் மோடி பயன்படுத்த தொடங்கியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

லேட்டஸ்ட் ஜெனரேஷன் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காருடன் பிரதமர் மோடியை தற்போது நம்மால் பார்க்க முடிந்துள்ளது. பிரதமர் மோடி சமீபத்தில் தாய்லாந்து சுற்றுப்பயணம் சென்று விட்டு இந்தியா திரும்பினார். அவரது வருகையை சில செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. இதில், லேட்டஸ்ட் ஜெனரேஷன் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரில் மோடி ஏறுவதை நம்மால் பார்க்க முடிந்தது.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இங்கே குறிப்பிடத்தகுந்த விஷயம் ஒன்று உள்ளது. இது இதற்கு முன்பாக மோடி பயன்படுத்திய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கிடையாது. அது பழைய தலைமுறை கார். இது லேட்டஸ்ட் ஜென்ரேஷன் ஆகும். இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை 1.70 கோடி ரூபாய். இதன் ஆன் ரோடு விலை சுமார் 2 கோடி ரூபாய்க்கு நெருக்கமாக வரும்.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இங்கே குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயமும் உள்ளது. இது ரெகுலர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் இல்லை. இந்தியாவின் மிக முக்கியமான நபர் ஒருவரை சுமந்து செல்லும் கார் என்பதால், பாதுகாப்பு வசதிகள் அதிகம் நிறைந்த கவச காராக இது மாற்றப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ், லேண்ட் ரோவர் மற்றும் பிஎம்டபிள்யூ போல் டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கவச வாகனங்களை வழங்குவதில்லை.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

எனவே வெளியில் ஏதேனும் ஒரு நிறுவனத்தின் மூலம் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு, கவச காராக மாற்றப்பட்டிருக்கலாம். இது பிரதமர் மோடி பயன்படுத்தும் கார் என்பதால், இதற்கு ஆன செலவு எவ்வளவு என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த காரில், 4.5 லிட்டர் வி8 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பயன்படுத்தும் புதிய காரின் விலை இதுதான்... விலையை மட்டும் யாருகிட்டயும் சொல்லீராதீங்க

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 262 பிஎச்பி பவர் மற்றும் 650 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. மோடி போன்ற நபர்களுக்கு இதுபோன்ற கார்கள் மிகவும் அவசியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமரின் புதிய கார் குறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரியப்படுத்துங்கள்.

 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பிரதமர் மோடி பயன்படுத்துவது ஏன்?

குஜராத் முதல்வராக இருந்த வரை மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியை மோடி பயன்படுத்தி வந்தார். ஆனால், பிரதமராக பதவியேற்ற பின் அவர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரின் 760 எல்ஐ செக்யூரிட்டி எடிசன் என்ற காரை அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்த துவங்கினார்.

மஹிந்திரா விருப்பம்

மஹிந்திரா விருப்பம்

பிரதமருக்கான அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஸ்கார்ப்பியோ காரை தயாரித்து கொடுக்க தயாராக இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் கூட ஆஃபர் கொடுத்தது. ஆனால், அந்த ஆஃபர் ஏற்கப்படாமல், பிஎம்டபிள்யூ காருக்கு பிரதமர் நரேந்திர மோடி மாறினார்.

 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பிரதமர் மோடி பயன்படுத்துவது ஏன்?

இந்த நிலையில், மேக் இன் இந்தியா திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வரும் பிரதமர் மோடி, ஜெர்மன் நாட்டு தயாரிப்பு காரை பயன்படுத்தி வருவதுதான் தற்போது செல்லாது அறிவிப்புடன் சேர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பிரதமர் மோடி பயன்படுத்துவது ஏன்?

பிரதமர் மோடி சிறப்பு பாதுகாப்பு காமாண்டோ படையினரின்[SPG] விசேஷ பாதுகாப்பு வளையத்தில் உள்ளவர். அவர் பயன்படுத்தும் காரில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்த முடிவை எஸ்பிஜி போலீஸ் பிரிவுதான் எடுக்கிறது. அந்த அமைப்பு வகுத்துள்ள பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய காரை இந்திய நிறுவனங்களால் கட்டமைத்து கொடுக்க இயலாத நிலை இருக்கிறது.

