"மாநில அரசுகளுக்கு இந்த உரிமை இல்லை, விரைவில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்! கூறியது யார் தெரியுமா

பாராளுமன்ற அவைகள் மூலம் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்வதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை என நாட்டின் உயர் சட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல் மற்றும் அவற்றால் ஏற்படும் விபத்துகளை முழுவதுமாக தவிர்க்கும் விதமாக மத்திய அரசு, புதிய (திருத்தப்பட்ட) மோட்டார் வாகன சட்டத்தை நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வந்தது.

இச்சட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அதன்மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

ஏனென்றால், இந்த சட்டத்தில் முன்பெப்போதும் இல்லாத அளவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

இந்தியாவை போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக மாற்றும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டாலும், பெரும்பாலும் இதில் சாமானிய மக்களே பாதிக்கப்படுவார்கள் என கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வந்தன.

அதற்கேற்ப வகையில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து வெளிவந்த செய்திகள் நம்மை அதிர்ச்சியில் உரைய வைக்கின்ற வகையில் இருந்தது. மேலும், போலீஸார் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மோதல் அதிகரிக்கவும் ஆரம்பித்தது. எனவே, அந்தந்த மாநில அரசுகளுக்கு புகார் கடிதங்களும், கடும் நெருக்கடியும் ஏற்பட்டது.

ஆகையால், ஒரு சில மாநிலங்கள் மட்டும் மத்திய அரசு கொண்டுவந்த புதிய அபராதத்தைக் கணிசமாக குறைக்க திட்டமிட்டன.

அந்தவகையில், மத்திய அரசு அறிமுகம் செய்த உச்சபட்ச அபராதத்தை மக்களின் நலனுக்காக விரைவில் குறைக்க இருப்பதாக மேற்குவங்கம், கேரளா, ஒடிசா, கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் சில அறிவித்தன.

இந்நிலையில், கடுமையான போக்குவரத்து அபராதத் தொகையை கணிசமாக குறைத்து குஜராத் மாநில அரசு உடனடி அறிவிப்பை வெளியிட்டது.

அதேசமயம், புதிய மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்தபோது அதிகப்படியாக அபராதங்களை வசூலித்த முதன்மை மாநிலங்களில் ஒன்றாகவும் குஜராத் திகழ்ந்தது குறிப்பிடத்தகுந்தது.

MOST READ: "என்னது... சிவாஜி செத்துட்டாரா?" சினிமா பாணியில் பதிலளித்த பாஜக எம்பி! என்னதான் ஆச்சு இவர்களுக்கு..!

குஜராத்தின் அறிவிப்பை அடுத்து, லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 5,000 என்பதனை இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ. 2000 ஆகவும், நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ரூ. 3,000 ஆகவும் மாற்றியது அம்மாநில போக்குவரத்துத்துறை.

MOST READ: கோவாவில் கோலாகலம்... இந்திய பைக் வீக் திருவிழா துவங்கியது

தொடர்ந்து, இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணித்தால் அபராதமாக ரூ.1,000 வசூலிக்கப்பட இருந்த நிலையில், அதனை 100 ரூபாயாக மாற்றியது குஜராத் அரசு. இத்துடன், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்வதற்கு மத்திய அரசு அறிவித்த ரூ.1,000 அபராத்தையும் 500 ரூபாயாக மாற்றியது. இதுதவிர வேறு பல்வேறு போக்குவரத்துக்கு விதிமீறல்களுக்கும் உச்சபட்ச அளவில் வசூலிக்கப்பட இருந்த தொகையை குஜராத் அரசு கடுமையாக குறைத்தது.

MOST READ: வசூல் கிங்காக மாறிய டோல் பூத்துகள்... 2018-19 வரை எத்தனை கோடி வசூல் செய்யப்பட்டது என தெரியுமா..?

