குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து ஆடிப்போன புதுக்கோட்டை மக்கள்... உள்ளே இருந்தது யார் தெரியுமா?

குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து, புதுக்கோட்டை மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து ஆடிப்போன புதுக்கோட்டை மக்கள்... உள்ளே இருந்தது யார் தெரியுமா?

இந்தியாவில் உரிய வயதை எட்டுவதற்கு முன்பே சிறுவர்கள் வாகனங்களை இயக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுவும் சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் குறைந்தபட்சம் 18 வயதை எட்டியவர்களால் மட்டுமே ஓட்டுனர் உரிமம் பெற முடியும். அதற்கு பிறகுதான் வாகனங்களை இயக்க வேண்டும்.

குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து ஆடிப்போன புதுக்கோட்டை மக்கள்... உள்ளே இருந்தது யார் தெரியுமா?

ஆனால் 10 வயது சிறுவர்கள் கூட கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவதை காண முடிகிறது. உரிய வயதை எட்டும் முன்பே சிறுவர்களை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும் சமீப காலமாக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து ஆடிப்போன புதுக்கோட்டை மக்கள்... உள்ளே இருந்தது யார் தெரியுமா?

சில சமயங்களில் பெற்றோர்களுக்கு சிறை தண்டனையும் கூட வழங்கப்படுகிறது. ஆனால் காவல் துறை அதிகாரிகள் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் கூட, சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதில் உள்ள ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு இன்னும் அனைவரையும் சென்று சேரவில்லை. புதுக்கோட்டையில் சமீபத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் அதற்கு ஒரு உதாரணம்.

குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து ஆடிப்போன புதுக்கோட்டை மக்கள்... உள்ளே இருந்தது யார் தெரியுமா?

புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள வார்டுகளில் குப்பைகளை சேகரிக்கும் பணியில், மூன்று சக்கர பேட்டரி பேட்டரி வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. தினமும் ஒவ்வொரு வார்டாக செல்லும் துப்புரவு பணியாளர்கள், இந்த வாகனங்கள் மூலம் குப்பைகளை சேகரித்து, குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர்.

குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து ஆடிப்போன புதுக்கோட்டை மக்கள்... உள்ளே இருந்தது யார் தெரியுமா?

இதன்படி குப்பைகளை சேகரிப்பதற்காக, புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்த நகராட்சி துப்புரவு பணியாளர் பீட்டர் என்பவருக்கு, மூன்று சக்கர பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. 13 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் ஒருவரை, அந்த வாகனத்தை ஓட்ட பீட்டர் அனுமதித்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து ஆடிப்போன புதுக்கோட்டை மக்கள்... உள்ளே இருந்தது யார் தெரியுமா?

இந்த சிறுவன், பீட்டரின் உறவினர் ஆவார். தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து இந்த சிறுவன் மூன்று சக்கர பேட்டரி வாகனத்தை ஓட்டி சென்றுள்ளார். அவர் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் இயக்கியதாகவும் கூறப்படுகிறது. துப்புரவு பணியாளர்களிடம் வழங்கப்பட்டுள்ள மூன்று சக்கர பேட்டரி வாகனங்களை, அவர்களை தவிர வேறு யாரும் பயன்படுத்த கூடாது என நகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து ஆடிப்போன புதுக்கோட்டை மக்கள்... உள்ளே இருந்தது யார் தெரியுமா?

அப்படி இருக்கும்போது 13 வயது மட்டுமே ஆன சிறுவன், தனது நண்பர்களுடன் அந்த வாகனத்தை ஓட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாக்கு பைகளை வாங்குவதற்காக பீட்டர் இந்த வாகனத்தில் சிறுவனை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் குப்பை அள்ளும் வாகனத்தை சிறுவன் இயக்கியதால், குப்பை சேகரிக்கும் பணியில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனரா? என மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து ஆடிப்போன புதுக்கோட்டை மக்கள்... உள்ளே இருந்தது யார் தெரியுமா?

ஆனால் துப்புரவு பணிக்கு செல்ல மாட்டேன் என அந்த சிறுவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது. சிறுவர்கள் வாகனங்களை இயக்குவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை வண்டி ஓட்டி வந்தவரை பார்த்து ஆடிப்போன புதுக்கோட்டை மக்கள்... உள்ளே இருந்தது யார் தெரியுமா?

சிறுவர்களுக்கு வாகனங்களை இயக்குவதில் போதிய அனுபவம் இருக்காது. மேலும் போக்குவரத்து விதிகளை அவர்கள் அறிந்து வைப்பதற்கான மற்றும் பின்பற்றுவதற்கான வாய்ப்புகளும் மிக மிக குறைவு. வயது காரணமாக அவர்கள் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதற்கான வாய்ப்புகளோ அதிகம். இவை விபத்துக்களுக்கு வழிவகுக்கலாம் என்பதால், சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Nadu: 13 Year Old Boy Driving Electric Three Wheeler. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X