புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு புரட்சிகரமான திட்டம் ஒன்றை கொண்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மக்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கியுள்ளனர்.

புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா என பெரு நகரங்களில் பிரச்னையின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெரு நகரங்கள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் பிரச்னை பூதாகரமாகி வருகிறது.

புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப சாலைகளை விரிவாக்கம் செய்யாததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வாகனங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் அதற்கு ஏற்ப அரசாங்கம் சாலைகளை விரிவாக்கம் செய்வதில்லை. போதாக்குறைக்கு சாலைகள் ஆக்கிரமிப்பும் செய்யப்படுகின்றன.

புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

பெரு நகரங்களை எடுத்து கொண்டால், ஒரு சில கிலோ மீட்டர்கள் சென்று வரவே பல மணி நேரம் ஆகிறது. இதனால் சொந்த வாகனங்களில் பயணம் செய்பவர்களும், பஸ், ஆட்டோ போன்ற பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்பவர்களும் களைப்படைந்து விடுகின்றனர். இந்த பிரச்னைக்கு அரசு தீர்வு காணாததால் அவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும் நிலவுகிறது.

புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

இந்த சூழலில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண பிஆர்டிஎஸ் (BRTS - Bus Rapid Transit System) திட்டத்தை தமிழக அரசு தற்போது கையில் எடுத்துள்ளது. இதனை தமிழில் துரித பேருந்து சேவை திட்டம் என சொல்லலாம். துரித பேருந்து சேவை திட்டம் எவ்வாறு செயல்படும்? என்பது உங்களுக்கு தெரியுமா?

புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

தற்போது சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிலவ பஸ்களும் ஒரு முக்கியமான காரணம். அதிகப்படியான இடத்தை பஸ்கள்தான் அடைத்து கொள்கின்றன. ஆனால் துரித பேருந்து சேவை திட்டத்தின்படி, தற்போது உள்ள சாலைகளின் மைய பகுதியில் பஸ்களுக்கு என தனியாக பாதை அமைக்கப்படும். இதில், பஸ்கள் மட்டுமே சென்று வர முடியும்.

புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

இந்த பாதைக்கு இருபுறமும் மற்ற வாகனங்கள் வழக்கம் போல சென்று வரலாம். கிட்டத்தட்ட மெட்ரோ ரயில் திட்டம் போலவே பிஆர்டிஎஸ் திட்டமும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். அத்துடன் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் நெரிசலில் சிக்கி கொள்ளாமல் விரைவாக சென்று வரலாம்.

புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

பிஆர்டிஎஸ் திட்டத்தின்படி, தனிப்பாதை அமைக்கப்பட்டு அதில் பேருந்துகள் இயக்கப்படும். இதனால் பயண நேரம் 30 முதல் 40 சதவீதம் வரை குறையும். தற்போது உள்ள சாலைகளிலேயே பேருந்துகளுக்கு என தனி பாதை ஏற்படுத்தப்படுவதால், கூடுதலாக நிலங்களை கையகப்படுத்த வேண்டிய தேவையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

எனவே பிஆர்டிஎஸ் திட்டத்தை ஓரளவிற்கு குறைவான செலவில் செயல்படுத்த முடியும். மெட்ரோ, மோனோ ரயில் திட்டங்களை காட்டிலும் துரித பேருந்து சேவை திட்டத்திற்கான செலவு மிக குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழகத்தில் பிஆர்டிஎஸ் திட்டம் பற்றிய பேச்சு அடிபடுவது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

தமிழக தலைநகர் சென்னையில் துரித பேருந்து சேவை திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அப்போது பல்வேறு காரணங்களால் தமிழக அரசு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டது. இடைப்பட்ட ஆண்டுகளில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

எனவே சென்னை நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்கவும், வெகு விரைவான பயணத்திற்கு உதவும் வகையிலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு துரித பேருந்து சேவை திட்டத்தை தற்போது மீண்டும் தூசி தட்டி எடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

சென்னை நகரில் துரித பேருந்து சேவை திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டங்களை தமிழக அரசு தற்போது நடத்தியுள்ளது. முதல் கருத்து கேட்பு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி அரும்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் பிஆர்டிஎஸ் திட்டத்திற்கு அமோக ஆதரவை வழங்கினர்.

புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

துரித பேருந்து சேவை திட்டம் சென்னை மாநகரில் முதற்கட்டமாக ஏழு வழித்தடங்களில் செயல்பாட்டிற்கு வருகிறது. அந்த 7 வழித்தடங்களின் பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.

  • கோயம்பேடு - பூந்தமல்லி
    • கோயம்பேடு - அம்பத்தூர்
      • கோயம்பேடு - மாதவரம்
        • கோயம்பேடு - சைதாப்பேட்டை
          • சைதாப்பேட்டை - மகேந்திரா சிட்டி
            • சைதாப்பேட்டை - சிறுசேரி
              • குரோம்பேட்டை - துரைப்பாக்கம்
              • புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

                மேற்கண்ட ஏழு வழித்தடங்களில் மொத்தம் 113 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு பிஆர்டிஎஸ் திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதன்மூலமாக மேற்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். அத்துடன் பஸ்களில் பொதுமக்கள் விரைவாகவும் சென்று வர முடியும். எனவேதான் மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

                புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

                பிஆர்டிஎஸ் திட்டத்தின்படி பேருந்துகளுக்காக ஏற்படுத்தப்படவுள்ள தனிப்பாதையில் ஆம்புலன்ஸ்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களை மட்டுமே விரைவு பாதையில் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

                புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

                ஆனால் ஏசி வசதி கொண்ட பஸ்களில் அனைத்து தரப்பு பயணிகளும் பயணம் செய்ய முடியாது என்பதால், கருத்து கேட்பு கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண பேருந்துகளும் இயக்கப்படலாம்.

                புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

                அதேபோல் கட்டணம் அதிகமாக இருக்க கூடாது எனவும் கருத்து கேட்பு கூட்டத்தின்போது பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன்பேரில் பேருந்து கட்டணம் அதிகமாக நிர்ணயம் செய்யப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே குறைவான கட்டணத்தில் பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

                புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

                பிஆர்டிஎஸ் திட்டத்திற்கு பெரும் வரவேற்பை வழங்கியுள்ளபோதிலும் சில முக்கியமான கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளனர். அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.

                • காலதாமதம் செய்யாமல் விரைவாக செயல்படுத்த வேண்டும்.
                  • சாதக, பாதகங்களை விரிவாக ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.
                    • பேருந்து கட்டணம் அதிகமாக இருக்க கூடாது.
                      • இன்னும் அதிகமான வழித்தடங்களில் செயல்படுத்த வேண்டும்.
                      • புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

                        மேற்கண்ட கோரிக்கைகள்தான் மக்கள் மத்தியில் பிரதானமானதாக உள்ளன. ஆனால் பிஆர்டிஎஸ் திட்டம் இந்தியாவிற்கு புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு சில நகரங்களில் பிஆர்டிஎஸ் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது சென்னைக்கும் இந்த திட்டம் வெகு விரைவில் வரவுள்ளது. பிஆர்டிஎஸ் திட்டம் தொடர்பான வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

                        போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைப்பதிலும், பொதுமக்களின் பயணங்களை விரைவாக்குவதிலும் பிஆர்டிஎஸ் திட்டம் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஆர்டிஎஸ் திட்டத்தின் சாதக, பாதங்களையும், இந்த திட்டம் தொடர்பான உங்கள் கருத்துக்களையும் கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Nadu Government Plans To Introduce Bus Rapid Transit System In Chennai. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X