அதிர வைக்கும் சம்பவம்... காருக்கு உள்ளேயே வாழும் 2 பேர்... எவ்வளவு நாள்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

காருக்கு உள்ளேயே 2 பேர் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிர வைக்கும் சம்பவம்... காருக்கு உள்ளேயே வாழும் 2 பேர்... எவ்வளவு நாள்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது வேகமாக பரவி வருகிறது. சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதிர வைக்கும் சம்பவம்... காருக்கு உள்ளேயே வாழும் 2 பேர்... எவ்வளவு நாள்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

இதில், இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு தொடங்கியது. கடந்த ஏப்ரல் 14ம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடைவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராத காரணத்தால், வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பஸ், ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

MOST READ: வெளியே வரவே அச்சப்படும் மக்கள்! விலையுயர்ந்த காரில் கெத்தாக வந்திறங்கிய பிரபல நடிகர்... ஏன் தெரியுமா?

அதிர வைக்கும் சம்பவம்... காருக்கு உள்ளேயே வாழும் 2 பேர்... எவ்வளவு நாள்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றிருக்கும் பலர் ஆங்காங்கே சிக்கி கொண்டுள்ளனர். அவர்களால் தற்போது வரை பாதுகாப்பாக வீடு வந்து சேர முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இரண்டு பேர் குஜராத் மாநிலத்தில் சிக்கி கொண்டிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதிர வைக்கும் சம்பவம்... காருக்கு உள்ளேயே வாழும் 2 பேர்... எவ்வளவு நாள்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

நாடு முழுவதும் ஆங்காங்கே பலர் இது போன்று சிக்கி கொண்டிருக்கும் நிலையில், இவர்களை பற்றி இங்கே பேசுவதற்கு காரணம் இருக்கிறது. ஊரடங்கு காரணமாக அவர்கள் இரண்டு பேரும் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நிஸான் மைக்ரா (Nissan Micra) காருக்குள் உள்ளேயே வசித்து வருகின்றனர். இது ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த சிறிய கார் ஆகும்.

MOST READ: கொரோனா வைரஸை தில்லாக எதிர்க்கும் இந்தியா... புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கிறது மத்திய அரசு!

அதிர வைக்கும் சம்பவம்... காருக்கு உள்ளேயே வாழும் 2 பேர்... எவ்வளவு நாள்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

எனவேதான் அவர்கள் விவகாரம் கவனம் பெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் தக்ஸின் கன்னடா மாவட்டத்தில் உள்ள புத்தூர் கெம்மன்ஜி கிராமத்தை சேர்ந்த முகமது தாகின் மரில் மற்றும் ஆஸிக் ஹூசைன் ஆகிய இருவரும்தான் தற்போது குஜராத் மாநிலத்தில் சிக்கியுள்ளனர். வணிகர்களான அவர்கள் இருவரும் வியாபாரம் தொடர்பான மீட்டிங்கில் கலந்து கொள்வதற்காக குஜராத் சென்றிருந்தனர்.

அதிர வைக்கும் சம்பவம்... காருக்கு உள்ளேயே வாழும் 2 பேர்... எவ்வளவு நாள்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

தற்போது அவர்கள் இருவரும் குஜராத் மாநிலம் வல்சாடு மாவட்டத்தில் உள்ள அம்பர்கான் என்ற ஊரில் சிக்கி கொண்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, அங்குள்ள செக்போஸ்ட்டில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும் மேற்கொண்டு பயணம் செய்ய காவல் துறையினர் அனுமதிக்கவில்லை.

MOST READ: அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா... கோவத்தின் உச்சத்திற்கு சென்ற டிரம்ப்... வேலைகள் தொடங்கியது

அதிர வைக்கும் சம்பவம்... காருக்கு உள்ளேயே வாழும் 2 பேர்... எவ்வளவு நாள்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளுக்கு அருகே அவர்கள் தங்கள் நிஸான் மைக்ரா காரை பார்க்கிங் செய்து கொண்டுள்ளனர். லாரிகளையும் போலீசார் கடந்து செல்ல அனுமதிக்கவில்லை. போலீசார் தடுத்து நிறுத்திய பிறகு, அவர்கள் இருவரும் நிஸான் மைக்ரா காரில்தான் வசித்து வருகின்றனர். காருக்கு உள்ளேதான் தூங்கி கொண்டும் உள்ளனர்.

அதிர வைக்கும் சம்பவம்... காருக்கு உள்ளேயே வாழும் 2 பேர்... எவ்வளவு நாள்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

அங்குள்ள ஒரு ரெஸ்டாரெண்ட்டின் உரிமையாளர் வாஸ்ரூம் மற்றும் டாய்லெட்டை பயன்படுத்தி கொள்ள 2 பேருக்கும் அனுமதி வழங்கியுள்ளார். உள்ளூர் மக்களும், சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு தேவையான உணவை வழங்கி வருகின்றனர். இதுகுறித்த தகவல், தக்ஸின் கன்னடா போலீஸ் துணை கமிஷனருக்கு தெரியவந்தது.

MOST READ: ஜேசிபி இயந்திரம் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு காரணம் இதுதான்! இவ்ளோ நாளா இந்த விஷயம் தெரியாம போச்சே

அதிர வைக்கும் சம்பவம்... காருக்கு உள்ளேயே வாழும் 2 பேர்... எவ்வளவு நாள்னு தெரிஞ்சா ஷாக் ஆய்டுவீங்க

அவர்கள் இரண்டு பேருக்கும் தங்குமிடம் மற்றும் உணவு வழங்க வலியுறுத்தி, வல்சாடு மாவட்ட கலெக்டருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவர்கள் இரண்டு பேருக்கும் இன்னும் எந்த உதவியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. காருக்கு உள்ளேயே இவ்வளவு நாட்கள் வாழ்க்கை நடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியம்.

போதாக்குறைக்கு அவர்கள் தற்போது வைத்திருக்கும் நிஸான் மைக்ரா கார் பெரிய ஹேட்ச்பேக் ஒன்றும் கிடையாது. இரண்டு பெரியவர்கள் தூங்குவதற்கு அந்த கார் பொருத்தமாக இருக்காது. எனவே அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளன. எனினும் அவர்கள் இரண்டு பேருக்கும் விரைவாக உதவி கிடைக்கும் என்று நாம் நம்பலாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Stuck In Covid-19 Lockdown, 2 Businessmen Forced To Live In Nissan Micra Hatchback For 20 Days. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X