1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி

முதியவர் ஒருவர் மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்துள்ளார். இதன் பின்னணி மனதை உருக்கும் வகையில் உள்ளது.

1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி

கொரோனா வைரஸ் நமது வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. ஊரடங்கு காரணமாக வெளி இடங்களுக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலுக்கு வந்தது முதல் தற்போது வரை அந்த நிலைதான் காணப்படுகிறது.

1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி

மார்ச் 24ம் தேதி முதல் இந்தியாவில் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி, ரயில், விமானம் என பொது போக்குவரத்து வாகனங்கள் அனைத்திற்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. அத்துடன் தனியார் கார், இரு சக்கர வாகனங்களை இயக்குவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இதனை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன.

1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி

தற்போது தனியார் வாகனங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகள் ஓரளவிற்கு தளர்த்தப்பட்டு விட்டன. அத்துடன் பொது போக்குவரத்து வாகனங்களும் ஓரளவிற்கு இயங்க தொடங்கி விட்டன. ஆனால் இன்னும் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை. தமிழகத்தை பொறுத்தவரை மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன.

1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி

அதேபோல் மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்வதிலும் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. இதனால் அவசர தேவைகளுக்கு கூட பயணம் செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். போக்குவரத்து முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாத காரணத்தால், ஒரு சிலர் கார், பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் நெடுந்தொலைவு பயணம் செய்து வருகின்றனர்.

1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி

இந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் மும்பையில் இருந்து நடந்தே தமிழகத்திற்கு வந்துள்ளார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வளத்தூர் பகுதியை சேர்ந்த பரந்தாமன் என்பவர்தான் மும்பையில் இருந்து தமிழகத்திற்கு பொடி நடையாக நடந்தே வந்துள்ளார்.

1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி

47 வயதாகும் இவர், மும்பையில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். பரந்தாமனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து மருந்துகளை வாங்கி செல்வதை பரந்தாமன் வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக அவரால் இம்முறை சென்னைக்கு வர முடியவில்லை.

1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி

பேருந்து, ரயில்கள் இயங்காததால் எப்படி சென்னைக்கு வருவது? என்பது புரியாமல், பரந்தாமன் தவித்து வந்தார். மருந்துகள் இல்லாமல் தவித்து வந்த அதே நேரத்தில், பரந்தாமனுக்கு வேலையும் பறிபோனதாக கூறப்படுகிறது. எனவே சென்னைக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. இதனால் சென்னைக்கு நடந்தே வந்து விடுவது என அவர் முடிவு செய்தார்.

1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி

மும்பையில் இருந்து சென்னை சுமார் 1,350 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வளவு தூரம் நடந்து வருவது என்பது மிகவும் சிரமமான காரியம். எனினும் பரந்தாமன் துணிச்சலாக பயணத்தை தொடங்கி விட்டார். 115 நாட்கள் பயணத்திற்கு பின் சமீபத்தில் கும்மிடிப்பூண்டி நகரை பரந்தாமன் வந்தடைந்தார்.

1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் பரந்தாமன் ஆதரவு இல்லாமல் தவித்து கொண்டிருப்பதை, காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவர் பார்த்துள்ளார். அவருக்கு உதவி செய்ய நினைத்த காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், 108 ஆம்புலன்ஸை அங்கு வரவழைத்தார். பின்னர் அதில் ஏற்றி பரந்தாமனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

1,350 கிலோ மீட்டர்... மும்பையில் இருந்து சென்னைக்கு நடந்தே வந்த முதியவர்... மனதை உருக்கும் பின்னணி

சுமார் 1,350 கிலோ மீட்டர்கள் நடக்க வேண்டும் என்றால், உடல் வலிமையுடன், மன வலிமையும் வேண்டும். இரண்டையும் ஒரு சேர பெற்றவர்களால் மட்டுமே இதுபோன்ற சவால் நிறைந்த பயணங்களை செய்ய முடியும். அப்படிப்பட்ட சவால் நிறைந்த பயணத்தை செய்த பரந்தாமனின் கதை மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Nadu Man Walks 1,350 KM To Reach Chennai From Mumbai. Read in Tamil
Story first published: Saturday, August 15, 2020, 21:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X