சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பல்வேறு சிறப்பு உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களால் பலர் கொத்து கொத்தாக உயிரிழக்கின்றனர். உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிர்களை இழந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். அத்துடன் பல லட்சக்கணக்கானோர் படுகாயம் அடைகின்றனர்.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றால், அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள்தான் அதிகம் உதவி செய்து வருகின்றன. மருத்துவ ரீதியில் 'கோல்டன் ஹவர்' என கூறப்படும் இந்த நேரத்தில், சாலை விபத்துக்களில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில், ஆம்புலன்ஸ்களின் பங்கு அளப்பரியது.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு மட்டுமல்லாது, இதய நோயாளிகள் மற்றும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆம்புலன்ஸ்கள் வாகனங்கள்தான் உதவி செய்து வருகின்றன. என்னதான் உயர் தரமான சிகிச்சை கிடைத்தாலும் கூட, ஆம்புலன்ஸ்களின் பங்களிப்பு இல்லாமல் ஒருவரின் உயிரை காப்பாற்றுவது கொஞ்சம் கடினம்தான்.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

ஆனால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் போன்ற பல்வேறு சவால்களை ஆம்புலன்ஸ்கள் சந்திக்கின்றன. அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளும் ஆம்புலன்ஸ்கள் வேகமாக செல்வதற்கு சில சமயங்களில் முட்டுக்கட்டை போடுகின்றனர்.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

எனினும் இந்த பிரச்னைகளை சமாளிப்பதற்காக, ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஒரு சில சிறப்பு உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் இருக்கின்றன. நோயாளிகளை வெகு விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த சிறப்பு உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

ஆம்புலன்ஸ்களுக்கு உள்ள இந்த அதிகாரங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவாக செல்ல உங்களால் உதவ முடியும். உங்களால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டால், அது உங்களுக்கும் பெருமைதானே! ஆம்புலன்ஸ்களுக்கு உள்ள சிறப்பு உரிமைகள் மற்றும் அதிகாரங்களை இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

ரெட் சிக்னலை கடந்து செல்லலாம்: நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை போக்குவரத்து சிக்னல்கள் சில சமயங்களில் தாமதப்படுத்துகின்றன. எனவே சிகப்பு விளக்கை மீறி செல்லும் அதிகாரம் ஆம்புலன்ஸ்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆம்புலன்ஸ்கள் முன்னோக்கி செல்வதற்கான வழி இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் அல்லவா?

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

இதை சாத்தியப்படுத்துவதற்கான கடமை வாகன ஓட்டிகளிடம்தான் உள்ளது. ஆம்புலன்ஸ் வந்தால், ஓரமாக ஒதுங்கி வழி விட வேண்டிய பொறுப்பு வாகன ஓட்டிகளுடையது. அதே சமயம் இது போன்ற இக்கட்டான நேரங்களில், ஆம்புலன்ஸ்கள் விரைவாக செல்வதில் போக்குவரத்து போலீசாரின் பங்களிப்பும் மிகவும் அவசியமானது.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

ரெட் சிக்னலை கடந்து செல்லக்கூடிய அதிகாரம் ஆம்புலன்ஸ்களுக்கு இருந்தாலும் கூட, முன்னால் நிற்கும் வாகனங்கள் சென்றால் மட்டுமே இது சாத்தியமாகும். அதுவும் கடுமையான நெரிசல் என்றால் முன்னால் நிற்கும் வாகனங்கள் கண்டிப்பாக சென்றே ஆக வேண்டும். இதுபோன்ற சமயங்களில் ஆம்புலன்ஸ்கள் சென்றாக வேண்டிய தடத்தில் போக்குவரத்து போலீசார் சிக்னலை பச்சை விளக்கிற்கு மாற்றலாம்.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

இதன் மூலம் முன்னால் நிற்கும் வாகனங்கள் வேகமாக சென்று விடும் என்பதால், ஆம்புலன்களுக்கு எளிதாக வழி கிடைக்கும். இந்த சமயத்தில் ஏற்கனவே பச்சை விளக்கு எரிந்து கொண்டிருந்த வழித்தடம் உள்பட மற்ற அனைத்து வழித்தடங்களையும் போக்குவரத்து போலீசார் உடனடியாக பிளாக் செய்து விடலாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆம்புலன்ஸ்களுக்கு வழி கிடைக்கும்.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

ராங் சைடில் செல்லலாம்: ஓரிடத்தில் டிராபிக் ஜாம் ஆகி விட்டால், ஆம்புலன்ஸ்களால் முன்னோக்கி செல்ல முடியாது. இதுபோன்ற சமயங்களில் யு-டர்ன் அடிக்கவும், ராங் சைடில் பயணிக்கவும் ஆம்புலன்ஸ்களுக்கு அதிகாரம் உள்ளது. இதனால்தான் ஆம்புலன்ஸ்களை மிக நெருக்கமாக பின் தொடர்ந்து செல்லக்கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

ஏனெனில் நீங்கள் மிக நெருக்கமாக பின் தொடர்ந்து சென்றால், ஆம்புலன்ஸ் திரும்புவதற்கு இடம் இருக்காது. முன் பகுதியில் நகரவே முடியாத அளவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்தால், ஆம்புலன்ஸ் திரும்ப முயலும். அப்போது போதுமான இடம் இருப்பது அவசியம். எனவே ஆம்புலன்ஸ்களை மிகவும் நெருக்கமாக பின் தொடர்ந்து செல்லாதீர்கள்.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

இடையூறு ஏற்படுத்தாதீர்கள்: ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால், தேவையற்ற கால தாமதம் ஏற்படும். எனவே ஆம்புலன்ஸ்களுக்கு இடையூறு செய்யாதீர்கள். இது மனிதாபிமானமற்ற செயல் மட்டும் அல்ல. சட்ட விரோதமும் கூட. ஆம்புலன்ஸ்கள் செல்ல இடையூறு ஏற்படுத்தினால், உங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சூப்பர் பவர்... இந்தியாவில் ஆம்புலன்ஸ்களுக்கு இருக்கும் வானளாவிய அதிகாரங்கள்... என்னென்ன தெரியுமா?

விஐபிக்கள் வருகை: விஐபிக்கள் வருகையின்போது ஒட்டுமொத்த டிராபிக்கும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் கூட அந்த இடத்தை கடந்து செல்லக்கூடிய அதிகாரம் ஒவ்வொரு ஆம்புலன்ஸ்களுக்கும் உள்ளது. இதுபோன்ற சமயங்களில், விஐபிக்களின் வாகனங்களை நிறுத்த சொல்லி விட்டு, ஆம்புலன்ஸ்கள் இருக்கும் லேனில் நிற்கும் வாகனங்களை நகர அனுமதிக்க வேண்டும்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Special Rights And Powers Of Ambulance. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X