அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியா வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்

கலிபோர்னியாவில் ஹைட்ரஜன் பஸ்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவிலும் அது தொடர்பான ஆய்வுகளை நடத்தும்படி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

By Arun

கலிபோர்னியாவில் ஹைட்ரஜன் பஸ்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவிலும் அது தொடர்பான ஆய்வுகளை நடத்தும்படி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால், சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசடைந்து விட்டது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நுரையீரல் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே பெட்ரோல், டீசலுக்கு முடிவு கட்ட பல்வேறு நாடுகளும் முயன்று வருகின்றன.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

அதற்கு பதிலாக எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையை உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளும் ஊக்கப்படுத்தி வருகின்றன. ஏனெனில் எலக்ட்ரிக் வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

மத்திய அரசும் கூட எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் என பல்வேறு வழிகளில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 2030ம் ஆண்டுக்குள், இந்தியாவில் இயங்கும் மொத்த வாகனங்களில், 30 சதவீத வாகனங்கள் எலக்ட்ரிக்காக இருக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

மத்திய அரசு இப்படி முயற்சி செய்து கொண்டிருக்கும் நேரத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிரடியான ஓர் உத்தரவை பிறப்பித்திருக்கிறது நாட்டின் அதிகபட்ச அதிகாரம் பொருந்திய சுப்ரீம் கோர்ட். ஹைட்ரஜன் பஸ்கள். இதுதான் சுப்ரீம் கோர்ட் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

பெட்ரோல், டீசலுக்கு மாற்று ஆற்றலை கண்டறியும் முயற்சிகள் உலகம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டுள்ளன. அதில் ஒன்றுதான் ஹைட்ரஜன். ஹைட்ரஜன் வாயு மூலம் வாகனங்களை இயக்கும் ஆய்வுகளை விஞ்ஞானிகளும், ஆட்டோமொபைல் வல்லுனர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் வாகனங்கள் ஒரு சதவீதம் கூட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. குறைந்த அளவிலான சப்தம் மட்டுமே வெளிப்படும். பல நாடுகளில் இதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்காவில் ஹைட்ரஜன் பஸ்கள் ஓடவே தொடங்கி விட்டன.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

இதனை சுட்டிகாட்டிதான், அரசுக்கு குட்டு வைத்துள்ளது சுப்ரீம் கோர்ட். இந்தியாவின் தலைநகர் டெல்லி காற்று மாசுபாட்டினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வாகனங்களை இயக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, காற்று மாசுபாட்டை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

ஆனால் காற்று மாசுபாடு மட்டும் குறைந்தபாடில்லை. தலைநகரின் மீது தொடர்ந்து அழுக்கு படிந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பஸ்கள் குறித்து ஆராயும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில், பொது போக்குவரத்து முறையை எலக்ட்ரிக்காக மாற்ற முயல்வதாக சுப்ரீம் கோர்ட்டிடம் டெல்லி அரசு கூறியது. எனவே டெல்லியில் இயக்க ஆயிரம் எலக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்யும் முயற்சியை தொடங்கியிருப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்தது.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

ஆனால் எலக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்வதை காட்டிலும், ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பஸ்களை இயக்கினால் நன்றாக இருக்கும் என சுப்ரீம் கோர்ட் கருதுகிறது. எனவேதான் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

டெல்லி மாநில அரசு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு (EPCA-Environment Pollution Prevention & Control Authority) இந்த அறிவுரையை சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

வெளிநாடுகளில் ஹைட்ரஜன் பஸ்கள் இயங்குகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் டாடா குரூப் கூட அத்தகைய வாகனங்களை உருவாக்கும் பணியை தொடங்கிவிட்டது. எனவே இதில் அதிக சிரமம் இருக்காது என சுப்ரீம் கோர்ட் கருதுகிறது.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா அடங்கிய பெஞ்ச் இதுகுறித்து கூறுகையில், ''ஹைட்ரஜன் பஸ்கள் வெளிநாடுகளில் வெற்றிகரமாக இயங்குகின்றன. குறிப்பாக கலிபோர்னியாவில் அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. டாடா கூட அதை உருவாக்குகிறது'' என்றனர்.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

நீதிபதிகள் மேலும் கூறுகையில், ''இந்த வாகனங்களில் 400 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும். இவைதான் அடுத்த தலைமுறை வாகனங்கள். சுற்றுச்சூழலுக்கும் அவை நன்மை பயப்பவை. அவை அதிக செலவு வைக்காது. இத்தகைய வாகனங்களை இயக்குவதற்கான செலவும் கூட குறைவுதான்'' என்றனர்.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவில், 2015ம் ஆண்டிலேயே ஹைட்ரஜன் டெக்னாலஜி வந்து விட்டது. அங்கு தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கி கொண்டிருக்கின்றன. கலிபோர்னியாவில் 33 ஹைட்ரஜன் ப்யூயல் ஸ்டேஷன்கள் உள்ளன.

அமெரிக்காவில் மட்டும் ஓடுவது எப்படி? சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்தியாவுக்கு வருகிறது ஹைட்ரஜன் பஸ்கள்...

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று செயல்பட்டால், இந்திய சாலைகளிலும் வெகு விரைவில் ஹைட்ரஜன் பஸ்கள் ஓடுவதை பார்க்கலாம். வழக்கம் போல காற்றில் பறக்கவிட்டால், பழைய டெக்னாலஜியிலேயே பின்தங்கி விட வேண்டியதுதான்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Supreme Court asked the Delhi government to explore the feasibility of introducing Hydrogen buses. Read in tamil
Story first published: Tuesday, July 3, 2018, 17:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X