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அறிவிப்பு மட்டுமே வெளியிட்டிருந்த நிலையில், குஜராத் அரசு முதல் மாநிலமாக அபராதத்தைக் குறைத்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாநில அரசுகளின் இந்த நடவடிக்கை, சட்டத்திற்கு முரண்பாடானது என நாட்டின் உயர் உயர் சட்ட அதிகாரியான அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், "பாராளுமன்றத்தின் மூலம் அமல்படுத்தப்பட்ட சட்டத்தை, மத்திய அரசின் வழிகாட்டுதலின் நடைமுறைக்குக் கொண்டுவரவே மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. மாறாக இந்த சட்டத்தின்கீழ் எந்தவொரு புதிய விதியையும் உருவாக்கவோ அல்லது வெளியிடவோ அதிகாரம் இல்லை" என தெரிவித்துள்ளார்.

அதேசமயம், மாநில அரசுகள் குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று மட்டுமே எந்த மாற்றத்தையும், பராளுமன்ற மூலம் கொண்ட சட்டத்தில் செய்ய முடியும் என அவர் கூறினார்.

புதிய மோட்டார் சட்டத்தின்கீழ் 24 விதமான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவை கடந்த காலங்களில் இல்லாத அளவில் மிக கடுமையான உயர்ந்துள்ளது. இதில் ஒரு சில அபராதங்களுக்கு நீதிமன்றங்களை நாடாமல் ஆன்லைன் அல்லது மாற்று வழிகள் மூலம் செலுத்த வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்குதல், ரேஷ் டிரைவ் செய்தல், சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு அது பொருந்தும்.

ஆனால், குஜராத் சீர் திருத்தியுள்ள மோட்டார் வாகன சட்டத்தில் அனைத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கும் நீதிமன்றங்களை நாட வேண்டும் என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே முரண்பட்ட கருத்து இருக்குமேயானால், ஆர்டிக்கல் 254-ன் படி மத்திய அரசு என்ன திட்டத்தைக் கொண்டுவந்ததோ அந்த திட்டத்திற்கு மாநில அரசுகள் இணங்க வேண்டும் என்பதை கூறுகின்றது என்பதனை சட்ட பிரிவு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரிவு 256ன் கீழ் மத்திய அரசு கொண்டுவரப்பட்ட திட்டத்தை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தாமல், அதனை மீறும்பட்சத்தில் பிரிவு 356ன் கீழ் சட்ட ரீதியாக அந்த அரசுகள் மீது மத்திய அரசால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். ஆகையால், விரைவில் குஜராத் அரசு மீது சட்ட ரீதியான நடவடிக்கை பாயலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

பாஜகவினர் ஆட்சி செய்யும் மாநிலங்களிலேயே, அக்கட்சி கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழ்நிலையில், தமிழகத்தில் மட்டும் மத்திய அரசுக்கு இணக்கமான சூழல் காணப்படுகின்றது. அந்தவகையில், மத்திய அரசு கொண்டு வரும் ஒரு சில திட்டங்களை தமிழக அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருகின்றது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

அந்தவகையில், மத்திய அரசுக்கு ஒத்துழைக்கின்ற வகையிலான ஓர் அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் அது அதிரடியாக வெளியிட்டிருந்தது. அது என்னவென்பதை கீழே காணலாம்.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுவதையே வாடிக்கையாக வைத்திருப்பதாக எதிர்கட்சியினர் அவ்வப்போது குற்றம் சாட்டு வைத்து வருகின்றனர். இதனை, உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட உள்ளது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

இந்த விவகாரத்தில், தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா மற்றும் வட மாநிலங்கள் என நாடே மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்பட ஆரம்பித்துள்ளது. இதைத்தொடர்ந்தே, தமிழக அரசும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்தவகையில், பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அது அறிவித்துள்ளது. இதில், பல திட்டங்களுக்கு பெரும்பான்மையான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலே நிலவி வருகின்றன.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

ஆனால், இதில் மாற்றமாக ஒரு சில திட்டங்களுக்கு மட்டும் மக்கள் வரவேற்பு அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில், மின் வாகன திட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டின் காரணமாக, நாடு பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றது. முக்கியமாக புவி வெப்ப மயமாதல், காற்று மாசடைதல் போன்ற பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

