தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன.. டிரைவர், கண்டக்டர்களுக்கு சூப்பர் உத்தரவு.. என்ன தெரியுமா?

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன. இது தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன... இனி விபத்துக்கள் நடப்பது வெகுவாக குறையும்...

தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு தற்போது ஓரளவிற்கு பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. ஆம், தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன... இனி விபத்துக்கள் நடப்பது வெகுவாக குறையும்...

உண்மைதான். கடந்த 2018ம் ஆண்டு தமிழகத்தில் சாலை விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,216. இது கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24.4 சதவீதம் குறைவு. ஆனால் கடந்த மூன்று ஆண்டு கால அளவில், பஸ்களின் விண்டுஷீல்டில், அதாவது கண்ணாடியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களால் நடைபெறும் விபத்துக்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன... இனி விபத்துக்கள் நடப்பது வெகுவாக குறையும்...

பெருநகர போக்குவரத்து கழகம் எனப்படும் எம்டிசியால் (MTC - Metropolitan Transport Corporation) சென்னையில் இயக்கப்பட்டு வரும் பஸ்கள் கடந்த ஆண்டு 1,066 சாலை விபத்துக்களில் சிக்கியுள்ளன. இந்த விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களில் நான்கில் ஒருவர் பாதசாரி. இதில் 69 சதவீதம் பேர் பஸ்ஸின் முன் பகுதி மோதியதால் உயிரிழந்துள்ளனர்.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன... இனி விபத்துக்கள் நடப்பது வெகுவாக குறையும்...

பஸ்களின் டிரைவர்களுக்கு பின் பகுதியை காட்டிலும் முன் பகுதியில்தான் அதிக பிளைண்ட் ஸ்பாட் (Blind Spot) உள்ளது என்பதை இவை நிரூபணம் செய்கின்றன. டிரைவர்களின் கண்களுக்கு புலப்படாத பகுதியே பிளைண்ட் ஸ்பாட் எனப்படுகிறது. சென்னை புரசைவாக்கம் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற மற்றொரு சாலை விபத்து இதை மேலும் உறுதி செய்தது.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன... இனி விபத்துக்கள் நடப்பது வெகுவாக குறையும்...

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் மீது எம்டிசி பஸ்ஸின் முன்பகுதி மோதியது. இந்த விபத்து கடந்த வாரம் நடைபெற்றிருந்தது. பஸ்ஸின் முன் பகுதியில் மூதாட்டி ஒருவர் இருப்பதை டிரைவரால் பார்க்க முடியவில்லை. இதுவே விபத்துக்கு காரணம். தற்போது இந்த பிரச்னைக்கு அதிரடியாக முடிவு கட்டப்பட்டுள்ளது.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன... இனி விபத்துக்கள் நடப்பது வெகுவாக குறையும்...

ஆம், இனி தமிழக அரசு பஸ்களின் விண்டுஷீல்டில், வாழ்க வளமுடன், முருகன் துணை, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பொதிகை தென்றல் என்பது போன்ற ஸ்டிக்கர்களை பார்க்க முடியாது. அரசு பஸ்களின் கண்ணாடியில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு போக்குவரத்து துறை அதிரடியாக தடை விதித்துள்ளது.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன... இனி விபத்துக்கள் நடப்பது வெகுவாக குறையும்...

டிரைவர்களின் பார்க்க கூடிய நிலையை (Visibility) இந்த ஸ்டிக்கர்கள் குறைத்து விடுகின்றன. இதன் காரணமாகதான் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இத்தகைய ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர். ஆனால் இனி அவர்களால் இதனை செய்ய முடியாது.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன... இனி விபத்துக்கள் நடப்பது வெகுவாக குறையும்...

இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து டெப்போக்களும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெக்னிக்கல் சூப்பர்வைசர்களுக்கும் இதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அனைத்து போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குனர்களுக்கும் ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டு விட்டது.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன... இனி விபத்துக்கள் நடப்பது வெகுவாக குறையும்...

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள் கூறுகையில், ''ஆர்டினரி, ஸ்பெஷல் அல்லது அல்ட்ரா டீலக்ஸ் என பேருந்து சேவை வகையை விளக்கும் ஸ்டிக்கர்களை மட்டுமே ஒட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் இடது புறத்தில் (Left Side) மேலாகதான் ஒட்ட வேண்டும்.

தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன... இனி விபத்துக்கள் நடப்பது வெகுவாக குறையும்...

பஸ் ஸ்டாப்களில் காத்து கொண்டிருக்கும் பயணிகள் இதை பார்த்துவிட்டு பேருந்தில் ஏறிக்கொள்ள முடியும்'' என்றனர். இந்த நடவடிக்கை மூலமாக சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைந்தால், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சிதான். இதனிடையே எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Stickers Reducing Visibility Of Drivers Banned In Tamil Nadu Government Buses. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X