TANGEDCO எடுத்த அதிரடி முடிவு.. இனி தமிழக வாசிகள் தயங்காம எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்.. சூப்பர் முடிவுங்க!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் (Tamil Nadu Generation and Distribution Company - TANGEDCO) மாநிலம் முழுவதும் பொது மின் வாகன சார்ஜிங் மையங்களை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

TANGEDCO எடுத்த அதிரடி முடிவு... இனி தமிழக வாசிகள் தயங்காம எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்... சூப்பர் முடிவுங்க!

மக்கள் மத்தியில் மின் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2021ம் ஆண்டில் பல மடங்கு விற்பனை வளர்ச்சியை எலெக்ட்ரிக் வாகனங்கள் பெற்றிருக்கின்றன. இந்த நிலையை உணர்ந்து மின் வாகன பயன்பாட்டாளர்களுக்கு உதவும் விதமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் (Tamil Nadu Generation and Distribution Company - TANGEDCO) மாநிலம் முழுவதும் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.

TANGEDCO எடுத்த அதிரடி முடிவு... இனி தமிழக வாசிகள் தயங்காம எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்... சூப்பர் முடிவுங்க!

மின் வாகன விற்பனை பல மடங்கு அதிகரித்துக் காணப்பட்டாலும் அது தற்போதும் மிக மிக ஆரம்ப நிலையிலேயே உள்ளது. பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களின் விற்பனையுடன் ஒப்பிடுகையில் அது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிக குறைவாக காணப்படுகின்றது. மின் வாகனங்களின் இந்த நிலைக்கு அவற்றிற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதியளவில் இல்லாததே முக்கிய காரணமாகும்.

TANGEDCO எடுத்த அதிரடி முடிவு... இனி தமிழக வாசிகள் தயங்காம எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்... சூப்பர் முடிவுங்க!

இந்த நிலையைக் களையெடுக்கவும், கணிசமான வேகத்தில் அதிகரித்து வரும் மின் வாகனங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் தமிழகம் முழுவதிலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.

TANGEDCO எடுத்த அதிரடி முடிவு... இனி தமிழக வாசிகள் தயங்காம எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்... சூப்பர் முடிவுங்க!

தற்போது மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு அருகே மட்டுமே மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் உள்ளன. இதனால், நெடுஞ்சாலைகளில், குறிப்பாக நீண்ட தூர சவாரிகள் எலெக்ட்ரிக் வாகனத்தில் மேற்கொள்ள முடியாத நிலை நிலவுகின்றது.

TANGEDCO எடுத்த அதிரடி முடிவு... இனி தமிழக வாசிகள் தயங்காம எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்... சூப்பர் முடிவுங்க!

இதற்கெல்லாம் மிக விரைவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் முடிவு கட்ட இருக்கின்றது. மேலும், பொது சார்ஜிங் மையங்களுக்கான கட்டண விகிதங்களை அதிகரிக்கவும், புதிய திட்டங்களைக் கொண்டு வர அது திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை 'தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம்' (TNERC) இருந்து பெற அது காத்துக் கொண்டிருக்கின்றது.

TANGEDCO எடுத்த அதிரடி முடிவு... இனி தமிழக வாசிகள் தயங்காம எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்... சூப்பர் முடிவுங்க!

தற்போது மெட்ரோ பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு எலெக்ட்ரிக் டூ-வீலரை சார்ஜ் செய்ய ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகின்றது. ஒரு மணி நேரம் ஓர் வழக்கமான மின்சார டூ-வீலரை சார்ஜ் செய்தால் 30 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

TANGEDCO எடுத்த அதிரடி முடிவு... இனி தமிழக வாசிகள் தயங்காம எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்... சூப்பர் முடிவுங்க!

மத்திய அரசாங்கம் ஏற்கனவே மாநில அரசுகளை மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மிக வேகமாக உருவாக்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றது. நெடுஞ்சாலையின் இரு புறத்திலும் ஒவ்வொரு 25 கிமீட்டருக்கும் ஓர் பொது சார்ஜிங் மையத்தை உருவாக்க அது கூறியிருக்கின்றது.

TANGEDCO எடுத்த அதிரடி முடிவு... இனி தமிழக வாசிகள் தயங்காம எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்... சூப்பர் முடிவுங்க!

இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியில் ஏற்கனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் களமிறங்கிவிட்டது குறிப்பிடத்தகுந்தது. மேலும், பொது சார்ஜிங் மையங்களை உருவாக்கும் இளம் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் மாநில அரசுகளுக்கு மின் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

TANGEDCO எடுத்த அதிரடி முடிவு... இனி தமிழக வாசிகள் தயங்காம எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்... சூப்பர் முடிவுங்க!

இதுமட்டுமின்றி, ஃபேம் (Faster Adoption and Manufacturing of Electric Vehicles) திட்டத்தின்கீழ் தமிழக அரசு 651 பொது சார்ஜிங் மையங்களை மாநிலத்தில் அமைக்க அனுமதி வழங்கியிருக்கின்றது. ஆனால், இதன்கீழ் ஒரு சார்ஜிங் மையத்தைகூட இதுவர தமிழக அரசு உருவாக்கவில்லை. இது மின் வாகன பிரியர்களுக்கு வேதனையளிக்கும் விஷயமாக இருக்கின்றது.

TANGEDCO எடுத்த அதிரடி முடிவு... இனி தமிழக வாசிகள் தயங்காம எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கலாம்... சூப்பர் முடிவுங்க!

ஆனால், இந்த நிலை நீண்ட நாட்களுக்கு நீடிக்கப்போவதில்லை. ஆம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக விரைவில் பொது சார்ஜிங் மையங்கள அமைக்க இருக்கின்றது. இது இன்னும் பல மடங்கு வேகத்தில் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Tangedco plans to set up more public charging stations across the state
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X