எந்த கட்டுப்பாடும் இல்ல... முழு திறனுடன் இயங்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு?..

வாகன உற்பத்தி நிறுவனங்கள் முழு திறனுடன் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

எந்த கட்டுப்பாடும் இல்ல... முழு திறனுடன் இயங்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு...

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவல் நாட்டையே உலுக்கியெடுத்துவிட்டது. குறிப்பாக, தமிழகம், மும்பை, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் இரண்டாம் அலை பரவலால் மிகக் கடுமையான சேதத்தைச் சந்தித்திருக்கின்றன. வைரஸ் பரவல் நாளுக்கு புதிய உச்சத்தை எட்டியதனால் முழு ஊரடங்கை இந்த மாநிலங்கள் அறிவித்தன.

எந்த கட்டுப்பாடும் இல்ல... முழு திறனுடன் இயங்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு...

தமிழகமும் தளர்வுகளற்ற முழு முடக்கத்தை அறிவத்தது. அத்தியாவசிய பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகளுக்குகூட மாநிலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இத்தகைய கடும் கெடுபிடி காரணமாக மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்து நிறுவனங்களும் மிகக் கடுமையாக பாதித்தன.

எந்த கட்டுப்பாடும் இல்ல... முழு திறனுடன் இயங்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு...

குறிப்பாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிகக் கடுமையான பின் விளைவுகளைச் சந்தித்தன. தமிழகத்தை மையமாகக் கொண்டு ராயல் என்பீல்டு, ரெனால்ட்-நிஸான், டைம்லர், ஹூண்டாய் மற்றும் ஃபோர்டு என பல்வேறு நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

எந்த கட்டுப்பாடும் இல்ல... முழு திறனுடன் இயங்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு...

அவை, தமிழகத்தில் நிலவிய தளர்வுகளற்ற முழு பொது முடக்கத்தின் காரணமாக கணிசமான நாட்கள் இழுத்து மூடம் நிலைக்கு தள்ளப்பட்டன. இந்த நிலையை அடுத்து சிறப்பு பெறப்பட்டு மீண்டும் நிறுவனங்கள் கணிசமான ஊழியர்களுடன் உற்பத்தி பணியைத் தொடங்கின.

எந்த கட்டுப்பாடும் இல்ல... முழு திறனுடன் இயங்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு...

இருப்பினும், முழு பணியாட்கள் பணிபுரிய அனுமதிக்காத காரணத்தினால் உற்பத்தி பணிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் முழு திறனுடன் செயல்பட தமிழக அரசு அனுமதிக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எந்த கட்டுப்பாடும் இல்ல... முழு திறனுடன் இயங்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு...

இதுகுறித்து கார்அண்ட்பைக் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டிருக்கும் செய்தியில், "தமிழகத்தின் தலைநகர் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவீத திறனில் இயங்க அரசு அனுமதித்திருப்பதாக" தகவல் வெளியிட்டுள்ளது.

எந்த கட்டுப்பாடும் இல்ல... முழு திறனுடன் இயங்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு...

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற அரசு அனுமதி வழங்கி வந்தது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சிறப்பு அனுமதியின்கீழ் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எந்த கட்டுப்பாடும் இல்ல... முழு திறனுடன் இயங்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு...

ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் 7 இருக்கைகள் வசதிக் கொண்ட அல்கஸார் எஸ்யூவி ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கான உற்பத்தி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால் ஸ்ரீபெரம்புதூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் நூறு சதவீத திறனுடன் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

எந்த கட்டுப்பாடும் இல்ல... முழு திறனுடன் இயங்கலாம்... கட்டுப்பாடுகளை தளர்த்திய தமிழக அரசு...

அதேசமயம், ஃபோர்டு நிறுவனம் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு வகுத்த கொரோனா விதிகளுக்கு உட்பட்டு இயங்கி வருவதாக தெரிவித்துள்ளது. நிஸான் நிறுவனமும் இதே பாணியில் செயல்பட்டு வருவதாக கூறியிருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனம் இதுகுறித்த கேள்விக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த நிறுவனம் சென்னையை அடுத்துள்ள கசடிமங்களம் பகுதியில் இயங்கி வருகின்றது.

Most Read Articles
English summary
TamilNadu Govt Allows Automakers To Operate 100 Percent Capacity From June 21. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X