இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

ஸ்டீல்பேர்டு (Steelbird) நிறுவனம், அதன் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ தொழில்நுட்ப வசதிக் கொண்ட புதிய ஹெல்மெட்டை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. எஸ்பிஏ-1 எச்எஃப் (SBA-1 HF) எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஹெல்மெட் பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

பிரபல ஸ்டீல்பேர்டு (Steelbird) நிறுவனம் விலைக் குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வசதிக் கொண்ட புதுமுக ஹெல்மெட் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெல்மெட்டிற்கு ரூ. 2,589 என்ற குறைவான விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

நாட்டிலேயே இவ்வளவு குறைவான விலையில் ஓர் நிறுவனம் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ வசதியுடன் தலைக் கவசத்தை விற்பனைக்குக் களமிறக்குவது இதுவே முதல் என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விலையில் வேறு எந்த நிறுவனமும் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ தொழில்நுட்பம் கொண்ட தலைக்கவசத்தை விற்பனைக்கு வழங்கவில்லை என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

ஸ்டீல்பேர்டு நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் புதுமுக தலைக் கவசங்களை விற்பனைக்குக் களமிறக்கிய வண்ணம் இருக்கின்றது. இதன் வெளிப்புறத்தைப் பார்த்து கணக்குப் போடுபவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். ஏனெனில் ஸ்டட்ஸ் நிறுவனம் இதன் வெளிப்புற தோற்றத்தை மிகவும் எளிமையானதாக வடிவமைத்திருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

அதுவே, இதை பயன்படுத்திய பின்னர் இதில் இப்படி ஒரு வசதியா என கூறுமளவிற்கு இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஏனெனில் நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த எஸ்பிஏ-1 SBA-1 வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹெல்மெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய எஸ்பிஏ-1 எச்எஃப் (SBA-1 HF) ஹெல்மெட்டை வடிவமைத்திருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

இந்த ஹெல்மெட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 'எச்எஃப்' எனும் சொல் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ என்பதை குறிக்கின்றது. செல்போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்கவும், உரையாடவும் இது உதவும். ஹெல்மெட்டின் உட்பகுதியிலேயே இந்த தொழில்நுட்ப கருவியை நிறுவனம் பொருத்தியிருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

இதற்கு பேட்டரி தேவையில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும் அளவில்லா மியூசிக் மற்றும் அழைப்புகள ஏற்றல் வசதியை நம்மால் பெற முடியும். அது எப்படி என கேட்குறீங்களா?, ஆக்ஸ் கேபிள் வழியாக இணைக்கும் வசதியையே நிறுவனம் வழங்கியிருக்கின்றது. எனவேதான் பேட்டரி அல்லது சார்ஜ் செய்ய இதற்கு தேவையில்லை என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

இரு விதமான அளவுகளில் எஸ்பிஏ-1 எச்எஃப் தலைக் கவசம் விற்பனைக்குக் கிடைக்கும். 580 மிமீ மற்றும் 600 மிமீ ஆகிய அளவுகளிலேயே இது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இத்துடன், பன்முக நிற தேர்விலும் இது விற்பனைக்குக் கிடைக்கும். கருப்பு, வெள்ளை மற்அறும் சிவப்பு ஆகிய நிறங்களில் அது கிடைக்கும்.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

இதே ஹெல்மெட்டை ஸ்டீல்பேர்டு நிறுவனம் ஹேன்ட்ஸ்-ஃப்ரீ கருவி இல்லா தேர்விலும் விற்பனைக்கு வழங்குகின்றது. அதன் விலை ரூ. 1,339 ஆகும். இதனை எஸ்பிஏ-1 என்ற பெயரில் விற்பனைக்கு வழங்குகின்றது. இதில் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ இல்லை என்றாலும் பாதுகாப்பு வசதி அதிகம் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

அதாவது, நிறுவனம் எஸ்பிஏ-1 எச்எஃப் மற்றும் எஸ்பிஏ-1 ஆகிய இரு ஹெல்மெட்டுகளையும் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஹெல்மெட்டா உருவாக்கியிருக்கின்றது. ரைடர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இரு ஹெல்மெட்டையும் தயாரித்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

இசை அல்லது அழைப்பில் இருக்கும்போது வெளிப்புறத்தில் இருக்கும் ஒலிகளும் கேட்கும் வசதி இந்த ஹெல்மெட்டில் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆம், ஒரு வேலை வெளியில் ஆம்புலன்ஸ் அல்லது வேறு வாகனம் ஹாரனை அழுத்தியவாறு வருமானால் அதுகுறித்த சப்தங்களை எளிதில் கேட்கும் வகையில் ஹெல்மெட் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

ஆகையால், ரைடர் இசையில் மூழ்கியிருந்தால் வெளிப்புற சத்தத்தைக் கேட்டு பாதுகாப்பு பயணிக்க முடியும் என்பது தெரிகின்றது. இதில் இடம் பெற்றிருக்கும் மைக்ரோபோன் இரைச்சல்களைக் கட்டுப்படுத்தும் வசதியைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், துள்ளியமான ஆடியோவை பெற மற்றும் நம்முடைய பேச்சை பிறருக்கு பரிமாறிக் கொள்ள முடியும்.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

இந்த கருவியானது ஐபி5 தண்ணீர் தற்காப்பு தர சான்று பெற்றதாகும். ஆகையால், மழை நேரத்திலும் ஹெல்மெட்டை தடையின்றி பயன்படுத்த முடியும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் பொத்தான்களையும் பயமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். அழைப்பை ஏற்றல் மற்றும் துண்டித்தல் ஆகிய பொத்தான்கள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் மிகவும் விலை குறைவான ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஹெல்மெட்... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா உடனே வாங்க ஆசப்படுவீங்க!

தொடர்ந்து, கூகுள் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதை இசையை ஒலிக்க செய்தல், அழைப்பை மேற்கொள்ள நமக்கு உதவியாகும். ஆகையால், சாலையில் அதிக கவனத்தைச் செலுத்திய வண்ணம் நம்மால் இதில் பயணிக்க முடியும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Steelbird launches india s most affordable hands free helmet sba 1 hf
Story first published: Monday, September 20, 2021, 18:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X