Just In
- 12 hrs ago
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!
- 12 hrs ago
மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் டிவிஎஸ் ரோனின் இந்தியாவில் அறிமுகம்... ஆரம்ப விலையே ரூ. 1.49 லட்சம்தான்!
- 13 hrs ago
ஹூண்டாய் அல்கஸார் காரில் புதிய மலிவு விலை தேர்வு அறிமுகம்! பெட்ரோல்-டீசல், 6&7 சீட்டர் தேர்வுகளில் கிடைக்கும்!
- 13 hrs ago
எப்பயும் போல ஹீரோ தான் நம்பர் 1 ஆனா வளர்ச்சியில் செம அடி...
Don't Miss!
- Movies
குஷ்பு முதல் மோகன்லால் வரை... இளையராஜாவுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசரமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டாம்...
- News
"மாநிலங்களை ஆண்ட இசைஞானி" - இளையராஜாவுக்கு மிட் நைட்டில் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Finance
தவறான வங்கி கணக்கிற்கு 7 லட்சம்.. லாட்டரி என நாடகம்.. போராடி பெற்ற பெண்..!
- Technology
இனி வீடே தியேட்டர் தான்: 50% தள்ளுபடியுடன் Samsung, Realme, Oneplus, Sony ஸ்மார்ட்டிவிகள்!
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இதை கூட கண்டுபிடிக்குமா? விமான நிலைய மோப்ப நாய்களிடம் இருக்கும் அதிசய சக்தி... மனிதர்களால் முடியவே முடியாது!
விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களிடம் இருக்கும் அதிசய சக்திகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மோப்பம் பிடிப்பதில் மனிதர்களை காட்டிலும் நாய்கள் வல்லமை மிக்கவை. மனிதர்களின் மூக்குகளை விட, நாய்களின் மூக்கு நீளமானது. இதன் காரணமாக நாய்கள் ஒரு முறை முகர்ந்து பார்த்தாலே, அதிக காற்றை உள் இழுக்கும். மேலும் மனிதர்களின் மூக்குகளில் இருப்பதை காட்டிலும், நாய்களின் மூக்கில் 20 முதல் 40 மடங்கு அதிக வாசனை ஏற்பிகள் (Odour Receptors) இருக்கின்றன.

எனவே விமான நிலையங்களில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. விமான நிலையங்களில் தீவிரவாத செயல்களும், போதை பொருள் கடத்தல்களும் அதிகமாக அரங்கேறி வருகிறது. இதன் காரணமாக விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு நாய்கள் உதவி செய்கின்றன.

விமான நிலையங்களுக்கு கொண்டு வரப்படும் லக்கேஜ்களில், கஞ்சா மற்றும் ஹெராயின் போன்ற போதை பொருட்கள் இருந்தால், நாய்கள் மோப்பம் பிடித்து விடும். மேலும் வெடி மருந்துகள் மற்றும் வெடி குண்டுகள் போன்றவை இருந்தாலும் கூட, நாய்கள் எளிதாக அடையாளம் காணும். அத்துடன் மறைத்து கொண்டு வரப்படும் ஆயுதங்களையும், நாய்கள் மோப்பம் பிடித்து விடும்.

இதுதவிர விமான நிலையங்கள் வழியாக யானை தந்தங்கள் மற்றும் காண்டாமிருகங்களின் கொம்புகளும் கடத்தி செல்லப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இத்தகைய விலங்குகளின் உடல் பாகங்களையும், சட்டத்திற்கு புறம்பாக விலங்குகளின் உடல் பாகங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் கண்டறியும் திறனும் கூட நாய்களுக்கு இருக்கிறது.

அத்துடன் பயணிகள் யாராவது அளவுக்கு அதிகமாக பணம் கொண்டு வந்தாலும், அதையும் கூட நாய்கள் கண்டுபிடித்து விடும். நாய்கள் தங்களுடைய மோப்பம் பிடிக்கும் திறனின் மூலம் கட்டு கட்டாக பணத்தை கண்டுபிடித்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் விமான நிலையங்களில் நடந்ததுண்டு. இதன் மூலம் சட்ட விரோதமாக பணம் கொண்டு செல்வதும் நாய்களால் தடுக்கப்பட்டு வருகிறது.

