ஒரு இருக்கைக்கு இவ்வளவு தொகையா!! அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் அந்த ஒரு நபர்!!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் உடன் விண்வெளிக்கு பறப்பதற்காக நடத்தப்பட்ட ஏலத்தின் முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒரு இருக்கைக்கு இவ்வளவு தொகையா!! அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் அந்த ஒரு நபர்!!

தற்போதைய உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரும், பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் நிறுவனத்தின் தலைவருமான ஜெஃப் பெஸோஸ், புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

ஒரு இருக்கைக்கு இவ்வளவு தொகையா!! அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் அந்த ஒரு நபர்!!

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்குகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் முதல் விண்வெளி பயணம் வருகிற ஜூலை 20ஆம் தேதி மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இருக்கைக்கு இவ்வளவு தொகையா!! அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் அந்த ஒரு நபர்!!

இதற்காக நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்த புளூ ஆரிஜின் திட்டமிட்டுள்ளது. இந்த முதல் பயணத்தில் ஜெஃப் பெஸோஸ் தனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பயணிக்கிறார். இவர்களுடன் இந்த பயணத்தில் மேலும் ஒருவரும் பயணிக்க முடியுமாம்.

ஒரு இருக்கைக்கு இவ்வளவு தொகையா!! அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் அந்த ஒரு நபர்!!

இதனால் இந்த ஒரு இருக்கைக்கான ஏலத்தை புளூ ஆரிஜின் நிறுவனம் கிட்டத்தட்ட கடந்த ஒரு மாத காலமாக நடத்தி வந்தது. இந்த ஏலத்தில் சுமார் 140 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆரம்பத்தில் ரூ.20 கோடியில் ஏலம் நடைபெற்று வந்தது.

ஒரு இருக்கைக்கு இவ்வளவு தொகையா!! அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் அந்த ஒரு நபர்!!

ஒரு மாத காலமாக நடைபெற்றுவந்த ஏலத்தில் அதிகப்பட்சமாக 5 மில்லியன் டாலர்கள் (ரூ.36 கோடி 61 லட்சம்) வரையில் ஏலம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் ஏலத்தின் கடைசி நாளான நேற்று முன்தினம் (ஜூன் 12) இந்த தொகை 5 மடங்காக உயர்ந்தது.

ஒரு இருக்கைக்கு இவ்வளவு தொகையா!! அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் அந்த ஒரு நபர்!!

அதன்படி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் உடன் விண்வெளிக்கு பயணிப்பதற்கான இருக்கையை ஒருவர் 28 மில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.205 கோடி) ஏலம் கேட்டுள்ளார். அதற்கு மேல் யாரும் ஏலம் கேட்காததால் அந்த இருக்கையை அவருக்கு புளூ ஆரிஜின் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

ஒரு இருக்கைக்கு இவ்வளவு தொகையா!! அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் அந்த ஒரு நபர்!!

மற்றப்படி, ஏலம் எடுத்த நபரின் பெயர் உள்ளிட்ட விபரங்களை புளூ ஆரிஜின் நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. இதற்கிடையில் வரும் ஜூலை 5ஆம் தேதி அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகிக்கொள்ள உள்ள ஜெஃப் பெஸோஸ், தனது நிறுவனங்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு இருக்கைக்கு இவ்வளவு தொகையா!! அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் அந்த ஒரு நபர்!!

இந்த திட்டங்களில் ஒன்று, அவரது சிறுவயது கனவான விண்வெளி பயணமாகும். எதிர்காலத்தில் சுற்றுலாவிற்கு செல்வது போல் விண்வெளிக்கு செல்லும் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் இவர் ஏற்கனவே இறங்கிவிட்டார் என்பது தெரிந்த விஷயமே.

ஒரு இருக்கைக்கு இவ்வளவு தொகையா!! அமேசான் நிறுவனருடன் விண்வெளிக்கு பறக்கபோகும் அந்த ஒரு நபர்!!

ஏனெனில் அடுத்த மாதத்தில் முதல் விண்வெளி பயணத்தை துவங்கவுள்ள இவரது புளூ ஆரிஜின் நிறுவனம் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டது. இந்த விண்வெளி பயணம் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Space trip with Amazon founder Jeff bezos sells for 28 million dollars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X