சிறிய ரக பேருந்தை உருவாக்கி அசாத்திய திறனை வெளிப்படுத்திய இளைஞர்... வீடியோ..!

இளைஞர் சிறிய பேருந்தை உருவாக்கிய அவரது அசாத்திய திறனை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த தகவல் மற்றும் வீடியோவினை இந்த பதிவில் காணலாம்.

சிறிய ரக பேருந்தை உருவாக்கிய இளைஞர்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.. வீடியோ..!

கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் பயணிகள் பேருந்தின் சிறிய மாதிரியை உருவாக்கி அசத்தியுள்ளார்.

பொதுவாக இதுபோன்ற சிறிய ரக (ஸ்கேல்) மாதிரிகளை வாகன உற்பத்தி நிறுவனங்கள், அதன் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவோ அல்லது புதிய தயாரிப்புகளை விளம்பரத்துவதற்காகவோ தயாரிப்பது வழக்கம்.

சிறிய ரக பேருந்தை உருவாக்கிய இளைஞர்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.. வீடியோ..!

ஆனால் கேரளாவைச் சேர்ந்த இளைஞர், வாகனத்துறையின் மீதுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையிலும், தனது தனித்துவமான திறனை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த சிறிய ரக பேருந்தை தயாரித்துள்ளார்.

இதுதவிர, அவரது சிறு வயது பருவத்தில் பயன்படுத்திய அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் பேருந்திற்கு மரியாதைச் செலுத்தும் நோக்கிலும் இதனை அவர் உருவாக்கியுள்ளார்.

சிறிய ரக பேருந்தை உருவாக்கிய இளைஞர்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.. வீடியோ..!

மேலும், அவர் இத்தகைய சிறிய ரக பேருந்தை உருவாக்குவதற்காக எத்தகைய பணிகளையும் செய்துள்ளார் என்பதை விளக்கும் வகையில் வீடியோவை எடுத்துள்ளார். அந்த வீடியோவை கே&கே என்ற ஆட்டோமொபைல்ஸ் மினியேட்டர் கிரியேட்டிவிட்டி என்ற யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.

சிறிய ரக பேருந்தை உருவாக்கிய இளைஞர்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.. வீடியோ..!

இந்த பேருந்தின் அனைத்து பாகங்களும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானவை. அந்தவகையில், அவற்றின் ஹாரன் ஒலி மற்றும் 'ட' வடிவத்திலான கியர் நெம்புகோல், இருக்கை என அனைத்தும் தனித்துவமானதாக தோற்றத்தில் இருக்கும்.

சிறிய ரக பேருந்தை உருவாக்கிய இளைஞர்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.. வீடியோ..!

தற்போது வீடியோவில் காணப்படும் சிறிய பேருந்தும் அதற்கு ஒத்ததாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், அதற்கேற்ற தோற்றத்தை அளிப்பதற்காக மரக்கட்டை, அலுமினியம் ஷீட், மல்டி உட், ஃபைபர் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அந்த இளைஞர் பயன்படுத்தியுள்ளார்.

சிறிய ரக பேருந்தை உருவாக்கிய இளைஞர்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.. வீடியோ..!

முதலில் மரக் கட்டையில் சிறிய பேருந்து உருவத்தை செதுக்கிய அந்த இளைஞர். பின்னர், அதன் மீது அலுமினிய தகட்டை பயன்படுத்துகின்றார். பின்னர், பேருந்தின் தோற்றத்திற்கு கொண்டு வரப்பட்ட அந்த மாதிரியை அடுத்தக்கட்ட வேலைப்பாட்டிற்கு எடுத்து செல்கின்றார் அவர்.

சிறிய ரக பேருந்தை உருவாக்கிய இளைஞர்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.. வீடியோ..!

அதன்படி, பேருந்தின் உட்பகுதியில் இருக்கை, கைப்பிடி, கியர் லிவர், அறிவிப்பு எழுத்துகள், ஜன்னல், முன்பக்க கண்ணாடி, ஜன்னல் கம்பிகள் மற்றும் ஸ்டியரிங் வீல் என பேருந்தில் காணப்படும் சகல வசதிகளையும் அவர் அந்த மாதிரி பேருந்திற்காக பிரத்யேகமாக தயாரித்து, பொருத்துகின்றார்.

சிறிய ரக பேருந்தை உருவாக்கிய இளைஞர்.. எதற்காக தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க.. வீடியோ..!

இதுமட்டுமின்றி, பேருந்தின் டயர், ஹெட்லைட் என அனைத்தையும் பிரத்யேக தோற்றத்தில் அவர் வடிவமைத்துள்ளார். டயரின் உண்மையான தோற்றத்திற்காக அவர் மரக் கட்டைகளைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், ஹெட்லைட் மற்றும் பேருந்தின் உள் பக்க மின் விளக்குகளுக்காக சிறிய பல்புகளையும் அவர் உபயோகப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து, 97ம் ஆண்டுகளில் ஓடிய பேருந்தின் லுக்கை உறுதிப்படுத்தும் வகையில், அந்த மாதிரிக்கு வர்ணப் பூச்சு வேலை பல கலவை பெயிண்டுகள் மூலம் செய்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Talented Kerala Youngster Builds Gorgeous Miniature Bus. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X