66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும்! ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

66 லட்ச ரூபாய் மதிப்பில் த்ரிஷா வாங்கியுள்ள புதிய காரால், அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும்! ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

சினிமா நடிகர், நடிகைகள் என்றாலே மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களின் மீது ஆர்வமாக இருப்பது வழக்கமான ஒன்றுதான். இதற்கு த்ரிஷாவும் விதிவிலக்கு அல்ல. தமிழ் திரையுலகில் மிக நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக த்ரிஷா உள்ளார். தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகள் பலர் களமிறங்கினாலும், அவர்களால் த்ரிஷாவின் இடத்தை பிடிப்பது சிரமமே.

66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும்! ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் கெட்டியான இடத்தை த்ரிஷா பிடித்து வைத்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு வெளியான '96' திரைப்படம் த்ரிஷாவின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்த சூழலில் மற்ற நடிகர், நடிகைகளை போல த்ரிஷாவும் விலை உயர்ந்த கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராகவே உள்ளார்.

66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும்! ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

அவர் தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கேப்ரியோலட் சி300 (Mercedes Benz C-Class Cabriolet C300) காரை வாங்கியுள்ளார். இதுகுறித்த செய்திகள் கடந்த ஒரு சில நாட்களாக தமிழக ஊடகங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் த்ரிஷா வாங்கியுள்ள புதிய காரின் சிறப்பம்சங்கள் பலவற்றை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும்! ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கேப்ரியோலட் சி-300 காரானது சி-க்ளாஸ் லைன் அப்பில் வரும் மிட் பெட்ரோல் வேரியண்ட் ஆகும். இந்த காரில், 1991 சிசி நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 5,800-6,100 ஆர்பிஎம்மில் 258 பிஎச்பி பவரையும், 1,800-4,000 ஆர்பிஎம்மில் 370 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும்! ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

த்ரிஷாவின் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கேப்ரியோலட் சி-300 கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள். ஒரு லிட்டருக்கு 9.6 கிலோ மீட்டர்கள் மைலேஜ் தரும் என அராய் அமைப்பு சான்று வழங்கியுள்ளது.

66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும்! ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

இந்த காரில் 66 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் முன், பின் என இரு புறங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இது இரண்டு டோர்களை மட்டுமே கொண்ட கார் ஆகும். நான்கு பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கேப்ரியோலட் சி-300 காரின் பூட் ஸ்பேஸ் 285 லிட்டர்கள்.

66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும்! ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

த்ரிஷா வீட்டின் புது வரவான மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கேப்ரியோலட் சி-300 காரில் பாதுகாப்பு வசதிகள் பலவும் இடம்பெற்றுள்ளன. இதில், ஏபிஎஸ், பிரேக் அஸிஸ்ட், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், ஹில் அஸிஸ்ட், இபிடி, ஏர்பேக்குகள் ஆகியவை முக்கியமானவை. அத்துடன் இந்த காரில், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர்களும் இடம்பெற்றுள்ளன.

66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும்! ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் கேப்ரியோலட் சி-300 காரில், 17 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. மேலும் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் இன்டீரியர் லெதர் இருக்கைகளை பெற்றுள்ளது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த காரின் விலை என்ன தெரியுமா?

66 லட்சத்திற்கு த்ரிஷா கார் வாங்கியது தெரியும்! ஆனா இந்த விஷயங்கள் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்

இந்த காரின் கோயமுத்தூர் எக்ஸ் ஷோரூம் விலை 65.25 லட்ச ரூபாய். ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். இவ்வளவு வசதிகளுடன் கூடிய மிகவும் விலை உயர்ந்த காரைதான் த்ரிஷா வாங்கியுள்ளாரா? என தற்போது அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். த்ரிஷாவின் புதிய கார் தொடர்பான உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Source: Dinamalar

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Actress Trisha Buys Mercedes-Benz C-Class Cabriolet C300 Worth Rs.65.25 Lakh. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X