Just In
- 25 min ago
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- 3 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 10 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 11 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
Don't Miss!
- Sports
"கப்பாவில்" ஆஸி.யை கதற வைக்கும் சுப்மான் "கில்லி".. தொடரும் ஆதிக்கம்.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்!
- News
காங்கிரஸுக்கு 10 சீட்தானாம்.. கழற்றிவிட்டே தீருவது என முடிவோடுதான் இருக்கிறதா திமுக?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உயிருக்கு போராடிய இந்து... முஸ்லீம் இளைஞர் செய்த காரியத்தால் மக்கள் நெகிழ்ச்சி... இதுதான் தமிழ்நாடு
இந்து நோயாளியின் உயிரை காப்பாற்றிய முஸ்லீம் இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை போல், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் கடவுளுக்கு இணையானவர்கள். இந்திய சாலைகளில் சாதாரணமாக ஒரு வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவதே மிகவும் கடினம். ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மற்றும் மிகவும் குறுகலான சாலைகளில் கூட ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அதிவேகமாகவும், பாதுகாப்பாகவும் சென்று நோயாளிகளின் உயிரை காப்பாற்றுகின்றனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மிக துரிதமாக செயல்பட்டு நோயாளிகளை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து, அவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவங்கள் கடந்த காலங்களில் பல முறை நடைபெற்றுள்ளன. இந்த வகையில் தமிழகத்தில் தற்போது ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதற்காக அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வாழ்க்கை எனும் கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவருக்கு 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டன. எனவே திருவாரூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அவர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் வினோத்தின் உடல் நிலை சமீபத்தில் மோசமடைந்ததாக தெரிகிறது. இதனால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்ல வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். திருவாரூரில் இருந்து புதுச்சேரி சுமார் 150 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. சாதாரணமாக சென்றால், சுமார் 4 மணி நேரம் ஆகும்.

ஆனால் 3 மணி நேரத்திற்கு உள்ளாக அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சவாலான பணியை ஏற்றுக்கொள்வதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அல்மூமின் முன்வந்தார். வேகமாகவும், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் ஆம்புலன்ஸை ஓட்டி செல்ல வேண்டும் என்ற நிலையில், அந்த பணியை அல்மூமின் கச்சிதமாக செய்து முடித்தார்.

திருவாரூரில் இருந்து புறப்பட்ட அடுத்த இரண்டே மணி நேரத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை ஆம்புலன்ஸ் சென்றடைந்தது. தமுமுக (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்) ஆம்புலன்ஸ் மூலமாக வினோத் பத்திரமாக அழைத்து செல்லப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதற்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அல்மூமினுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நாம் வாகனங்களில் சென்று கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ்கள் மிக அவசரமாக வந்தால், அதற்கு நாம் உரிய முறையில் வழிவிடுவது அவசியம். ஆம்புலன்ஸ் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைத்தால், அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். அதற்காகதான் ஓட்டுனர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து ஆம்புலன்களை அதிவேகத்தில் ஓட்டி செல்கின்றனர். அவர்கள் வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காகவே, போக்குவரத்து சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்தாலும் நிற்க தேவையில்லை என்பது போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதை நாமும் புரிந்து கொண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியம். பொறுப்பு உள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமைகளில் இதுவும் ஒன்றாகும். ஆனால் ஒரு சிலர் ஆம்புலன்ஸ்களுக்கு வழி விடுவது இல்லை. அப்படி நடந்து கொண்ட வாகன ஓட்டிகளின் காணொளிகள் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன.

ஆம்புலன்ஸ் சுமந்து செல்வது நமக்கு விருப்பமான நபராக கூட இருக்கலாம் என்பதை இப்படிப்பட்ட நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள். திருவாரூர் நிகழ்வு தொடர்பாக நியூஸ்7 செய்தி வெளியிட்டுள்ளது.