இந்தியாவிற்கு சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

இந்தியாவில் சூப்பர்கள் ஓட்ட லாயக்கற்றவை, இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான காரணம் மோசமான ரோடுகள் தான் சமீபத்தில் சூப்பர் கார் ரைடில் நடந்த கூத்தை பாருங்கள்

இந்தியாவில் சூப்பர்கள் ஓட்ட லாயக்கற்றவை, இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான காரணம் மோசமான ரோடுகள் தான் சமீபத்தில் சூப்பர் கார் ரைடில் நடந்த கூத்தை கீழே உள்ள செய்தியை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

கார்களில் என்றாலே இந்தியர்கள் மத்தியில் தனி மவுசு இருக்கிறது. அப்பொழுது சூப்பர் கார்கள் என்றால் கேட்கவா வேண்டும். அப்படி இந்தியாவில் அதிக மவுசு உள்ள சூப்பர் கார்களை இங்கு ஓட்ட லாயக்கு அற்றவை தெரியுமா?

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

ஆம் இந்தியாவிற்காக தயாரிக்கப்படும் கார்களுக்கும் சூப்பர் கார்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இந்தியா முழுவதும் ஓட்டும் அளவிற்கு இங்கு பல வசதிகள் இல்லை. இதனால் தான் சூப்பர் வாங்ககூடிய அளவிற்கு வசதியிருந்தும் பலர் வாங்காமல் இருக்கிறார்கள். சிலர் வாங்கினாலும் அவ்வப்போது மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

சமீபத்தில் லாம்போர்கினி கார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக டிரைவ் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் மொத்தம் 18 லாம்போர்கினி கார்கள் கலந்து கொண்டன. வாடிக்கையாளர்கள் கார்களில் பயணம் செய்து பயண அனுபவத்தை பெற்றனர்.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

இந்த டிரைவ் நிகழ்ச்சியின் போது கோலார் என்ற பகுதி அருகே ரோட்டில் 3 வேகத்தடைகள் இருந்தது. அதில் லாம்போர்கினி காரால் செல்ல முடியாது. இந்த வேகத்தடைகள் நம்மூரில் கிண்டலாக சொல்வது போல் குட்டி சுவர் போல கட்டியிருந்தனர்.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

இதையடுத்து அந்த டிரைவை ஒருங்கினணத்தவர்கள் இந்த ரோட்டின் இரண்டு பகுதிகளிலும் வரும் வாகனங்களை நிறுத்தி லாம்போர்கினி கார்களை அருகில் இந்த மணல் பரப்பில் இறக்கி வேகத்தடைகளை கடந்து மீண்டும் ரோட்டிற்கு ஏறி செல்ல வைத்தனர்.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

இதே போல 18 கார்களும் அவ்வாறே செல்ல வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ரோட்டில் செல்லும் பலர் இதனால் எரிச்சலடைந்தனர். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூகவிலைதளங்களில் வெளியானது. இந்தவீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த வீடியோவில் உள்ள விஷயம் மட்டும் அல்ல சூப்பர் கார் இந்தியாவிற்கு லாயக்கற்ற வாகனம் என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக கீழே காணலாம்.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

மோசமான சாலைகள்

இந்தியாவில் சில நகரங்களில் ரோடுகள் சிறப்பாக இருக்கின்றன. ஆனால் எல்லா பகுதிகளிலும் அவ்வாறு இல்லை. பல இடங்களில் ரோடுகள் உடைந்து காணப்படுகிறது. சூப்பர்கள்களில் சஸ்பென்ஸ்கள் சற்று உறுதியாக இருக்கும் இதனால் அவைகளால் அந்த சூழ்நிலையை சமாளிக்க முடியாது. அதே போல இந்தியாவில் குறுகிய சாலைகள் உள்ளன. இதனால் பல சாலைகளில் சூப்பர் கார்களால் பயணம் செய்ய முடியாது.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

