இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பு ஆலை..! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்..!

ஆசியாவிலேயே மிகப்பெரிய தலைக் கவசம் தயாரிக்கும் ஆலை இந்தியாவில் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எங்கு என்பது பற்றிய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பாலை! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்! எங்கு தெரியுமா?

இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரைக் காப்பதில் முக்கிய பங்கு ஹெல்மெட்டுகளுக்கே உள்ளது. இதனால்தான் இந்தியாவில் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மட்டுமின்றி பின்னிருக்கையில் அமர்ந்து செல்லும் பயணிகளும் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் வலியுறுத்தப்படுகின்றது. இருப்பினும், பெரும்பாலானோர் இந்த விதியைக் கடைப்பிடிப்பதே இல்லை.

இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பாலை! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்! எங்கு தெரியுமா?

இதன் விளைவாக, விபத்தில் சிக்கி இறப்போர்களின் பட்டியலில் இருசக்கர வாகன ஓட்டிகளே முதல் இடத்தில் இருக்கின்றனர். இது, விபத்தில் சிக்கி பேரிழப்பை சந்திப்பவரின் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் அத்துறைச் சார்ந்தோருக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்துகின்றது.

இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பாலை! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்! எங்கு தெரியுமா?

எனவே, இந்த தலைக் கவசத்தை அசௌரியம் பாராமல் அணிந்தாமல் அனைவருக்குமே அன்றைய தினம் மிகச் சிறந்ததாக விளங்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹெல்மெட்டுகளை தயாரிக்கும் மிகப்பெரிய உற்பத்தியாலை இந்தியாவில் விரைவில் அமையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பாலை! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்! எங்கு தெரியுமா?

ஆம், இந்தியாவில் விரைவில் அமையவிருக்கும் இந்த ஹெல்மெட் உற்பத்தியாலை ஆசியாவின் மிகப்பெரிய தலைக் கவசம் தயாரிப்பாலையாக அமையாக இருக்கின்றது. இதனை பிரபல ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டட்ஸ் நிறுவனமே தொடங்க இருக்கின்றது.

இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பாலை! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்! எங்கு தெரியுமா?

இதற்காக அந்நிறுவனம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் எனும் நகரத்தைத் தேர்வு செய்துள்ளது. இங்குதான் ஆசியாவின் மிகப்பெரிய தலைக்கவச உற்பத்தியாலை ரூ. 200 கோடி முதலீட்டில் அமையவிருக்கின்றது. சுமார் 5.5 ஏக்கரில் ஏற்கனவே இதற்கான இடம் ஒதுக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பாலை! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்! எங்கு தெரியுமா?

இதுகுறித்து நியூஸ்18 ஆங்கில தளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஏற்கனவே ரூ. 160 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இங்கு மோட்டார்சைக்கிள்களுக்கான தலைக்கவசம் மட்டுமின்றி சைக்கிளில் பயணிப்போர் பயன்படுத்தும் தலைக்கவசமும் தயாரிக்கப்பட இருக்கின்றது.

இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பாலை! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்! எங்கு தெரியுமா?

அத்துடன், வேறு சில பாதுகாப்பு கவசங்கள் இதே ஆலையில் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. எனவேதான் இந்தியாவில் பிரமாண்ட தயாரிப்பாலையை அது அமைய இருக்கின்றது. இந்தியாவில் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துவோர்கள் அதிகம் என்பதால், அதுசார்ந்த தயாரிப்புகளுக்கு எப்போதும் இங்கு க்ரீன் சிக்னல்தான்.

இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பாலை! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்! எங்கு தெரியுமா?

எனவேதான் ஸ்டட்ஸ் நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய தலைக்கவசம் தயாரிக்கும் ஆலையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இத்துடன், ஏற்கனவே இருக்கும் உற்பத்தியாலையின் பரப்பளவையும் கூடுதலாக்கும் பணியில் அது இறங்கியிருக்கின்றது. இவையிரண்டையும் ஒட்டுமொத்தமாக சேர்த்தே அந்நிறுவனம் ரூ. 200 கோடியை புதிய முதலீடாக செய்ய இருக்கின்றது.

இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பாலை! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்! எங்கு தெரியுமா?

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையால் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுமட்டுமின்றி நாட்டின் பொருளாதார நிலையையும் கணிசமாக உயர்த்த இது உதவும். இந்த புதிய ஆலையில் வருடம் ஒன்றிற்கு 75 லட்சம் யூனிட் மோட்டார்சைக்கிள்களுக்கான ஹெல்மெட்டுகளும், 15 லட்சம் யூனிட் மிதிவண்டிக்கான ஹெல்மெட்டுகளும் தயாரிக்கப்பட இருப்பதாக ஸ்டட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பாலை! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்! எங்கு தெரியுமா?

இதுகுறித்து, ஸ்டட்ஸ் அக்ஸஸரீஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் சித்தார்த்த பூஷண் குரானா கூறியதாவது, இந்த உற்பத்தியாலை மூலம் நேரடியாக 1,500 பணியாளர்கள் பணியமர்த்தப்ட இருப்பதாக தெரிவித்தார்.

புதிய உற்பத்தியாலையுடன் சேர்த்து ஸ்டட்ஸ் நிறுவனம் இந்தியாவில் மட்டும் நான்கு தொழிற்சாலையை இயக்கி வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் ஹெல்மெட்டுகளே உலகின் பல்வேறு நாடுகளுக்கு அந்நிறுவனம் ஏற்றுமதிச் செய்து வருகின்றது.

இந்தியாவில் 5.5 ஏக்கரில் உருவாகும் பிரமாண்ட ஹெல்மெட் தயாரிப்பாலை! ஆசிய கண்டத்திலேயே பெருசாம்! எங்கு தெரியுமா?

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் அந்நிறுவனம் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஹெல்மெட்டுகளை இந்தியாவில் இருந்து ஏற்றுமதிச் செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி எண்ணிக்கை 7 மில்லியனாக உள்ளது. இதனை 14 மில்லியனாக்கும் முயற்சியிலேயே புதிய உற்பத்தியாலைகள் இந்தியாவில் தொடங்கப்பட இ ருக்கின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Studds To Set Up Asia's Largest Helmet Manufacture Plant in Faridabad. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X