தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

கொரோனா வைரஸ் ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதில், ஒரு சிலர் வீணாக பொழுதை கழிக்காமல், நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டு வருகின்றனர்.

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

13 வயது மட்டுமே ஆன 8ம் வகுப்பு மாணவன் சிவசங்கர் இதற்கு ஒரு உதாரணம். கொரோனா ஊரடங்கால் கிடைத்த நேரத்தை பயன்படுத்தி, பேட்டரியில் இயங்கும் சைக்கிளை அவர் தயாரித்துள்ளார். பெற்றோர் உறுதுணையுடன் பேட்டரி சைக்கிளை தயாரித்த மாணவன் சிவசங்கருக்கு, சமூக வலை தளங்களில் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் ராமசாமிபட்டி என்னும் சிறிய கிராமத்தை சேர்ந்தவர்கள் பாண்டி-ஸ்ரீதேவி. இவர்களது மகன்தான் சிவசங்கர். ரெட்டியபட்டி என்னும் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில், சிவசங்கர் படித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே அறிவியல் கண்டுபிடிப்புகள் மீது சிவசங்கருக்கு ஆர்வம் அதிகம்.

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

இதன் காரணமாக அறிவியல் கண்காட்சிகளில் முதல் ஆளாக கலந்து கொள்வதை சிவசங்கர் வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது பேட்டரியில் இயங்கும் சைக்கிளை தயாரித்துள்ள நிலையில், அதற்கு முன்னதாக தண்ணீரை வீண் செய்யாமல் பேட்டரியில் இயங்கும் சிறிய நீரூற்று உள்பட பல்வேறு கண்டுபிடிப்புகளை சிவசங்கர் தயாரித்துள்ளார்.

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

பள்ளியில் நடைபெற்ற அறிவியில் கண்காட்சியில், அவற்றை காட்சிப்படுத்தி அதற்காக மாவட்ட அளவிலான பரிசுகளையும் அவர் வென்றுள்ளார். இந்த வரிசையில் சூரிய சக்தியில் இயங்கும் கார் ஒன்றை தயாரிக்க சிவசங்கர் முடிவு செய்தார். ஊரடங்கில் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்த போது, அவருக்கு இந்த யோசனை வந்தது.

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

இதனை உடனடியாக தனது பெற்றோரிடமும் சிவசங்கர் தெரிவித்தார். ஆனால் இதற்கு அதிகம் செலவாகும் என்பதால், சிவசங்கரின் பெற்றோர் தயங்கியுள்ளனர். இருந்தாலும் சிவசங்கரை உற்சாகப்படுத்துவதற்கு அவர்கள் தயங்கவில்லை. மாணவன் சிவசங்கர் சைக்கிள் மூலமாகதான் பள்ளிக்கு சென்று வந்து கொண்டுள்ளார்.

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

எனவே அந்த சைக்கிளை சூரிய சக்தி அல்லது பேட்டரியில் ஓடும்படி வடிவமைக்கலாம் என்று சிவசங்கருக்கு அவர்கள் யோசனை தெரிவித்தனர். இதனால் உற்சாகமான சிவசங்கர் உடனடியாக வேலையை தொடங்கி விட்டார். முதலில் இதற்கு என்னென்ன பொருட்கள் எல்லாம் தேவை? என பட்டியலிட்டு கொண்டு, அவற்றை வாங்கி கொண்டார்.

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

இதன்படி சைக்கிளில் பொருத்துவதற்கு 4,000 ரூபாய் செலவில், இரண்டு பேட்டரிகளை வாங்கினார். மேலும் ஆக்ஸெலரேட்டர் உள்பட மற்ற உதிரிபாங்களை ஆன்லைன் மூலம் வாங்கி கொண்டார். இதற்கு சுமார் 7,200 ரூபாய் செலவானது. அத்துடன் 1,000 ரூபாய் மதிப்பிலான ஒரு சார்ஜரையும் மாணவன் சிவசங்கர் வாங்கினார்.

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

இவற்றின் மூலமாக தனது சைக்கிளை பேட்டரியில் இயங்கும் வகையில் அவர் மாற்றியுள்ளார். பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் ஏற்றுவதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகும். முழுமையாக சார்ஜ் நிரப்பினால், 25 கிலோ மீட்டர் தூரம் செல்ல முடியும். இந்த சைக்கிளில் தனது தங்கை பாண்டீஸ்வரியுடன் பள்ளிக்கு சென்று வருவதற்கு சிவசங்கர் திட்டமிட்டுள்ளார்.

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

சிவசங்கரின் வீட்டில் இருந்து அவர் படிக்கும் பள்ளி சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே பேட்டரி மூலம் எளிதாக சென்று வரலாம். இந்த தயாரிப்பிற்காக மாணவன் சிவசங்கருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட பிரச்னைகளால் இந்தியாவில் தற்போது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் மாணவன் சிவசங்கர் பேட்டரியில் இயங்கும் சைக்கிளை தயாரித்துள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய தயாரிப்புதான்.

தமிழக மக்களின் பாராட்டுக்களை குவிக்கும் 13 வயது சிறுவன்... இவ்ளோ சின்ன வயசுல என்ன செய்தார் தெரியுமா?

மாணவன் சிவசங்கர் போலவே இன்னும் பலர், இதுபோன்ற கண்டுபிடிப்புகளை தயாரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது பெட்ரோல், டீசலில் இயங்கும் கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை பேட்டரியில் இயங்கும் வகையில் அவர்கள் மாற்றியமைத்துள்ளனர். வருங்காலங்களில் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் பலவற்றை நாம் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Nadu School Student Invents Battery-operated Cycle. Read in Tamil
Story first published: Friday, September 11, 2020, 16:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X