சட்ட விரோதமான பொருட்களை எந்த வகையில் மறைத்து எடுத்து சென்றாலும், கண்டுபிடிக்க கூடிய திறனை நாய்கள் பெற்றுள்ளன. வாசனையை அடிப்படையாக வைத்தே நாய்கள் இதனை செய்கின்றன. ஒருவேளை வாசனைகள் கலவையாக வந்தாலும் கூட, தனிப்பட்ட ஒரு வாசனையை நாய்கள் கண்டுபிடித்து விடும். நாய்களின் இந்த திறனை மீறி பொருட்களை கடத்த ஒரு சிலர் தந்திரங்களை கையாள்வது உண்டு.

அதாவது கடத்தப்படும் பொருளின் உண்மையான வாசனையை மறைத்து, வேறு விதமான வாசனை வரும்படி செய்வார்கள். ஆனால் அப்படி செய்திருந்தாலும் கூட, நாய்கள் கண்டுபிடித்து விடும். இப்படி சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களை தடுப்பதுடன் மட்டுமல்லாது, வேறு சில அதிசயங்களையும் கூட நாய்கள் நிகழ்த்துகின்றன.

ஆம், மலேரியா போன்ற நோய்களையும் கூட நாய்களால் கண்டறிய முடியும். நாய்களால் மலேரியாவை மிக வேகமாகவும், துல்லியமாகவும் கண்டறிய முடியும் என சமீப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட நபர்களிடம் எந்தவிதமான அறிகுறிகளிலும் இல்லை என்றாலும் கூட, நாய்கள் மலேரியாவை கண்டுபிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களின் தோலில் வித்தியாசமான வாசனை உருவாகிறது. இந்த வாசனையை கண்டுபிடிக்கும் வகையில் நாய்களுக்கு பயிற்சியளிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகையான நோய் கண்டுபிடிப்பு முறை இன்னும் ஆரம்ப நிலைகளில் மட்டுமே இருந்தாலும், வரும் காலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே நிறைய விமான நிலையங்களில் மலேரியாவை கண்டறியும் பணிகளில் நாய்களை ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே மலேரியா மட்டுமல்லாது, நாய்கள் மூலமாக கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான முயற்சிகளும் தற்போது சோதனை அடிப்படையில் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெப்ப நிலை சோதனை போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த சூழலில், கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை நாய்கள் மூலமாக கண்டுபிடிப்பதற்கு புதிய முயற்சி ஒன்றும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஒரு வித வாசனை உருவாகிறது. இந்த வாசனையை நாய்கள் மூலம் கண்டுபிடிப்பதற்கு விமான நிலையங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அறிகுறிகள் வெளிப்பட தொடங்குவதற்கு 5 நாட்களுக்கு முன்னரே நாய்களால் கோவிட்-19 வைரஸை கண்டறிய முடியும் என நம்பப்படுகிறது.

எனவே உலகின் பல்வேறு விமான நிலையங்களிலும் நாய்கள் மூலம் கோவிட்-19 நோயாளிகளை கண்டறியும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக வெடி பொருட்கள் மற்றும் போதை பொருட்களை கண்டறியும் திறன் நாய்களுக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் மலேரியா மற்றும் கோவிட்-19 போன்ற நோய்களையும் கண்டுபிடிக்கும் திறனும் அவற்றுக்கு இருப்பது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்.

பொதுவாக விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் நாய்கள், அடிப்படையான விஷயங்களை 2 முதல் 4 மாதங்களில் பழகி விடும். ஆனால் அவை விமான நிலையங்களில் பணியில் இருக்கும் காலம் முழுவதும், அவ்வப்போது சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் அவற்றின் திறன்கள் 'ஷார்ப்' ஆக இருக்கிறதா? என்பது உறுதி செய்யப்படும்.

விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மோப்ப நாய்களை பற்றி குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அவை அதிகமாக குரைக்காது. அவை பெரும்பாலும் அமைதியாகவே தங்களது வேலையை செய்யும். அதற்கு ஏற்ற வகையில், விமான நிலையங்களின் மோப்ப நாய்களுக்கு பல்வேறு விசேஷ பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
-
தங்கம் அண்ணாவோட ஹெல்மெட் பத்திரமா இருக்கு! ஆனந்த கண்ணீரில் TTF ரசிகர்கள்! உண்மையில் என்ன நடந்துச்சு தெரியுமா?
-
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
-
நிறைய பைக் ஜூலை மாசத்துல அறிமுகமாகபோகுது! ஒவ்வொரு பைக்கும் சுண்டியிழுக்கிற மாதிரி இருக்கே... வேற லெவல் ட்ரீட்!