மோசமான வேகத்தடைகள்

வீடியோவில் நீங்கள் பார்த்தபடி இந்தியாவில் வேகத்தடைகளை கட்டுவதற்கு ஒரு வரை முறையே கடைபிடிப்பதில்லை பல இடங்களில் மிக அதிக உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சூப்பர் கார்களின் அவைகளை தாங்கும் அளவிற்கு சஸ்பென்ஸன்கள் இருக்காது. அதனால் காரை இந்தியாவில் ஓட்டுவத சிரமம்.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

மக்கள் தொல்லை

இந்தியாவில் சூப்பர் கார்களின் எண்ணிக்கை மிகக்குறைவு மக்கள் சூப்பர் கார்களை பார்த்திருப்பதற்கான வாயப்புகள் குறைவு இதனால் ரோட்டில் ஒரு சூப்பர் கார் சென்றால் மக்கள் பார்த்து கொண்டு துரத்தி கொண்டுவருவர் இதனால் சூப்பர் கார் ஓனர்களுக்கு சற்று தலைவலி ஏற்படும். இதை சமாளிப்பது மிக கடினமான விஷயம்.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

தூசி மற்று அழுக்கான சாலைகள்

இந்தியாவில் உள்ள சாலைகளில் புழுதி அதிகமாக இருக்கும். இதனால் காரில் அடிக்கடி தூசி அடைந்து விடும் இதனால் காருக்கான பராமரிப்பு செலவு மிக அதிகமாக இருக்கும்.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

டிராபிக்

இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் பெரும்பாலும் பம்பர் டூ பம்பர் டிராபிக் இருக்கும். இதனால் சூப்பர் கார்கள் செல்வதில் சில சிக்கல்கள் இருக்கும். இந்த இடத்தில் கார்கள் ஒன்றொடு ஒன்று மிக குறுகிய இடைவெளியில் இருப்பதால் சிறிய கவன சிதறல் கூட காரை லேசான உராய்வு ஏற்படும் இதனால் சூப்பர் கார்களை டிராப்பில் பயன்படுத்த முடியாது.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

சர்வீஸ்

சூப்பர் கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் எல்லாம் பெரும் நகரங்களில் ஒரு சர்வீஸ் சென்டர்கள் வைத்துள்ளனர். அதனால் சூப்பர் கார் வாங்குபவர்கள் அவர்களது காரை சர்வீஸ் செய்ய வேண்டும் என்றால் மிக கடினமான விஷயம்.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

எரிபொருள் தரம்

இந்தியாவில் பல இடங்களில் கலப்பட எரிபொருட்கள் வழங்கப்படுகிறது. இதைபயன்படுத்தினால் சூப்பர் கார்களில் உள்ள உதிரி பாகங்கள் பெரிதும் பாதிப்படையும். இந்தியாவில் சில பெட்ரோல் பம்ப்கள் தான் ஆக்டைடன் பெட்ரோல்களை வழங்குகின்றன. சூப்பர் கார் வைத்திருப்பவர்கள் அந்த பெட்ரோல் பங்க்களை தேடி செல்ல வேண்டும்.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

வெள்ளம்

இந்தியாவில் பல நகரங்களில் தீடீர் திடீர் என வெள்ளம் வருகிறுது. ஏன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையிலேயே வெள்ளம் வரவில்லையா? இவ்வாறு நடந்து நமது கார் வெள்ளத்தில் முழ்கினால் சூப்பர் காரை காட்சி பொருளாக தான் வைக்க வேண்டும்.

இந்தியாவில் சூப்பர் கார்கள் லாயக்கற்றவை ; பெங்களூருவில் நடந்த கூத்து தெரியுமா?

இவை தான் இந்தியாவிற்கு சூப்பர் கார் லாயக்கற்றவை என்பதற்கான காரணங்கள் ஒன்று நாம் இந்த பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இந்த பிரச்சனைகள சமாளிக்கும் விதத்தில் சூப்பர்கள் தயார் செய்யப்பட வேண்டும் அப்பொழுது தான் இந்தியாவில் சூப்பர் கார்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

டிரைவ் ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Supercars are just NOT meant for India: Watch 18 Lamborghinis struggle, cause huge jam . Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X