நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்! விஷயத்தை கேள்விப்பட்டு புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

நாமக்கல் உணவக உரிமையாளர் செய்த சபதத்திற்காக, காரைக்குடி மக்கள் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

ரொம்ப பெரிய மனசு... நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்... புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தற்போது வாகன பயன்பாடு குறைந்துள்ளது. ஒரு சிலர் பல மாதங்களாக வாகனங்களை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். இப்படி நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் வாகனங்களில், கூடு கட்டி வசிப்பதை பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன.

ரொம்ப பெரிய மனசு... நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்... புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

இதன்படி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் ஸ்கூட்டரில், சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டியது. இதன் காரணமாக சுமார் 3 மாதங்களாக அவர் ஸ்கூட்டரை பயன்படுத்தாமல் இருந்து வந்தார். சிட்டுக்குருவிக்காக வழக்கறிஞர் ஒருவர் ஸ்கூட்டரை 3 மாதங்களாக தியாகம் செய்த தகவல், கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

ரொம்ப பெரிய மனசு... நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்... புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

இதற்கு அடுத்தபடியாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 காரிலும் சமீபத்தில் பறவை ஒன்று கூடு கட்டியது. எனவே பறவைக்கு எவ்விதமான தொந்தரவும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அந்த காரை சுற்றிலும் துபாய் பட்டத்து இளவரசர் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினார்.

ரொம்ப பெரிய மனசு... நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்... புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

மேலும் அந்த காருக்கு அருகே யாரும் செல்லக்கூடாது என அதிரடியாக உத்தரவும் பிறப்பித்தார். இதேபோல் தமிழகத்தில் மீண்டும் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. கரிச்சான் குருவி அடைகாப்பதற்காக உணவக உரிமையாளர் ஒருவர் தனது ஸ்கூட்டரை தியாகம் செய்துள்ளார். காரைக்குடியில் நடைபெற்றுள்ள இச்சம்பவமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரொம்ப பெரிய மனசு... நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்... புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கோபால் என்பவரின் ஸ்கூட்டரில்தான் கரிச்சான் குருவி கூடு கட்டியுள்ளது. 37 வயதாகும் இவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றாலும், காரைக்குடியில் உணவகம் ஒன்றை திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த உணவகத்தை நண்பர்களுடன் சேர்ந்து திறக்க கோபால் முடிவு செய்துள்ளார்.

ரொம்ப பெரிய மனசு... நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்... புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

இதனால் காரைக்குடி ராம் நகர் அருகே இருக்கும் உதயம் நகர் என்னும் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளார். ஊரடங்கு காலத்தில் வாகனங்களை இயக்குவதற்கு மிக கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்த விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் இயக்கப்பட்ட வாகனங்களை காவல் துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

ரொம்ப பெரிய மனசு... நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்... புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

தமிழகத்தில் மட்டும் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். காவல் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையாலும், கொரோனா வைரஸ் அச்சத்தாலும் வாகன பயன்பாடு முற்றிலுமாக குறைந்து போயிருந்தது. இதன்படி கோபாலும் தன்னுடைய ஸ்கூட்டரை அதிகம் பயன்படுத்தவில்லை.

ரொம்ப பெரிய மனசு... நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்... புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தனது ஸ்கூட்டரை பயன்படுத்துவது கோபாலின் வழக்கம் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் அதிகம் பயன்படுத்தப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அதன் முன் பகுதியில் கரிச்சான் குருவி கூடு கட்டியது. இதை பார்த்த கோபாலுக்கு கரிச்சான் குருவியின் கூட்டை கலைப்பதற்கு மனம் வரவில்லை. எனவே அதனை அப்படியே விட்டு விட்டார்.

ரொம்ப பெரிய மனசு... நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்... புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

மேலும் தனது ஸ்கூட்டரில் கரிச்சான் குருவி கட்டிய கூட்டின் மேற்புறத்தில் துணி ஒன்றையும் அவர் கட்டினார். மற்ற பறவைகளால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் அவர் இதனை செய்துள்ளார். இதுதவிர தினமும் குருவிக்கு தண்ணீரும் வைத்து வருகிறார். இதற்கு இடையே அந்த குருவி மூன்று முட்டைகளை இட்டு அடை காத்து வந்தது.

ரொம்ப பெரிய மனசு... நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்... புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் மூன்று முட்டைகளில் இருந்தும் கரிச்சான் குருவி குஞ்சுகளை பொறித்தது. குருவி கூடு கட்டிய காரணத்தால் கடந்த ஒன்றரை மாதமாக கோபால் தனது ஸ்கூட்டரை பயன்படுத்தாமல் இருந்து வருகிறார். கடைகளுக்கு செல்வது உள்ளிட்ட பணிகளுக்கு அவர் நடந்து செல்வதை பழக்கமாக்கி கொண்டுள்ளார்.

ரொம்ப பெரிய மனசு... நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்... புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

இதை கேள்விப்பட்ட காரைக்குடி பகுதி மக்கள் கோபாலை மனதார பாராட்டி வருகின்றனர். குருவி குஞ்சுகள் சிறகுகள் முளைத்து பறக்கும் வரை ஸ்கூட்டரை எடுக்கப்போவதில்லை என கோபால் சபதம் ஏற்றுள்ளார். அதன்பிறகுதான் அவர் ஸ்கூட்டரை எடுக்க திட்டமிட்டுள்ளார். நம்மால் இன்றைய சூழலில் வாகனங்கள் இல்லாமல் நிச்சயம் இருக்கவே முடியாது.

ரொம்ப பெரிய மனசு... நாமக்கல் ஹோட்டல் கடைக்காரர் செய்த சபதம்... புகழ்ந்து தள்ளும் காரைக்குடி மக்கள்

நடந்து செல்லக்கூடிய தொலைவில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கு கூட வாகனங்களை பயன்படுத்தி நாம் பழகி விட்டோம். அப்படி இருக்கையில் குருவிகளுக்காக தனது ஸ்கூட்டரை தியாகம் செய்துள்ள கோபால் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான். இந்த நிகழ்வு குறித்து இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Nadu: Bird Builds A Nest In Scooter. Read in Tamil
Story first published: Thursday, August 13, 2020, 19:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X