மத்திய அரசின் திட்டம் சாத்தியமானால் பெட்ரோல் ரூ.55, டீசல் ரூ.50 மட்டுமே! நிதின் கட்கரி பேச்சு

மாற்று எரிபொருட்களுக்கு மாறுவதன் மூலமாக ஒரு லிட்டர் பெட்ரோலை 55 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மாற்று எரிபொருட்களுக்கு மாறுவதன் மூலமாக ஒரு லிட்டர் பெட்ரோலை 55 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடியும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆனால் மத்திய அரசு எதையும் கண்டு கொள்ளாமல் கை கட்டி வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

ஆனால் மத்திய அரசு எதற்கும் அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை. இந்த சூழலில், சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

அப்போது மாற்று எரிபொருட்களை பயன்படுத்துவதன் மூலமாக, பெட்ரோல் மற்றும் டீசலை சார்ந்து இருக்க வேண்டிய நிலையில் இருந்து விடுபடலாம் என அவர் தெரிவித்தார். இதுகுறித்து நிதின் கட்கரி பேசுகையில், ''சட்டீஸ்கர் மாநிலத்தில் விவசாயத்துறை நன்கு முன்னேற்றம் கண்டு வருகிறது.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

சட்டீஸ்கர் மாநிலத்தில் நெல், கோதுமை, பருப்பு மற்றும் கரும்பு உற்பத்தி அபரிமிதமாக உள்ளது. இதன்மூலம் முதன்மையான பயோ எரிபொருள் உற்பத்தி கேந்திரமாக சட்டீஸ்கர் உருவெடுக்க முடியும். இதற்கான மகத்தான ஆற்றல் சட்டீஸ்கர் மாநிலத்திற்கு உள்ளது.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களுக்கும் இதன்மூலம் நன்மை கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிளாண்ட்டில் உருவாக்கப்பட்ட பயோ எரிபொருள் மூலம் சமீபத்தில் டேராடூனில் இருந்து டெல்லிக்கு விமானம் இயக்கப்பட்டது.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

பயோ எரிபொருள் மூலம் இயக்கப்பட்ட முதல் விமானம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில், பயோ டெக்னாலஜி ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட வேண்டும். மாற்று எரிபொருட்களை சட்டீஸ்கர் மாநிலம் அதிக அளவில் உருவாக்குவதற்கு, இந்த ஆராய்ச்சி மையம் உதவும்.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

எத்தனால், மெத்தனால், பயோ எரிபொருள் மற்றும் சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிபொருட்களுக்கு மாறினால், பெட்ரோல் மற்றும் டீசலை நம்பியிருக்க வேண்டியது இல்லை. இதன்விளைவாக பெட்ரோல், டீசல் விலை குறையும். நாம் 8 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து பெட்ரோல் மற்றும் டீசலை இறக்குமதி செய்கிறோம்.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது. விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களால் எத்தனால், மெத்தனால், பயோ எரிபொருளை உருவாக்க முடியும் என கடந்த 15 ஆண்டுகளாக நான் சொல்லி கொண்டிருக்கிறேன்.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

இதன்மூலம் அவர்கள் செல்வ செழிப்பு மிக்கவர்களாகவும் மாற முடியும். எத்தனால், மெத்தனால், பயோ எரிபொருள், சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிபொருட்களில் இயங்கும் ஆட்டோ ரிக்ஸா, பஸ், டாக்ஸி உள்ளிட்ட வாகனங்களுக்கு அனைத்து விதமான பெர்மிட்களில் இருந்தும் விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

நமது பெட்ரோலிய அமைச்சகமானது 5 எத்தனால் ஆலைகளை அமைத்து வருகிறது. இங்கு நெல், கோதுமை மற்றும் கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்படும். இது சாத்தியமானால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை 55 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசலை 50 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடியும்'' என்றார்.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

பெட்ரோல் மற்றும் டீசலை மத்திய அரசு இன்னும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரவில்லை. இதன் காரணமாக பெட்ரோல், டீசலுக்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வரிகள் விதிக்கப்படுகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இதுவும் முதன்மையாக காரணங்களில் ஒன்றாக உள்ளது.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

எனவே பெட்ரோல் மற்றும் டீசலை, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வரும் பட்சத்தில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைய வாய்ப்புள்ளது.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

ஆனால் அந்த கோரிக்கையையும் மத்திய அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. மாற்று எரிபொருட்களுக்கு மாறுவதன் மூலம் பெட்ரோல், டீசலை நம்பியிருக்க வேண்டியதில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது வரவேற்க கூடிய விஷயம்தான்.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

நிச்சயமாக இதன்மூலம் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்து, அதன் விலையும் சரிவடையும். ஆனால் முழுமையாக மாற்று எரிபொருட்களுக்கு மாறுவது என்பது உடனடியாக நடைபெற்று விடக்கூடிய விஷயம் அல்ல. அதற்கு வெகு காலம் பிடிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

பெட்ரோலை ரூ.55க்கும், டீசலை ரூ.50க்கும் விற்பனை செய்ய முடியும்.. அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு

எனவே தற்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என்பதே சாமானிய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு உரிய விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

Most Read Articles

மாருதி செலிரியோ எக்ஸ் காருடன் நேரடியாக மோதும் வகையில் புதிய டாடா டியாகோ என்ஆர்ஜி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஆல்பத்தை நீங்கள் கீழே காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Switching to Alternative Fuels will Reduce the Petrol, Diesel Price: Nitin Gadkari. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X