இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்!!

ஊரடங்கு காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியது, அவசரமாக மருத்துவ தேவை வேண்டுவோர்க்கு உதவுவது என கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடத்தில், இணையத்தில் ஹீரோவாக மாறியிருப்பவர் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்!!

இதனால் மொபைல் போன் உபயோகப்படுத்தும் எவருக்கும் இவரது பெயர் தெரியாமல் இருக்காது என்றே நினைக்கிறேன். இது ஒருபுறம் இருக்க, சோனு சூட்டின் குடும்பத்தில் புதிய பென்ஸ் கார் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. அதனை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்!!

சோனு சூட் தற்போது புதியதாக வாங்கியிருப்பது, மிக சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 ஆகும். இந்த சமீபத்திய செயல்திறன்மிக்க மேபக் காரை சோனு சூட் அவரது மகன் ஆர்யனுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

Image Courtesy: Bol Bollywood

இது தொடர்பாக பாலிவுட் போல் என்கிற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை தான் மேலே காண்கிறீர்கள். கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மெர்சிடிஸ்-மேபக் ஜிஎல்எஸ்600 காரை நேரடியாக டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து டீலர்கள் சோனு சூட்டின் வீட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.

இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்!!

தனது இரு மகன்களுடன் காரை பார்வையிட்ட சோனு சூட்டிற்கு காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகளை ஒவ்வொன்றாக டீலர்கள் விவரித்தனர். அவற்றை எல்லாம் நன்கு கேட்டு கொண்ட அவர் பிறகு தனது மகன்களுடன் காரில் சிறிய ரைடு செல்கிறார்.

இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்!!

இன்னமும் இந்த கார் ஆர்டிஒ அலுவலத்தில் பதிவு செய்யப்படவில்லை. இந்த மெர்சிடிஸ்-பேமக் ஜிஎல்எஸ்600 காரை தனது பயன்பாட்டிற்காக சோனு சூட் வாங்கினாரா அல்லது தனது குடும்ப உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக வாங்கினாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்!!

சோனு சூட்டிடம் ஏற்கனவே ஆடி க்யூ7 உள்பட ஏகப்பட்ட லக்சரி எஸ்யூவி கார்கள் உள்ளன. பேமக் ஜிஎல்எஸ்600 காரை பொறுத்தவரையில், இந்த செயல்திறன்மிக்க காரின் வெறும் 50 யூனிட்கள் மட்டுமே இந்திய சந்தைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவை அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன என்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்!!

முன்பதிவு செய்த அந்த 50 உரிமையாளர்களில் சோனு சூட்டும் ஒருவர் என்பது இந்த வீடியோவின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகிலேயே மெர்சிடிஸின் செயல்திறன்மிக்க பிரிவான பேமக்கில் முதல் எஸ்யூவி காராக உருவாகியுள்ள பேமக் ஜிஎல்எஸ்600-இன் ஆரம்ப விலை ரூ.2.43 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்!!

ஏற்கனவே விற்பனையில் உள்ள மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் காரின் பேமக் வெர்சனே இதுவாகும். இதனால் அதனை காட்டிலும் செயல்திறனில் மட்டுமில்லாமல், லக்சரி வசதிகளிலும் பேமக் ஜிஎல்எஸ்600 பல படிகள் முன்னோக்கி உள்ளது.

இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்!!

இதன் ஒரு பகுதியாக காரின் உட்புறத்தில் இரண்டாவது இருக்கை வரிசை பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளதை மேலுள்ள வீடியோவில் கூட பார்க்க முடியும். ஆனால் இவை எல்லாவற்றையும் விட ஸ்டாண்டர்ட் ஜிஎல்எஸ் மாடலின் இருந்து இந்த மேபக் வெர்சனை வேறுப்படுத்தி காட்டுவது இதன் என்ஜின் அமைப்பே ஆகும்.

இப்போ தானே விற்பனைக்கே வந்தது... சோனு சூட்டின் கேரேஜில் இணைந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் கார்!!

மேபக் ஜிஎல்எஸ்600 காரில் 4.0 லிட்டர் வி8 என்ஜின் ஆனது 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அமைப்பு வெளிப்படுத்தும் ஆற்றலை காரின் அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் வழங்க 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Sonu Sood gifts son a Mercedes-Maybach GLS600 super luxury SUV worth 3 Cr.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X