மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...

மிகப்பெரிய தொகையை காவல் துறையினர் அபராதமாக விதித்துள்ள சூழலில், அதற்கான காரணத்தை கேட்டு ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் ஆடிப்போயுள்ளார்.

மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். சில சமயங்களில் கைககளில் எழுதி ரசீது கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாக வைத்து இ-சலான் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த இரண்டிலுமே காவல் துறையினர் சில சமயங்களில் குளறுபடிகளை செய்து விடுகின்றனர்.

மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...

அதாவது கார் ஓட்டும்போது தலை கவசம் அணியவில்லை, இரு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியவில்லை என காரணங்களை தவறாக குறிப்பிட்டு அபராத ரசீதுகளையும், இ-சலான்களையும் வழங்குகின்றனர். கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பல முறை நிகழ்ந்துள்ள சூழலில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தற்போது ஒரு குளறுபடி நிகழ்ந்துள்ளது.

மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செல்வாகரன். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு, செல்வாகரனின் செல்போனுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக செல்வாகரனுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...

அதாவது இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் சென்றது, அதிவேகமாக பயணித்தது மற்றும் முறையான ஆவணங்கள் இன்றி பயணம் செய்தது ஆகிய காரணங்களுக்காக 1,600 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதில், குளறுபடி என்னவெனில் இந்த போக்குவரத்து விதிமுறை மீறல்களில் காவல் துறையினர் குறிப்பிட்டிருந்தது செல்வாகரனின் ஆட்டோ பதிவு எண் ஆகும்.

மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...

குலசேகரம் காவல் துறையினர்தான் இந்த குளறுபடியை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக செல்வாகரன் கூறுகையில், ''ஊரடங்கு காரணமாக எனது ஆட்டோ நீண்ட காலமாக வீட்டில்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்படி இருக்கும் போது நான் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலசேகரம் பகுதிக்கு நான் சென்றதாக கூறி எனக்கு அபராதம் விதித்துள்ளனர்.

மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...

ஊரடங்கு காரணமாக நான் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகிறேன். இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் எனக்கு விதிக்கப்பட்டிருப்பது என்னை பொறுத்தவரை பெரிய அபராத தொகை ஆகும். எனவே காவல் துறையினர் இந்த குளறுபடியை நிவர்த்தி செய்ய வேண்டும்'' என்றார். உண்மையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் தற்போது வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...

ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக ஆட்டோக்களை மீண்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டு விட்டாலும் கூட, கொரோனா அச்சம் காரணமாக ஆட்டோக்களில் பயணம் செய்வதற்கு பொதுமக்கள் தயங்குகின்றனர். அதற்கு பதில் சொந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்த போலீஸ்... காரணத்தை கேட்டு ஆடிப்போன ஆட்டோ டிரைவர்...

எனவே ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போதிய அளவு சவாரியும், வருமானமும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில், இந்த ஆட்டோ ஓட்டுனருக்கு காவல் துறையினர் குளறுபடியாக அபராதம் விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்வாகரனுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரத்து செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Nadu: Auto Rickshaw Driver Fined For Not Wearing Helmet - Details. Read in Tamil
Story first published: Wednesday, September 23, 2020, 20:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X