தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு

தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் வெகு விரைவில் நிறைவேறவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயக்கப்படும் வாகனங்களால் சுற்றுச்சூழல் வேகமாக மாசடைந்து வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசும் இதற்கான முயற்சிகளை மிக தீவிரமாக எடுத்து வருகிறது. எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதன் மூலம் கார்பன் உமிழ்வை குறைப்பதற்காக, சி40 முகமையுடன் தமிழக அரசு கடந்தாண்டு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு

இந்த சூழலில் சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று (ஜூன் 10) நடைபெற்றது. இதில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு

அப்போது 2,000 எலெக்ட்ரிக் பஸ்கள் மற்றும் 12,000 பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையான பஸ்களை இயக்குவதற்கு தமிழக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு

இதில், முதற்கட்டமாக 500 எலெக்ட்ரிக் பஸ்களை சென்னை, மதுரை மற்றும் கோவை ஆகிய நகரங்களில், இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே தமிழகத்தில் வெகு விரைவில் எலெக்ட்ரிக் பஸ்களை மக்கள் எதிர்பார்க்கலாம்.

தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு

முன்னதாக டூவீலர்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை தமிழகத்தில் கண்டிப்புடன் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு

இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கட்டாய ஹெல்மெட் விதியை தமிழகத்தில் ஏன் கண்டிப்புடன் அமல்படுத்தவில்லை? என்பது உள்பட தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் சரமாரியாக எழுப்பினர்.

தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு

இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர், ''ஹெல்மெட் விதிகள் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் பலரும் இதனை பின்பற்றுகின்றனர்.

தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு

ஆனால் கிராமப்புறங்களில்தான் இந்த விதியை பின்பற்றுவது குறைவாக உள்ளது. ஹெல்மெட் விதிகளை மீறிய பல லட்சக்கணக்கானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது'' என்றார். அனைத்து வாகன ஓட்டிகளையும் ஹெல்மெட் அணிய வைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு

இதன் ஒரு பகுதியாக புதிய இரு சக்கர வாகனங்களை வாங்கும் அனைவருக்கும் இரண்டு ஹெல்மெட்களை வழங்க வேண்டும் என வாகன டீலர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அடுத்து நடக்கப்போகும் ஆச்சரியம் இதுதான்... கெத்து காட்ட வேகமாக தயாராகும் எடப்பாடி அரசு

முன்னதாக பள்ளி வாகனங்கள் இயக்குவதற்கு தகுதியான நிலையில் உள்ளதா? என்பதை கண்டறியவே சென்னை அடையாறில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆய்வு நடத்தப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், ''32,576 பள்ளி வாகனங்களில், 1,009 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குறைபாடுகள் அனைத்தையும் களைந்த பின்னரே பஸ்களை இயக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Nadu To Get 2,000 Electric Buses, 12,000 BS-6 Buses: Transport Minister M.R. Vijayabhaskar. Read in Tamil
Story first published: Tuesday, June 11, 2019, 17:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X