Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் மீது திடுக்கிடும் புகார்.. என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்
ஸ்விக்கி, ஜொமோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வாரம் ஒரு முறை, குறிப்பாக வார இறுதி விடுமுறை தினமான ஞாயிற்று கிழமைகளில், குடும்பத்துடன் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வரும் காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று அதெல்லாம் மலையேறி விட்டது என்றே சொல்லலாம். இதற்கு ஸ்விக்கி, ஜொமோட்டோ, உபேர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்களே முக்கிய காரணம்.

செல்போன் ஆப் சார்ந்து செயல்படும் இந்நிறுவனங்கள் தற்போது பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்நிறுவன ஊழியர்கள் வீடுகளுக்கே உணவை கொண்டு வந்து டெலிவரி செய்து விடுவதால், ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இனி வரும் காலங்களில், வீடுகளில் உணவே சமைக்காமல் போனாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்ற சூழல் உருவாகி விட்டது. அந்தந்த நிறுவனங்களின் சீருடைகளை அணிந்து கொண்டு, சாலைகளில் வேகமாக வலம் வரும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது இதனை உணர்த்துவதாகதான் உள்ளது.

குறிப்பாக நன்கு வளர்ச்சியடைந்த சென்னை, பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை அதிகம் காண முடிகிறது. அந்தந்த மாநிலங்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் கூட ஸ்விக்கி, ஜொமோட்டோ மற்றும் உபேர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.

உணவு சமைக்காவிட்டால், செல்போனை எடுத்து வேண்டிய உணவை ஆர்டர் மட்டும் செய்து விட்டால் போதும். அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்திற்கே உணவு தேடி வந்து விடும். வீடுகள் மட்டுமல்லாது அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்த சூழலில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் மீது தற்போது திடுக்கிடும் புகார் ஒன்று எழுந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில், உணவை சுட சுட டெலிவரி செய்ய வேண்டும் என்பதே உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் தாரக மந்திரமாக உள்ளது. இதனை மனதில் நிறுத்தி கொண்டுதான் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதற்காக பைக்குகளில் அவர்கள் மின்னல் வேகத்தில் பறப்பதை சாலைகளில் நீங்கள் கண் கூடாக பார்த்திருக்க கூடும். உணவை வேகமாக டெலிவரி செய்ய வேண்டும் என்பதற்காக, போக்குவரத்து விதிமுறைகள் எதையும் அவர்கள் கடைபிடிப்பதில்லை என போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்று கொண்டிருக்கின்றன.

எனவே இது தொடர்பாக மும்பை மாநகர போக்குவரத்து போலீசார் சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர். இதில், அதிர்ச்சிகரமான சில தகவல்கள் தெரியவந்துள்ளன. முன்னதாக மும்பை போக்குவரத்து போலீசாரின் சோதனை ஒரு மாத காலமாக நடைபெற்றது. இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக, உணவு டெலிவரி செய்யும் பல்வேறு நிறுவனங்களின், 5,797 டெலிவரி பாய்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் பைக்குகளை ஓட்டுகின்றனர், போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதே கிடையாது என மும்பை போக்குவரத்து போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தன. இதனால் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுடன் கூட்டம் ஒன்றை போக்குவரத்து போலீசார் நடத்தினர்.

அப்போது போலீசார் தரப்பில் இருந்து, போக்குவரத்து விதிமுறைகள் அனைத்தையும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருந்தபோதும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் பலர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதாக இல்லை. எனவேதான் போக்குவரத்து போலீசார் களத்தில் இறங்கினர்.

இதுகுறித்து மும்பை போக்குவரத்து போலீஸ் இணை ஆணையர் அமிதேஷ் குமார் கூறுகையில், ''கடந்த மார்ச் 13ம் தேதியன்று நாங்கள் சிறப்பு சோதனையை தொடங்கினோம். அப்போது முதல் ஒரு மாத காலத்திற்குள், 5,797 டெலிவரி பாய்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள்.

இதில், 2,315 பேர் ஸ்விக்கி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். 1,770 பேர் ஜொமோட்டோ நிறுவனத்தை சேர்ந்தவர்கள். எஞ்சிய 946 பேர் டோமினோஸ் பீட்சா நிறுவனத்திலும், 766 பேர் உபேர் ஈட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்'' என்றார். அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது இன்னும் பல புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் இயக்குவது, பாதசாரிகளுக்கான நடைபாதைகளில் வாகனங்களை இயக்குவது, நோ பார்க்கிங் ஏரியா மற்றும் நடைபாதைகளில் வாகனங்களை பார்க்கிங் செய்வது, சிகப்பு விளக்கு எரியும் சமயத்திலும் போக்குவரத்து சிக்னல்களை கடந்து செல்வது ஆகியவை அவற்றில் சில.

இதன் உச்சகட்டமாக, உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் சிலர் மீது குடிபோதையில் வாகனங்களை இயக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அவர்களின் டிரைவிங் லைசென்ஸை சஸ்பெண்ட் செய்யும்படி ஆர்டிஓக்களுக்கு போக்குவரத்து போலீசார் கடிதம் மூலம் பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற ஒரு சில ஊழியர்களால், வீடுகளில் தனியாக இருந்து கொண்டு உணவு ஆர்டர் செய்யும் இளம்பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. இதுகுறித்து மும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ''வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்களுக்கு தனியாக அறிவுரை வழங்கியுள்ளோம்'' என்றனர். இதுகுறித்து ஜொமோட்டோ நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ''மும்பை போக்குவரத்து அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். சாலை பாதுகாப்பு விதிகள் என்ற விஷயத்தில் எங்கள் டெலிவரி பார்ட்னர்களின் திறனை மேம்படுத்த அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்'' என்றார்.

இதுகுறித்து ஸ்விக்கி நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ''எங்களது டெலிவரி பார்ட்னர்கள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோரின் பாதுகாப்பு ஸ்விக்கி நிறுவனத்திற்கு முக்கியமானது. விதிகளை எப்போதும் பின்பற்ற வேண்டும் என எங்கள் டெலிவரி பார்ட்னர்களிடம் வலியுறுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார்கள் எங்கள் கவனத்திற்கு வந்தால், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்டர் டெலிவரியில் எதிர்பாராதவிதமாக தாமதம் ஏற்பட்டால், அதற்காக எங்கள் டெலிவரி பார்ட்னர்களை நாங்கள் தண்டிப்பது கிடையாது'' என்றார்.
Note: Images used are for representational purpose only.