இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஆவணங்களை பரிசோதிப்பதற்காக வாகனங்களை நிறுத்த கூடாது என காவல் துறையினருக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாகரேல், போக்குவரத்து காவல் துறையினருக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் போக்குவரத்து காவல் துறையினர் வாகனங்களை நிறுத்த கூடாது. இந்த உத்தரவிற்கு பின்னால் மிக முக்கியமான காரணம் ஒன்று உள்ளது.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

போக்குவரத்து காவல் துறையினர் வாகனங்களை நிறுத்தி ஆவணங்களை பரிசோதிப்பதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்படுகிறது. இதை கவனித்த பிறகே, போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாகரேல் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் சிறிய காரணங்களுக்காக வாகனங்களை நிறுத்துவதை காட்டிலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இந்த உத்தரவை மீறி ஆவணங்களை பரிசோதிப்பதற்காக வாகனங்களை நிறுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாகரேல் இந்த உத்தரவை கடந்த ஜூலை 29ம் தேதி பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பின்வருமாறு:

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் சில போக்குவரத்து காவல் துறையினர் வாகனங்களை நிறுத்துவது தெரியவந்துள்ளது. இது போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு வழிவகுக்கிறது. எனவே ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் போக்குவரத்து காவல் துறையினர் வாகனங்களை நிறுத்த கூடாது.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

போக்குவரத்து இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கே அவர்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதை தவிர்த்து விட்டு, ஆவணங்களை பரிசோதிப்பதற்காக மட்டும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய கூடாது.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இந்த உத்தரவு பின்பற்றப்படாவிட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட போக்குவரத்து டிவிசனின் பொறுப்பு அதிகாரிதான் பொறுப்பாவார். இவ்வாறு இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆவணங்களை பரிசோதிப்பதற்காக போக்குவரத்து காவல் துறையினர் வாகனங்களை நிறுத்தும் நிகழ்வை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

அந்த சமயங்களில் சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படும். இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்படுகிறது. இது பயணங்களில் தாமதத்தை ஏற்படுத்துவதாக பலர் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''வாகனம் மற்றும் டிரைவரின் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக ஒரு சில காவல் துறையினர் சாலை நடுவே வாகனங்களை நிறுத்துகின்றனர்.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இது போக்குவரத்து நெரிசல் பிரச்னையை ஏற்படுத்துகிறது என எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. ஆவணங்களை பரிசோதிப்பதற்காக வாகனங்களை நிறுத்துவது தேவையற்றது. எந்தவிதமான இடையூறும் இல்லாமல் போக்குவரத்து சீராக நடைபெறும் விஷயத்திலேயே காவல் துறையினர் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இந்தியாவில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. இதில், மும்பையும் ஒன்று. இதற்கு சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாததும், மோசமான நிலையில் இருப்பதும் மிக முக்கியமான காரணமாக உள்ளது. இவற்றுடன் காவல் துறையினர் ஆவணங்களை பரிசோதிப்பதற்காக ஆவணங்களை நிறுத்துவதும் முக்கியமான காரணங்களில் ஒன்றுதான்.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

எனவே தற்போது அந்த பிரச்னைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. மும்பை வாகன ஓட்டிகள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர். அதேபோல் நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த உத்தரவை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் தேவையில்லாமல் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

நாங்கள் ஏற்கனவே கூறியபடி இந்தியாவின் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை மிகவும் அதிகமாக உள்ளது. வெளியே ஓரிடத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. சில சமயங்களில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதை குறைத்து கொண்டு பேருந்து போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தினால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஓரளவிற்கு குறையும். எனவே இந்தியாவில் பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்பட்ட பிறகு பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதற்கு பதிலாக தங்களது சொந்த வாகனங்களில் பயணம் செய்வதையே மக்கள் மிகவும் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதில் இருக்கும் உண்மையை நாம் யாரும் மறுத்து விட முடியாது. பொது போக்குவரத்து வாகனங்களில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இனி போலீஸ்காரங்க வண்டியை நிறுத்த மாட்டாங்க... கொரோனா பயம் இல்ல... உண்மையான காரணம் தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

எனவேதான் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் நேரங்களில் அரசாங்கம் கூட பேருந்து சேவைகளை ரத்து செய்து விடுகிறது. இனி வரும் காலங்களிலும் மக்கள் சொந்த வாகனங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சாலைகளை விரிவாக்கம் செய்வதுதான், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Stop checking vehicle documents mumbai police commissioner to traffic cops here is the reason
Story first published: Thursday, August 5, 2021, 23:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X