 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பிரதமர் மோடி பயன்படுத்துவது ஏன்?

இதுபோன்ற உயர்வகை பாதுகாப்பு கார்களில் பயன்படுத்தப்படும் உடல்கூடு பாகங்கள், அடிப்பாகங்கள், தொழில்நுட்பம் என அனைத்தும் விசேஷமானவை. அவை அதிகபட்ச உறுதியை பயணிகளுக்கு வழங்குகின்றன. ஆனால், அத்தகைய தொழில்நுட்பங்கள் இப்போது நம் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் இல்லை.

 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பிரதமர் மோடி பயன்படுத்துவது ஏன்?

உதாரணத்திற்கு, பிரதமர் மோடி பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் எல்ஐ செக்யூரிட்டி எடிசன் கார் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தாயகமான ஜெர்மனியில் உள்ள டிங்கோல்ஃபிங் ஆலையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு கார் ஆலைகள் செயல்படுகின்றன. ஏன் இந்தியாவில் கூட ஆலை உள்ளது.

 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பிரதமர் மோடி பயன்படுத்துவது ஏன்?

ஆனாலும், ஜெர்மனியில் உள்ள டிங்கோல்ஃபிங் ஆலையில் மட்டுமே தயாரிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த காரில் பயன்படுத்தப்படும் உலோகக் கலவைகள், கட்டமைப்பு முறை, வெல்டிங் தொழில்நுட்பம், அவசர கால பாதுகாப்பு வசதிகள் என அனைத்து தயாரிப்புகளும் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பிரதமர் மோடி பயன்படுத்துவது ஏன்?

வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்கள் குறித்த விபரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும். அதேபோன்று, இந்த கார்களை இயக்குவதற்கும் ஜெர்மனியில் உள்ள ஆலையில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தளவு இந்த கார்களின் விஷயங்கள் ரகசியம் காக்கப்படுகிறது.

 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பிரதமர் மோடி பயன்படுத்துவது ஏன்?

அடுத்ததாக, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி வகை மாடல். 190மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்ட கார். இதனால், எதிரிகள் பக்கத்திலிருந்து இந்த காரை எளிதாக தாக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில், 152மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் எல்ஐ செக்யூரிட்டி கார் இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து எளிதாக தப்பும் என்று கருதப்படுகிறது.

 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பிரதமர் மோடி பயன்படுத்துவது ஏன்?

அதாவது, பிரதமரின் பிஎம்டபிள்யூ காரை சுற்றிலும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி வகை கார்கள் பாதுகாப்பு அரணாக வருகின்றன. அப்போது தாழ்வாக இருக்கும் பிரதமரின் கார் தாக்குதலுக்கு எளிதாக இலக்காக முடியாது என்பது பாதுகாப்புப் படையினரின் கூற்றாக உள்ளது.

 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பிரதமர் மோடி பயன்படுத்துவது ஏன்?

மேலும், பிரதமருக்கான அதிகாரப்பூர்வ காரை எஸ்பிஜி படையினரே இறுதி செய்கின்றனர். அவர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே, அது எந்த நாட்டு தயாரிப்பாக இருந்தாலும் பயன்படுத்த முடியும். ஏற்கனவே, அம்பாசடர் கார்கள்தான் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்பட்டன.

 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட காரை பிரதமர் மோடி பயன்படுத்துவது ஏன்?

ஆனால், தற்போது தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், நவீன தொழில்நுட்பங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு எளிதாக சென்றுவிடுவதால், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்களை எஸ்பிஜி படையினர் தேர்வு செய்கின்றனர். இதில், ரிஸ்க் எடுக்க அவர்கள் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
According to reports, Congress leader Sonia Gandhi will get non-bulletproof Tata Safaris that are nearly 10 years old due to downgraded from SPG cover.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X