இதற்கு தீர்வு காணும் விதமாக எரிபொருள் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு, இவற்றிற்கு மாற்றாக மின் வாகனங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

அதற்கான பணிகள்தான் தற்போது சூடிபிடிக்க ஆரம்பித்துள்ளது. இத்துடன், மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில்கூட, மின்வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் 12 சதவீத ஜிஎஸ்டி வரிக்கு பதிலாக 5 சதவீதமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

இவ்வாறு, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் மத்திய, எரிபொருள் வாகனங்களை அடியோடு ஒழித்துகட்டும் வகையிலான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு இணங்க தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், மாநிலத்தில் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் வழங்கும் கொள்கை குறித்த தகவலை தமிழக அரசு வெளியட உள்ளது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

இதுகுறித்து, ஆட்டோ எகானமிக்ஸ் டைம்ஸ் ஆங்கில தளத்திற்கு மூத்த அரசு அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், "மின் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக முதலீட்டாளர்கள் மற்றும் மின் உற்பத்தியில் பங்களிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கும் விதமாக இந்த கொள்கை உருவாக்கப்பட உள்ளது. அவ்வாறு, அவர்களுக்கு ஜிஎஸ்டி வரி திரும்ப அளித்தல் (Refund), மூலதன மானியம் மற்றும் ஊதியம் அடிப்படையிலான ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகை வழங்கப்பட உள்ளது" என அவர் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

மேலும் பேசிய அவர், "இந்த சலுகை முதல் 3-5 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. முன்னதாக நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் கூட்டத்தில், முதல் இரண்டு திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன. ஆனால், மூன்றாவதாக ஓர் புதிய திட்டத்தையும் தமிழக தற்போது அறிவிக்க உள்ளது. இந்த சலுகையை எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெற வேண்டுமானால் குறைந்தது ரூ. 500 கோடி முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் அந்த கொள்கையில் இடம்பெற உள்ளது" என தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

அதேசமயம், இந்த கொள்கையில் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமின்றி, மின் வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு சலுகை வழங்கப்பட உள்ளது. அந்தவகையில், மின் வாகனங்களுக்கு சாலை வரியை தள்ளுபடி செய்ய அதில் பரிந்துரைக்கப்பட உள்ளது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

புதிய கொள்கையில் மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் மூலதன மானியம் பாரம்பரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுவதை விட சற்று அதிகமாக இருக்கும். மேலும், பேட்டரி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அது இன்னும் கூடுதலாக வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

இந்த வரைவுக் கொள்கை தற்போது நிதி துறையின் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுகுறித்த இறுதி அறிவிப்பாணையை தமிழக அரசு இம்மாத இறுதிக்குள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

முன்னதாககூட, 1990களில் தமிழக அரசு இதேபோன்று சில சலுகைகளை அறிவித்து, வாகனதுறையை தன் வசம் கவர்ந்து இழுத்தது. அப்போது, வரியில் சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்மூலம் ஹூண்டாய், ஃபோர்டு, பிஎம்டபிள்யூ, டைம்ளர் மற்றும் நிஸ்ஸான் போன்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களை கவர்ந்திழுத்தது. ஆனால், 2017க்கும் பின்னர் ஜிஎஸ்டி வரி மூலம் இதை தலை கீழாக மாறியது.

மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படும் தமிழகம்... மீண்டும் உறுதி செய்த எடப்பாடி அரசு!

ஆகையால், தற்போது மின் வாகன திட்டத்திற்காக புதிய கொள்கையை அறிவித்து தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக திட்டம் தீட்டி வருகின்றது. அதேசமயம், நாட்டில் செயல்பட்டு வரும் முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய், அதன் கோனா எலெக்ட்ரிக் காரை தயாரிக்க ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
State Govt Can't Reduce Fine Amended By MV Act: Attorney general. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X