சூப்பரான காரியத்தை செய்தார்... தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு! எதற்காக தெரியுமா?

தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரான காரியத்தை செய்தார்... தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு! எதற்காக தெரியுமா?

இந்தியாவில் சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோரின் மரணத்திற்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததே முக்கியமான காரணமாக உள்ளது. விபத்துக்களில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்தால், அவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சூப்பரான காரியத்தை செய்தார்... தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு! எதற்காக தெரியுமா?

ஆனால் இந்தியாவில் இதனை செய்ய பெரும்பாலும் பலர் முன்வருவது கிடையாது. சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவினால், கோர்ட், கேஸ் என அலைய வேண்டியது வருமே என்ற பயம்தான் இதற்கு பிரதான காரணமாக உள்ளது. ஆனால் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தயங்காமல் உதவி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பரான காரியத்தை செய்தார்... தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு! எதற்காக தெரியுமா?

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்பவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்த கூடாது என போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருந்தபோதும் கூட பெரும்பாலானோருக்கு இன்னமும் தயக்கம் இருந்து கொண்டேதான் உள்ளது. ஆனால் மறுபக்கம் அமைச்சர், முதல்வர்கள் போன்றவர்கள் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

சூப்பரான காரியத்தை செய்தார்... தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு! எதற்காக தெரியுமா?

இதன் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு முன் உதாரணமாகவும் அவர்கள் மாறுகின்றனர். இந்த சூழலில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ததன் மூலம் தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

சூப்பரான காரியத்தை செய்தார்... தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு! எதற்காக தெரியுமா?

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நேற்று (அக்டோபர் 7) சாலை விபத்து ஒன்று நடைபெற்றது. ஆனந்த கிருஷ்ணன் என்பவர் தனது மனைவி பேபி மற்றும் மகளுடன் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து அரங்கேறியது. இவர்கள் மூவரும் ஒத்தக்குதிரை-தாசம்பாளையம் பகுதிக்கு இடையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த வாகனம் ஒன்று டூவீலர் மீது மோதியது.

சூப்பரான காரியத்தை செய்தார்... தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு! எதற்காக தெரியுமா?

அந்த வாகனத்தின் அடையாளம் தெரியவரவில்லை. ஆனந்த கிருஷ்ணன் குடும்பம் பயணம் செய்த டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதன் காரணமாக மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், அமைச்சர் செங்கோட்டையன் தனது காரில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தார். விபத்தில் சிக்கியவர்களை பார்த்த உடன் காரை நிறுத்தும்படி தனது டிரைவருக்கு அவர் உத்தரவிட்டார்.

சூப்பரான காரியத்தை செய்தார்... தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு! எதற்காக தெரியுமா?

பின்னர் காரில் இருந்து இறங்கிய அமைச்சர் செங்கோட்டையன், விபத்தில் சிக்கிய மூன்று பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்தார். அத்துடன் அவர்கள் மூவரையும் தனது பாதுகாப்பு வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் மூவரும் கோபி அரசு மருத்துவமனைக்கு கூட்டி செல்லப்பட்டனர்.

சூப்பரான காரியத்தை செய்தார்... தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு! எதற்காக தெரியுமா?

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கோபி அரசு மருத்துவமனையின் மருத்துவர்களையும் அமைச்சர் செங்கோட்டையன் தொடர்பு கொண்டார். அவர்கள் மூவருக்கும் சிறப்பான சிகிச்சையை வழங்கும்படி அப்போது அவர் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சூப்பரான காரியத்தை செய்தார்... தமிழக அமைச்சர் செங்கோட்டையனுக்கு குவியும் பாராட்டு! எதற்காக தெரியுமா?

சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு உதவி செய்ததன் காரணமாக அமைச்சர் செங்கோட்டையனுக்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதேபோல் நீங்களும் சாலை விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு தாராளமாக உதவி செய்யலாம். இத்தகைய நிகழ்வுகளை முன்னுதாரணமாக கொண்டு ஒரு உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த உதவிகளை இனி தயங்காமல் செய்யுங்கள்.

Source: Hindu Tamil

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Nadu School Education Minister Sengottaiyan Helps Road Accident Victims. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X