பெட்ரோல் விலை உயர்வு.. மோடிக்கு தக்க பாடம் புகட்டிய தமிழக இளைஞர்கள்.. நாடே கொண்டாடுகிறது

கடலூர் அருகே நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கப்பட்டது.

கடலூர் அருகே நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கிண்டல் அடிக்கும் விதமாக, குறும்புக்கார நண்பர்கள் செய்த இந்த செயல், நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்த சுவாரசிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால், பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய வெகு ஜன மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. வெறுமனே கையை கட்டி கொண்டு, வேடிக்கை பார்த்து வருகிறது மத்திய அரசு.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய அரசுக்கு எதிரான அலை நாடு முழுவதும் வீச தொடங்கியுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் கிண்டலடிக்கும் மீம்ஸ்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

தற்போது விற்கும் விலைக்கு, பெட்ரோல் மற்றும் டீசலை, சாமானிய மக்களால் வாங்கவே முடியாது என்பதுதான் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டு. அது உண்மையும் கூட. இதனை மையப்படுத்திதான் சமூக வலைதளங்களில் அதிக அளவிலான மீம்ஸ்கள் உலா வருகின்றன.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

இந்த சூழலில், தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒரு படி மேலே போய் விட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வையும், மத்திய அரசையும் இதை விட வேறு யாராலும் கிண்டல் அடிக்க முடியாது. அவர்கள் செய்த அந்த ருசிகரமான சம்பவம் குறித்த சுவாரசிய தகவல்களை இனி பார்க்கலாம்.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

கடலூர் மாவட்டம் குமராட்சியில், இளஞ்செழியன்-கனிமொழி ஆகியோரின் திருமணம், நேற்று (செப்.16) நடைபெற்றது. மணமகன் இளஞ்செழியனின் நண்பர்கள் சிலர், திருமணத்திற்கு வந்திருந்தனர். அவர்களின் கையில், 5 லிட்டர் பெட்ரோல் இருந்தது.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

நேராக மேடைக்கு ஏறிய இளஞ்செழியனின் நண்பர்கள், 5 லிட்டர் பெட்ரோலையும் திருமண பரிசாக மணமக்களுக்கு வழங்கினர். மணமக்களுக்கு பெட்ரோலை திருமண பரிசாக வழங்கியவர்களில் பிரபு என்ற மாணவரும் ஒருவர். இவர் சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகிறார்.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

இதுகுறித்து பிரபு கூறுகையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வெகு வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே நான் உள்பட இளஞ்செழியனின் நண்பர்கள், மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக வழங்க முடிவு செய்தோம். பெட்ரோல் விலை உயர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் எங்கள் நோக்கம் என்றார்.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

இதில் பிரபு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் (Democratic Youth Federation of India-DYFI) உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறும்புக்கார இளைஞர்களின் குசும்பான செயல், தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

இதுகுறித்து மணமக்களின் தோழியான தீபா என்பவர் கூறுகையில், ''பெட்ரோல், டீசல் விலை உயர்வானது, சாமானிய மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை வெளிக்காட்ட விரும்பினோம். எங்களின் பரிசை மணமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்'' என்றார்.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

முன்னதாக திருமணத்திற்கு பெட்ரோல், டீசலை பரிசாக வழங்கலாம் என்பது போன்ற மீம்ஸ்கள் உலா வந்து கொண்டிருந்தன. தற்போது அது உண்மையாகியுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தை மையமாக வைத்தும், மீஸ்கள் வர தொடங்கி விட்டன. தமிழ்நாட்டுக்காரங்களுக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான்.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

சென்னையில் இன்றைய (செப்.17) நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 85.31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை 78 ரூபாய். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததே, பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

பெட்ரோல், டீசல் இன்னும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்படவில்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள், பெட்ரோல், டீசலுக்கு பல்வேறு வரிகளை விதித்து வருகின்றன. அதாவது பெட்ரோல், டீசலின் உண்மையான விலையில் பாதியை, வரிகளுக்காகவே கொடுக்க வேண்டியுள்ளது.

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோல் வழங்கிய குறும்புக்கார இளைஞர்கள்.. இது தமிழ்நாட்டு கெத்து

எனவே பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் அதற்கும் மத்திய அரசு செவி சாய்க்க மறுக்கிறது. எனவேதான் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிரான அலை, நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

Most Read Articles

பெட்ரோல் விலை உயர்வு பிரச்னைக்கு தீர்வாக கருதப்படுவது எலக்ட்ரிக் வாகனங்கள்தான். இந்த வகையில் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 450 சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட்
English summary
Tamilnadu Couples Receives Petrol as a Wedding Gift From Friends. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X